Author: Farook

Abu-Dawood-334

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம் : 126

ஜுனுபானவர் குளிருக்கு பயந்து தயம்மும் செய்யலாமா ?

334. அம்ர் இப்னுஸ் ஆஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள் :

தாதஸாலாஸில் என்ற படையெடுப்பின் போது கடுங்குளிரான இரவில் (உறங்கும் போது) கனவு கண்டு நான் ஜுனுபாகி விட்டேன். நான் குளித்தால் மரணமடைந்து விடுவேனோ? என்று அஞ்சினேன். எனவே நான் தயம்மம் செய்து எனது தோழர்களுக்கு சுப்ஹ் தொழுகை நடத்தினேன். இதை பிறகு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தனர். அப்போது அவர்கள் (என்னை நோக்கி) அம்ரே! நீ ஜுனுபாக இருக்கும் போது உனது தோழர்களுக்கு தொழுகை நடத்தினாயா? என்று வினவினார்கள். நான் அவர்களிடம் என்னை குளிப்பதிலிருந்து தடுத்து விட்ட நிகழ்ச்சியை அவர்களிடம் தெரிவித்தேன். மேலும் நான், உங்களை நீங்கள் கொன்று விடவேண்டாம். அல்லாஹ் உங்களிடம் கருணை உள்ளவனாக இருக்கின்றான் என்று அல்லாஹ் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்றும் தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். மேலும் அவர்கள் வேறு எதையும் கூறவில்லை என்று இப்னுல் முஸன்னா அறிவிக்கின்றார்கள்.


احْتَلَمْتُ فِي لَيْلَةٍ بَارِدَةٍ فِي غَزْوَةِ ذَاتِ السُّلَاسِلِ فَأَشْفَقْتُ إِنِ اغْتَسَلْتُ أَنْ أَهْلِكَ فَتَيَمَّمْتُ، ثُمَّ صَلَّيْتُ بِأَصْحَابِي الصُّبْحَ فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا عَمْرُو صَلَّيْتَ بِأَصْحَابِكَ وَأَنْتَ جُنُبٌ؟» فَأَخْبَرْتُهُ بِالَّذِي مَنَعَنِي مِنَ الِاغْتِسَالِ وَقُلْتُ إِنِّي سَمِعْتُ اللَّهَ يَقُولُ: {وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا} [النساء: 29] فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَقُلْ شَيْئًا


Abu-Dawood-333

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

333. பனு ஆமிர் கிளைகளில் ஒருவர் அறிவிக்கின்றார்:

நான் இஸ்லாத்தை தழுவியதும் என்னுடைய மார்க்க(த்தைப் பற்றிய அறியாமை)ம் என்னை கவலை கொள்ள வைத்தது. இதனால் நான் அபூதர் அவர்களிடம் (மார்க்கத்தை தெரிந்து கொள்வதற்காக) வந்தேன். அப்போது அபூதர் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள் : நான் மதீனா (எனக்கு ஒத்துக் கொள்ளாததால்)வை வெறுத்தேன். எனவே எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில ஒட்டகங்களையும், ஆடுகளையும் (எடுத்துக் கொண்டு செல்லும்படி) உத்தரவிட்டு, அவற்றின் பாலை பருகும்படி கூறினார்கள். இங்கு அறிவிப்பாளர் ஹம்மாத் பாலுக்கு பதிலாக சிறுநீர் என்று கூறினாரா? என்று சந்தேகமடைகின்றேன் என்று குறிப்பிடுகின்றார். அபூதர் தொடர்ந்து கூறுகின்றார்கள் : எனவே நான் தண்ணீர் உள்ள பகுதியை விட்டும் நான் தூரமாகி விட்டேன். என் குடும்பம் என்னோடு தான் இருந்தது. அப்போது என்னை ஜனாபத் தீண்டி விடும்போது நான் சுத்தமின்றியே தொழுவேன். பிறகு நான் நண்பகலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அவர்கள் பள்ளியின் நிழலில் தனது தோழர்களின் குழுவினருடன் அமர்ந்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதர் ! தானே?

