Author: Farook

Ibn-Majah-1574

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1574. மண்ணறைகளை அதிகமாக சந்திக்கச் செல்லும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி)


«لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زُوَّارَاتِ الْقُبُورِ»


Shuabul-Iman-5516

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

5516. சூடான உணவு ஆறும் வரை அதை உண்ணக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.

அறிவிப்பவர் : சுஹைப் (ரலி)


نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ أَكْلِ الطَّعَامِ الْحَارِّ، حَتَّى يَسْكُنَ


Hakim-7125

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

7125. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சூடான உணவைக் குளிர வையுங்கள். ஏனென்றால் சூடான உணவு பரகத் இல்லாத உணவாகும்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


«أَبْرِدُوا الطَّعَامَ الْحَارَّ فَإِنَّ الطَّعَامَ الْحَارَّ غَيْرُ ذِي بَرَكَةٍ»


Almujam-Assaghir-934

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

934. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உணவுத் தட்டு கொண்டுவரப்பட்டது. அதில் ஆவி வெளியேறிக்கொண்டிருந்தது. அதில் கையை வைக்காமல் எடுத்து விட்டார்கள். அப்போது அவர்கள் இறைவா நெருப்பை எங்களுக்கு உண்ணக் கொடுத்து விடாதே என்று பிரார்த்தித்துவிட்டு அல்லாஹ் நமக்கு நெருப்பை உண்ணக் கொடுக்கவில்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ أُتِيَ بِصَحْفَةٍ تَفُورُ , فَرَفَعَ يَدَهُ مِنْهَا , فَقَالَ: «اللَّهُمَّ , لَا تُطْعِمْنَا نَارًا» (إِنَّ اللَّهَ لَمْ يُطْعِمْنَا نَارًا)


Kubra-Bayhaqi-14629

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

14629. அஸ்மா (ரலி) அவர்களிடம் தக்கடி கொண்டு வரப்பட்டால் அதன் ஆவி அடங்கும் வரை மூடி வைக்குமாறு உத்தரவிடுவார்கள். மேலும் அவர்கள் இவ்வாறு உண்ணுவது அதிக பரகத்தைப் பெற்றுத் தரும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உர்வா (ரஹ்)


أَنَّهَا كَانَتْ إِذَا ثَرَدَتْ غَطَّتْهُ شَيْئًا حَتَّى يَذْهَبَ فَوْرُهُ ثُمَّ تَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” إِنَّهُ أَعْظَمُ لِلْبَرَكَةِ


Musnad-Ahmad-26958

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

26958. அஸ்மா (ரலி) அவர்களிடம், ஸரீத் (எனும் தக்கடி) உணவு கொண்டு வரப்பட்டால் அதன் ஆவி அடங்கும் வரை மூடி வைக்குமாறு உத்தரவிடுவார்கள். மேலும் அவர்கள், “இவ்வாறு உண்ணுவது அதிக பரகத்தைப் பெற்றுத் தரும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)


أَنَّهَا كَانَتْ إِذَا ثَرَدَتْ، غَطَّتْهُ شَيْئًا حَتَّى يَذْهَبَ فَوْرُهُ، ثُمَّ تَقُولُ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ أَعْظَمُ لِلْبَرَكَةِ»


Darimi-2091

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

சூடான உணவை சாப்பிடத் தடை.

2091. அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், தக்கடி கொண்டு வரப்பட்டால் அதன் ஆவி அடங்கும் வரை மூடி வைக்குமாறு உத்தரவிடுவார்கள். மேலும் அவர்கள், “இவ்வாறு உண்ணுவது அதிக பரகத்தைப் பெற்றுத் தரும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)


أَنَّهَا كَانَتْ إِذَا أُتِيَتْ بِثَرِيدٍ، أَمَرَتْ بِهِ فَغُطِّيَ حَتَّى يَذْهَبَ فَوْرَةُ وَدُخَانُهُ، وَتَقُولُ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «هُوَ أَعْظَمُ لِلْبَرَكَةِ»


Almujam-Alkabir-1341

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1341. புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று ஒருவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நேர்ச்சை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதில் வணங்கப்படக் கூடிய அறியாமைக் கால சிலைகளில் ஏதேனும் ஒரு சிலை இருக்கின்றதா?” என்று (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு (மக்கள்) இல்லை என்று பதிலளித்தார்கள். “அவர்களது திருவிழாக்களில் ஏதேனும் ஒரு திருவிழா அங்கு நடப்பதுண்டா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள்.

“நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள். ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலோ அல்லது ஆதமுடைய மகனுக்கு இயலாத காரியத்திலோ நேர்ச்சையை நிறைவேற்றுதல் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் இப்னு ளஹ்ஹாக் (ரலி)


نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ ينْحَرَ بِبُوَانَةَ، فَأَتَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ بِبُوَانَةَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كَانَ فِيهَا، وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ؟» قَالَ: لَا، قَالَ: «فَهَلْ كَانَ فِيهَا عِيدٌ، مِنْ أَعْيَادِهِمْ؟» قَالَ: لَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْفِ بِنَذْرِكَ، فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ، فِي مَعْصِيَةِ اللهِ، وَلَا فِي قَطِيعَةِ رَحِمٍ، وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ»


Abu-Dawood-3313

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3313. புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று ஒருவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நேர்ச்சை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதில் வணங்கப்படக் கூடிய அறியாமைக் கால சிலைகளில் ஏதேனும் ஒரு சிலை இருக்கின்றதா?” என்று (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு (மக்கள்) இல்லை என்று பதிலளித்தார்கள். “அவர்களது திருவிழாக்களில் ஏதேனும் ஒரு திருவிழா அங்கு நடப்பதுண்டா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். “நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள்.

ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலோ அல்லது ஆதமுடைய மகனுக்கு இயலாத காரியத்திலோ நேர்ச்சையை நிறைவேற்றுதல் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)


نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ؟» قَالُوا: لَا، قَالَ: «هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ؟»، قَالُوا: لَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْفِ بِنَذْرِكَ، فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ، وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ»


Kubra-Bayhaqi-68

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

68. பதனிடப்பட்ட எல்லா தோல்களும் தூய்மையானவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


طَهُورُ كُلِّ إِهَابٍ دِبَاغُهُ


Next Page » « Previous Page