ஹதீஸின் தரம்: விபரம் கீழே
95. நபி (ஸல்) அவர்கள் (இரண்டு ராத்தல்) கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் உலூச் செய்தார்கள். ஒரு ஸாவு (இரண்டு கை கொள்ளளவு தண்ணீரின் நான்கு மடங்கு) தண்ணீரில் குளிப்பார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:-
இந்த ஹதீஸை ஷரீக் என்பார் வாயிலாக யஹ்யா பின் ஆதம் அறிவிக்கும்போது (அப்துல்லாஹ் பின் ஜப்ர் என்பதற்கு பதிலாக) இப்னு ஜப்ர் பின் அதீக் எனக் கூறியுள்ளர். அப்துல்லாஹ் பின் ஈஸா என்பார் வழியாக இதை சுஃப்யான் அறிவிக்கும்போது எனக்கு ஜப்ர் பின் அப்துல்லாஹ் அறிவிக்கின்றார் எனக் குறிப்பிட்டுள்ளர்.
மேலும் இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் : அப்துல்லாஹ் பின் ஜப்ர் அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதாக ஷுஃபா அறிவிக்கின்றார். எனினும் ஷுஃபா அவர்கள் இரண்டு ராத்தல்கள் எனக் குறிப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் ஒரு மக்கூக் அளவு தண்ணீரில் உலூச் செய்வார்கள் என அறிவிக்கிறார்.
மேலும் இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِإِنَاءٍ يَسَعُ رَطْلَيْنِ، وَيَغْتَسِلُ بِالصَّاعِ»
சமீப விமர்சனங்கள்