دَخَلْتُ فِي الْإِسْلَامِ فَأَهَمَّنِي دِينِي، فَأَتَيْتُ أَبَا ذَرٍّ فَقَالَ: أَبُو ذَرٍّ إِنِّي اجْتَوَيْتُ الْمَدِينَةَ، فَأَمَرَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَوْدٍ وَبِغَنَمٍ فَقَالَ لِي: «اشْرَبْ مِنْ أَلْبَانِهَا» – قَالَ حَمَّادٌ: وَأَشُكُّ فِي أَبْوَالِهَا، هَذَا قَوْلُ حَمَّادٍ – فَقَالَ أَبُو ذَرٍّ: فَكُنْتُ أَعْزُبُ عَنِ الْمَاءِ، وَمَعِي أَهْلِي فَتُصِيبُنِي الْجَنَابَةُ فَأُصَلِّي بِغَيْرِ طَهُورٍ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنِصْفِ النَّهَارِ، وَهُوَ فِي رَهْطٍ مِنْ أَصْحَابِهِ، وَهُوَ فِي ظِلِّ الْمَسْجِدِ، فَقَالَ أَبُو ذَرٍّ: فَقُلْتُ: نَعَمْ. هَلَكْتُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «وَمَا أَهْلَكَكَ؟» قُلْتُ: إِنِّي كُنْتُ أَعْزُبُ عَنِ الْمَاءِ، وَمَعِي أَهْلِي فَتُصِيبُنِي الْجَنَابَةُ فَأُصَلِّي بِغَيْرِ طُهُورٍ، فَأَمَرَ لِي رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلم بِمَاءٍ، فَجَاءَتْ بِهِ جَارِيَةٌ سَوْدَاءُ بِعُسٍّ يَتَخَضْخَضُ مَا هُوَ بِمَلْآنَ، فَتَسَتَّرْتُ إِلَى بَعِيرِي، فَاغْتَسَلْتُ، ثُمَّ جِئْتُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَا أَبَا ذَرٍّ: إِنَّ الصَّعِيدَ الطَّيِّبَ طَهُورٌ، وَإِنْ لَمْ تَجِدِ الْمَاءَ إِلَى عَشْرِ سِنِينَ، فَإِذَا وَجَدْتَ الْمَاءَ، فَأَمِسَّهُ جِلْدَكَ


Abu-Dawood-332

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 125

குளிப்புக் கடமையானவர் தயம்மும் செய்தல்.

332. அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் சில ஆடுகள் திரண்டிருந்தன. அப்போது அவர்கள் (என்னை நோக்க) அபூதரே! இவற்றை நீ காட்டிற்கு ஓட்டிச் செல் என்று சொன்னார்கள். நான் ரபதா என்ற இடத்திற்கு (ஓட்டிச்) சென்றேன். (அங்கு) என்னை ஜனாபத் தீண்டி நான் (குளிக்க முடியாமல்) ஐந்து அல்லது ஆறு (நாட்கள்) தங்கியிருந்தேன். பின்பு நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவர்கள் என்னை, ‘அபூதரே!’ என்று அழைத்தார்கள். நான் (பதில் கூறாது) மௌனம் சாதித்தேன். அப்போது அவர்கள், அபூதரே! உடனது தாய் இழக்க கடவது! உமக்கு அழிவுண்டாகட்டும்! என்று கூறி எனக்காக ஒரு கருத்த அடிமைப் பெண்ணை அழைத்தார்கள். அப்பெண்மணி தண்ணீர் பாத்திரத்தை கொண்டு வந்தாள். (ஒரு புறத்தில்) அவள் ஒரு ஆடையைக் கொண்டு என்னை மறைத்தாள். நானும் (இன்னொரு புறத்தில்) ஒரு ஒட்டகையை மறைவாக்கிக் கொண்டு குளிப்பை நிறைவேற்றினேன். அப்போது தான் நான் என் மேலிருந்த மலையை இறக்கியவன் போலானேன். அப்போது அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் ‘(தண்ணீர் இல்லாது) பத்தாண்டுகள் ஆயினும் (பரிசுத்தமான) மண் ஒரு முஸ்லிமின் உளூ(விற்கு அல்லது குளிப்பிற்கு பரிகாரமாகும்)வாகும்’!

