Author: Farook

Abu-Dawood-59

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 31

(தொழுகைக்கு உளூ எனும்) அங்கத் தூய்மை செய்வது கடமையாகும்.

59. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மத்தையும் அல்லாஹ் ஏற்கமாட்டான். (உளூ எனும்) அங்கத் தூய்மையின்றி எந்தத் தொழுகையையும் அல்லாஹ் ஏற்கமாட்டான்.

அறிவிப்பவர்: உஸாமா பின் உமைர் (ரலி)


«لَا يَقْبَلُ اللَّهُ عَزَّ وَجَلَّ صَدَقَةً مِنْ غُلُولٍ، وَلَا صَلَاةً بِغَيْرِ طُهُورٍ»


Abu-Dawood-58

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

58. நான் நபி (ஸல்) அவர்களிடம் ஓர் இரவு தங்கியிருந்தேன். அவர்கள் தூக்கத் திலிருந்து எழுந்து உலூச் செய்யும் தண்ணீர் அருகில் வந்து பற்குச்சியால் பல் துலக்கினார்கள். பிறகு, வானங்கள் பூமிகளை படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி ‎வருவதிலும் அறிவுடையோருக்கு நிச்சய மாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன (3 : 90) ‎என்ற வசனங்களை கொண்ட (ஆல இம்ரான்) அத்தியாயத்தை முடிக்கும் அளவுக்கு ‎ஓதினார்கள் அல்லது ஓதி முடித்து விட்டார்கள். பின்பு உலூச் செய்து தமது தொழும் ‎இடத்திற்கு வந்து இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். பிறகு தமது படுக்கைக்கு வந்து ‎அல்லாஹ் நாடிய அளவுக்கு தூங்கினார்கள். பிறகு கண் விழித்து முன்பு போல ‎நடந்து கொண்டார்கள். (இவ்வாறு) ஒவ்வொரு முறையும் பல் துலக்கி இரண்டு ‎ரக்அத்துகள் தொழுதார்கள். பிறகு வித்ரு தொழுதார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) ‎அறிவிக்கிறார்கள்.‎

இந்த ஹதீஸை இப்னு புலைல் அவர்கள் ஹுசைன் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ‎போது நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கி உலூச் செய்தார்கள். அப்போது வானங்கள் ‎பூமியின் படைப்பில் என்ற (3 : 190வது) வசனத்தை ஓதத் தொடங்கி அந்த ‎அத்தியாயத்தை முடிக்கும் வரை ஓதினார்கள் என்று அறிவிக்கின்றார்.‎

بِتُّ لَيْلَةً عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا اسْتَيْقَظَ مِنْ مَنَامِهِ، أَتَى طَهُورَهُ فَأَخَذَ سِوَاكَهُ فَاسْتَاكَ، ثُمَّ تَلَا هَذِهِ الْآيَاتِ: {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ} حَتَّى قَارَبَ أَنْ يَخْتِمَ السُّورَةَ – أَوْ خَتَمَهَا – ثُمَّ تَوَضَّأَ فَأَتَى مُصَلَّاهُ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَجَعَ إِلَى فِرَاشِهِ فَنَامَ مَا شَاءَ اللَّهُ، ثُمَّ اسْتَيْقَظَ [ص:16] فَفَعَلَ مِثْلَ ذَلِكَ، ثُمَّ رَجَعَ إِلَى فِرَاشِهِ فَنَامَ، ثُمَّ اسْتَيْقَظَ فَفَعَلَ مِثْلَ ذَلِكَ، ثُمَّ رَجَعَ إِلَى فِرَاشِهِ فَنَامَ، ثُمَّ اسْتَيْقَظَ فَفَعَلَ مِثْل ذَلِكَ كُلُّ ذَلِكَ، يَسْتَاكُ وَيُصَلِّي رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ “،


Abu-Dawood-57

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

57. நபி (ஸல்) அவர்கள் இரவிலும் பகலிலும் தூங்கி விழித்தார்களெனில் உலூச் செய்யும் ‎முன் பல் துலக்காதிருக்க மாட்டார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

குறிப்பு : இதன் அறிவிப்பாளர் தொடரில் மூன்றாவதாக இடம் பெறும் அலீ பின் ஜைது ‎பின் ஜத்ஆன் பலவீனமானவர்.‎


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَرْقُدُ مِنْ لَيْلٍ وَلَا نَهَارٍ، فَيَسْتَيْقِظُ إِلَّا تَسَوَّكَ قَبْلَ أَنْ يَتَوَضَّأَ»


Abu-Dawood-55

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 30

இரவில் எழுந்ததும் பல் துலக்குதல்.

55. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்தால் தமது வாயை பற்குச்சியால் ‎துலக்குவார்கள் என ஹுதைபா (ரலி) அறிவிக்கிறார்கள். ‎

‎(குறிப்பு : புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மது, இப்னு மாஜா ஆகியவற்றிலும் இது இடம் ‎பெற்றுள்ளது.)‎


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ»


Abu-Dawood-54

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

54. மேற்கண்ட ஹதீஸே அம்மார்பின் யாஸிர் (ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‎அதில் தாடியை வளர விடுதல் என்பதற்கு பதிலாக கத்னா செய்தல் என்ற வாசகமும், ‎தண்ணீரால் செய்தல் என்பதற்கு பதிலாக தண்ணீர் தெளித்தல் என்று அறிவிக்கப் ‎பட்டுள்ளது.‎

மேற்கண்ட ஹதீஸ் போன்று இப்னு அப்பாஸ் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‎அதில் ஐந்து செயல்கள் குறிப்பிட்டு அவையனைத்தும் தலையைச் சார்ந்தவை எனவும் ‎குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் தாடியை (வளர) விடுதல் என்பதை குறிப்பிட்டால். ‎தாடி முடியை வகிடு எடுத்து சீவுதல் குறிப்பிடப் பட்டுள்ளது என இமாம் அபூதாவூது ‎கூறுகின்றார்கள். ‎

மேலும் இமாம் அபூதாவூது (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்:

அதாவது தல்க் பின் ஹபீப் முஜிரஹித் ஆகியோரிடமிருந்து பக்ர் பின் அப்துல்லாஹ் ‎அல் முஸ்னீ ஆகியோரிட மிருந்து ஹம்மாத் அறிவிக்கும் ஹதீஸ் போலவே வேறு ‎சிலராலும் அறிவிக்கப் பட்டுள்ளது. அதில் தாடியை (வளர) விடுவது பற்றி ‎கூறப்படவில்லை. நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அபூ ஸலமா ‎வாயிலாக அறிவிக்கும்

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، وَدَاوُدُ بْنُ شَبِيبٍ ، قَالَا : نَا حَمَّادٌ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنْ سَلَمَةَ بْنِ مُحَمَّدِ بْنِ عَمَّارِ بْنِ يَاسِرٍ ، قَالَ مُوسَى : عَنْ أَبِيهِ ، وَقَالَ دَاوُدُ : عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِنَّ مِنَ الْفِطْرَةِ الْمَضْمَضَةَ وَالِاسْتِنْشَاقَ . فَذَكَرَ نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ إِعْفَاءَ اللِّحْيَةِ ، وَزَادَ : وَالْخِتَانَ ، قَالَ : وَالِانْتِضَاحَ ، وَلَمْ يَذْكُرِ انْتِقَاصَ الْمَاءِ ، يَعْنِي الِاسْتِنْجَاءَ . 

قَالَ أَبُو دَاوُدَ : وَرُوِيَ نَحْوُهُ عَنِ ابْنِ عَبَّاسٍ ، وَقَالَ : خَمْسٌ كُلُّهَا فِي الرَّأْسِ ، وَذَكَرَ فِيهِ الْفَرْقَ وَلَمْ يَذْكُرْ إِعْفَاءَ اللِّحْيَةِ . 

قَالَ أَبُو دَاوُدَ :  وَرُوِيَ نَحْوُ حَدِيثِ حَمَّادٍ ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ ، وَمُجَاهِدٍ ، وَعَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللهِ الْمُزَنِيِّ قَوْلُهُمْ ، وَلَمْ يَذْكُرُوا إِعْفَاءَ اللِّحْيَةِ . 

وَفِي حَدِيثِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي مَرْيَمَ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ : وَإِعْفَاءُ اللِّحْيَةِ ، وَعَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ نَحْوُهُ ، وَذَكَرَ إِعْفَاءَ اللِّحْيَةِ وَالْخِتَانَ .


Abu-Dawood-53

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 29

பல் துலக்குவது இயற்கை மரபு சார்ந்தது.

53. மீசையை கத்தரித்தல், தாடியை வளர விடுதல், பல் துலக்குதல், நாசிக்கு தண்ணீர் ‎செலுத்துதல், நகங்களை வெட்டுதல், விரல் கணுக்குகளை நன்கு கழுவுதல், அக்குள் ‎முடி களைதல், மர்ம ஸ்தான முடி எடுத்தல், மல ஜலம் கழித்தபின் தண்ணீரால் ‎சுத்தம் செய்தல் ஆகிய இந்த பத்து காரியங்களும் இப்றாகீம் நபியின் ‎வழிமுறைகளிலிருந்து அரபியர்களிடம் எஞ்சி நிற்பவையாகும் என நபி (ஸல்) ‎அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)‎

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் வரும் முஸ்அப் என்பவர் நான் பத்தாவது ‎காரியத்தை மறந்து விட்டேன். அது வாய் கொப்பளிப்பதாகத்தான் இருக்க வேண்டும் ‎என்று கூறியதாக ஜகரிய்யா பின் அபூஸாயிதா தெரிவிக்கிறார்.‎


عَشْرٌ مِنَ الْفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ، وَإِعْفَاءُ اللِّحْيَةِ، وَالسِّوَاكُ، وَالِاسْتِنْشَاقُ بِالْمَاءِ، وَقَصُّ الْأَظْفَارِ، وَغَسْلُ الْبَرَاجِمِ، وَنَتْفُ الْإِبِطِ، وَحَلْقُ الْعَانَةِ، وَانْتِقَاصُ الْمَاءِ – يَعْنِي الِاسْتِنْجَاءَ بِالْمَاءِ – “،

قَالَ زَكَرِيَّا: قَالَ مُصْعَبٌ: وَنَسِيتُ الْعَاشِرَةَ إِلَّا أَنْ تَكُونَ «الْمَضْمَضَةَ»


Abu-Dawood-52

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 28

பற்குச்சியை கழுவுதல்.

52. நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கி விட்டு பற்குச்சியை கழுவதற்காக என்னிடம் ‎கொடுப்பார்கள். நானும் அதைக் கொண்டு பல் துலக்கி விட்டு கழுவி அதை மீண்டும் ‎நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்து விடுவேன்.‎

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)‎


«كَانَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَاكُ، فَيُعْطِينِي السِّوَاكَ لِأَغْسِلَهُ، فَأَبْدَأُ بِهِ فَأَسْتَاكُ، ثُمَّ أَغْسِلُهُ وَأَدْفَعُهُ إِلَيْهِ»


Abu-Dawood-51

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

51. தமது இல்லத்தில் நுழைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் ‎எதைச் செய்யத் துவங்குவார்கள்? என்று நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ‎வினவிய போது பல் துவக்குவார்கள் என்று அவர்கள் பதிலளித்தார்கள்.‎

அறிவிப்பவர் : மிக்தாம் பின் ஷுரைஹ் ‎

‎(குறிப்பு: முஸ்லிம், அஹ்மது, நஸயீ, இப்னு மாஜா, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களிலும் ‎இது பதிவு செய்யப் பட்டுள்ளது.)‎


قُلْتُ: لِعَائِشَةَ بِأَيِّ شَيْءٍ كَانَ يَبْدَأُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ بَيْتَهُ؟ قَالَتْ: «بِالسِّوَاكِ»


Abu-Dawood-50

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 27

மற்றவர்களின் பல்குச்சியால் பல் துலக்குதல்.

50. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருக்கும் போது ‎அவர்களினருகில் இரண்டு நபர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் மற்றொரு வரை ‎விட மூத்தவர். அப்போது பல் துலக்குவதைச் சிறப்பிக்கும் விதத்தில் அவ்விருவரில் ‎மூத்தவருக்கு பற்குச்சியை வழங்கி கண்ணியப்படுத்தும் படி நபி (ஸல்) அவர்களுக்கு ‎வஹி இறை அறிவிப்புச் செய்யப்பட்டது என அன்னை ஆயிஷா (ரலி) ‎அறிவிக்கிறார்கள்.‎

குறிப்பு : இப்னு உமர் (ரலி) அவர்கள் மூலம் இதே ஹதீஸின் கருத்தை முஸ்லிம் ‎அவர்கள் பதிவு செய்துள்ளனர். இமாம் புகாரி அவர்கள் அறிவிப்பாளர் தொடர் ‎இல்லாமல் பதிவு செய்துள்ளனர்.‎


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَنُّ وَعِنْدَهُ رَجُلَانِ، أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الْآخَرِ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فِي فَضْلِ السِّوَاكِ، أَنْ كَبِّرْ أَعْطِ السِّوَاكَ أَكْبَرَهُمَا»


Abu-Dawood-49

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 26

பல் துலக்கும் முறை.

49. நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் எங்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தி தருமாறு ‎கேட்டு வந்த போது அவர்கள் தமது நாக்கை (பற்குச்சியால்) துலக்கக் கண்டேன் என்று ‎அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அறிவிப்பதாக முஸத்தத் ‎குறிப்பிடுகிறார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன் அப்போது அவர்கள் தமது ‎நாவின் ஓரத்தில் பற்குச்சியை வைத்துக் கொண்டு உஹ், உஹ் என்று சப்தமிட்டவாறு ‎பல் துலக்கிக் கொண்டிருக்கக் கண்டேன் என அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) ‎கூறுவதாக சுலைமான் குறிப்பிடுகின்றார் என இமாம் அபூதாவூத் குறிப்பிடுகிறார்.‎

அபூபுர்தா (ரலி) அவர்கள் தமது தந்தை அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) ‎மூலம் அறிவிக்கிறார்கள். அது ஒரு நீண்ட ஹதீஸாக இருந்தது. அதை நான் சுருக்கி ‎விட்டேன் என முஸத்தத் கூறுவதாக அபூதாவூது குறிப்பிடுகிறார்கள்.‎

அறிவிப்பவர் : அபூபுர்தா(ரலி)‎


«أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَسْتَحْمِلُهُ فَرَأَيْتُهُ يَسْتَاكُ عَلَى لِسَانِهِ»


Next Page » « Previous Page