اجْتَمَعَتْ غُنَيْمَةٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا أَبَا ذَرٍّ ابْدُ فِيهَا». فَبَدَوْتُ إِلَى الرَّبَذَةِ فَكَانَتْ تُصِيبُنِي الْجَنَابَةُ فَأَمْكُثُ الْخَمْسَ وَالسِّتَّ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أبُو ذَرٍّ». فَسَكَتُّ فَقَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ أَبَا ذَرٍّ لِأُمِّكَ الْوَيْلُ». فَدَعَا لِي بِجَارِيَةٍ سَوْدَاءَ فَجَاءَتْ بِعُسٍّ فِيهِ مَاءٌ فَسَتَرَتْنِي بِثَوْبٍ وَاسْتَتَرْتُ بِالرَّاحِلَةِ، وَاغْتَسَلْتُ فَكَأَنِّي أَلْقَيْتُ عَنِّي جَبَلًا فَقَالَ «الصَّعِيدُ الطَّيِّبُ وَضُوءُ الْمُسْلِمِ وَلَوْ إِلَى عَشْرِ سِنِينَ، فَإِذَا وَجَدْتَ الْمَاءَ فَأَمِسَّهُ جِلْدَكَ فَإِنَّ ذَلِكَ خَيْرٌ»


Abu-Dawood-328

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

328. பயணத்தில் தயம்மம் செய்வது பற்றி கதாதா அவர்களிடம் வினவப்பட்ட போது, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முட்டுக்கைகள் வரை (தடவச்) சொன்னார்கள் என்று அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் அறிவித்ததாக அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா, ஷுஃபி வாயிலாக எனக்கு ஒரு அறிவிப்பாளர் அறிவித்தார் என்று பதிலளித்தார்.

அறிவிப்பாளர் : கதாதா 

இந்த சனதில் அறியப்படாத ஒருவர் இடம் பெற்றார் என்று முன்திரி அவர்கள் கூறுகின்றார்கள்.


سُئِلَ قَتَادَةُ، عَنِ التَّيَمُّمِ فِي السَّفَرِ فَقَالَ: حَدَّثَنِي مُحَدِّثٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِلَى الْمِرْفَقَيْنِ»


Abu-Dawood-327

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

327. நான் நபி (ஸல்) அவர்களிடம் தயம்மத்தைப் பற்றி வினவியபோது முகத்திற்கும், முன்னங்கைகளுக்கும் ஒரு தடவை மண்ணில் அடிக்குமாறு எனக்கு கட்டளையிட்டார்கள் என்று அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்.

அறிவிப்பாளர் : அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள்.


سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّيَمُّمِ «فَأَمَرَنِي ضَرْبَةً وَاحِدَةً لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ»


Abu-Dawood-326

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

326. அம்மார் (ரலி) அவர்களிடமிருந்து தன் தந்தை வழியாக ஸயீத் பின் அப்துர் ரஹ் மான் பின் அப்ஸா அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸில் உனது இரு கைகளையும் மண்ணில் அடித்து இவ்விரண்டைக் கொண்டு உமது முகத்தையும், உமது முன்னங்கைகளையும் நீ தடவிக் கொள் உமக்கு போதுமானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று குறிப்பிட்டு இந்த ஹதீஸை தொடர்கிறார்.

அறிவிப்பாளர் : அம்மார் (ரலி) 

அம்மார் (ரலி) அவர்கள் உரையாற்று வதை நான் செவியுற்றேன். ஆனால் அவர்கள் ஊதவில்லை என்று தான் குறிப்பிட்டார்கள். என ஸயீத் பின் அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா கூறியதாக மாலிக் மூலம் ஹுசைன் வழியாக இதை ஷுஃபா அறிவிக்கின்றார். தனது இரு முன்னங்கை களையும் மண்ணில் அடித்து ஊதினார்கள் என்று அவர் கூறியதாக இந்த ஹதீஸில் ஹகம் மூலம் ஷுஃபா வாயிலாக ஹுசைன் பின் முஹம்மது குறிப்பிடுகின்றார்.


فَقَالَ يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَضْرِبَ بِيَدَيْكَ إِلَى الْأَرْضِ، فَتَمْسَحَ بِهِمَا وَجْهَكَ وَكَفَّيْكَ»، وَسَاقَ الْحَدِيثَ


Abu-Dawood-325

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

325. பிறகு அக்கையில் ஊதி, அதைக் கொண்டு தனது முகத்தையும், தனது முன்னங் கைகளை முட்டுக் கைகள் வரை அல்லது முழங்கைகள் வரை தடவினார்கள் என்று மேலுள்ள அதே இஸ்நாத் மூலம் ஷுஃபா அறிவிப்பதாக ஹஜ்ஜாஜ் வழியாக அலீ பின் சஹ்ல் ரம்லீ அறிவிக்கின்றார்.

ஸலமா அவர்கள் (இந்த ஹதீஸில்) முன்னங்கைகள், முகம், முழங்கைகள் என்று அறிவிக்கும் போது ஒரு நாள் மன்சூர் என்பார் அவரை நோக்கி, நீ என்ன அறிவிக்கின்றீர் என்பதை கவனித்துக் கொள்க! ஏனெனில் உம்மைத் தவிர வேறு யாரும் முழங்கைகளை குறிப்பிடவில்லை என்று கூறினார் என்று ஷுஃபா அவர்கள் அறிவிக்கின்றார்.


«ثُمَّ نَفَخَ فِيهَا وَمَسَحَ بِهَا وَجْهَهُ وَكَفَّيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ» – أَوْ إِلَى الذِّرَاعَيْنِ – قَالَ شُعْبَةُ: كَانَ سَلَمَةُ يَقُولُ: الْكَفَّيْنِ وَالْوَجْهَ وَالذِّرَاعَيْنِ، فَقَالَ لَهُ مَنْصُورٌ ذَاتَ يَوْمٍ: انْظُرْ مَا تَقُولَ فَإِنَّهُ لَا يَذْكُرُ الذِّرَاعَيْنِ غَيْرُكَ


Abu-Dawood-324

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

324. இந்த சம்பவத்தை அம்மார் அவர்களிடமிருந்து தன் தந்தை வாயிலாக (ஸயீத்) இப்னு அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா அறிவிக்கின்ற போது, உனக்கு இதுவே போதுமானதாகும் என்றும் மேலும் நபி (ஸல்) அவர்கள் தனது கையை மண்ணில் அடித்து, பிறகு அக்கையில் ஊதி அதைக் கொண்டு தனது முகத்தையும், தனது முன்னங்கைகளையும் தடவினார்கள் என்று குறிப்பிடுகின்றார். அறிவிப்பாளர் ஸலமா அவர்கள் சந்தேகம் கொண்டு இதில் முட்டுக் கைகள் வரை அல்லது முன்னங்கைகள் வரை என்று இடம் பெற்றுள்ளதா என்று எனக்கு தெரியாது என்ற குறிப்பிடுகின்றார்.

அறிவிப்பாளர் : அம்மார் (ரலி).


«إِنَّمَا كَانَ يَكْفِيكَ وَضَرَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ إِلَى الْأَرْضِ، ثُمَّ نَفَخَ فِيهَا، وَمَسَحَ بِهَا وَجْهَهُ وَكَفَّيْهِ» شَكَّ سَلَمَةُ وَقَالَ: «لَا أَدْرِي فِيهِ إِلَى الْمِرْفَقَيْنِ، يَعْنِي أَوْ إِلَى الْكَفَّيْنِ»


Abu-Dawood-323

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

323. அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடமிருந்து அப்துர் ரஹ்மான் அப்ஸா அறிவிக்கும் போது இந்த ஹதீஸில், அம்மாரே! நீ இவ்வாறு செய்வதே உனக்குப் போதுமானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி பின்பு தனது இரு கைகளை யும் ஒரே ஒரு தடவை மண்ணில் அடித்தார் கள். பிறகு அவ்விரண்டில் மற்றொன்றின் மீது அடித்து, தனது முகத்தையும் முழுங் கைகளையும், முட்டுக்கைகளை அடையாத வண்ணம் பாதி முழங்கைகள் வரை தடவினார்கள் என்று அறிவிக்கின்றார்.

அறிவிப்பாளர் : அம்மார் பின் யாஸிர் (ரலி)

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் கள்: இந்த ஹதீஸை அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா, சலமா பின் குஹைல், அஃமஷ் வழியாக இதை ஜரீர் அறிவிக்கின்றார்.


«يَا عَمَّارُ إِنَّمَا كَانَ يَكْفِيكَ هَكَذَا، ثُمَّ ضَرَبَ بِيَدَيْهِ الْأَرْضَ، ثُمَّ ضَرَبَ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى، ثُمَّ مَسَحَ وَجْهَهُ وَالذِّرَاعَيْنِ إِلَى نِصْفِ السَّاعِدَيْنِ، وَلَمْ يَبْلُغِ الْمِرْفَقَيْنِ ضَرْبَةً وَاحِدَةً»


Abu-Dawood-322

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

322. அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா அவர் கள் அறிவிக்கின்றார்கள் : நான் உமர் (ரலி) அவர்களிடம் வீற்றிருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, நாங்கள் ஓரிடத்தில்ஒரு மாதம் அல்லது இரு மாதங் கள் தங்குகின்றறோம். (நாங்கள் எவ்வாறு தொழுவது) என்று வினவிய போது, உமர் (ரலி)அவர்கள் என்னை பொறுத்தவரையில் தண்ணீர் கிடைக்கின்ற வரை நான் தொழ மாட்டேன் என்று பதிலளித்தார்கள். அப் போது அம்மார்(ரலி) அவர்கள் இறை நம்பிக்கையாளரின் தலைவர் அவர்களே! உங்களுக்கு நினைவில்லையா? நானும், நீங் களும் ஒட்டகம் மேய்ப்பதில் ஈடுபட்டி ருக்கும் போது எமக்கு ஜனாபத் ஏற்பட்டு விட்டது. அதனால் நான் (மண்ணில்) புரண்டெழுந்தேன். நாம் நபி (ஸல்) அவர் களிடம் வந்ததும், நான் இதை அவர் களிடம் தெரிவித்தேன். அப்போது அவர் கள் நீ இவ்வாறு செய்வது உனக்கு போது மானதாகும் என்று கூறி, தனது இரு கை களையும் மண்ணில் அடித்தார்கள். பிறகு அவ்விரண்டு கைகளையும் ஊதினார்கள். பிறகு அவ்விரண்டையும் பாதி முழுங்கை கள் வரை தடவினார்கள் என்று கூறினார் கள். அதற்கு உமர்(ரலி) அவர்கள், அவ்வா றன்று அல்லாஹ் மீது ஆணையாக! இது விஷயத்தில் நீர் எதை நோக்கி திரும்பி விட்டீரோ அதை நோக்கியே உம்மை திருப்பி விடுகிறோம் (இது உன் விருப்பத்தை சார்ந்தது)

كُنْتُ عِنْدَ عُمَرَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ: إِنَّا نَكُونُ بِالْمَكَانِ الشَّهْرَ وَالشَّهْرَيْنِ فَقَالَ عُمَرُ: أَمَّا أَنَا فَلَمْ أَكُنْ أُصَلِّي حَتَّى أَجِدَ الْمَاءَ. قَالَ: فَقَالَ عَمَّارٌ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَمَا تَذْكُرُ إِذْ كُنْتُ أَنَا وَأَنْتَ فِي الْإِبِلِ، فَأَصَابَتْنَا جَنَابَةٌ، فَأَمَّا أَنَا، فَتَمَعَّكْتُ، فَأَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ: «إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَقُولَ هَكَذَا، وَضَرَبَ بِيَدَيْهِ إِلَى الْأَرْضِ، ثُمَّ نَفَخَهُمَا، ثُمَّ مَسَحَ بِهِمَا وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى نِصْفِ الذِّرَاعِ» فَقَالَ عُمَرُ: يَا عَمَّارُ اتَّقِ اللَّهَ، فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، إِنْ شِئْتَ وَاللَّهِ لَمْ أَذْكُرْهُ أَبَدًا، فَقَالَ عُمَرُ: كَلَّا وَاللَّهِ لَنُوَلِّيَنَّكَ مِنْ ذَلِكَ مَا تَوَلَّيْتَ


Next Page » « Previous Page