Author: Farook

muwatta-malik-501

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 117

பெருநாள் அன்று இமாம் புறப்படுதல், குத்பா கேட்க காத்திருத்தல்

501. நோன்பு பெருநாளும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் தொழும் நேரத்தில் தொழுமிடத்தை அடையும் விதத்தில் இமாம் புறப்பட்டுச் செல்வது நம்மிடத்தில் கருத்து வேறுபாடு இல்லாத சுன்னத்தாகும் என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாக யஹ்யா கூறுகின்றார்கள்.


«مَضَتِ السُّنَّةُ الَّتِي لَا اخْتِلَافَ فِيهَا عِنْدَنَا، فِي وَقْتِ الْفِطْرِ وَالْأَضْحَى، أَنَّ الْإِمَامَ يَخْرُجُ مِنْ مَنْزِلِهِ قَدْرَ مَا يَبْلُغُ مُصَلَّاهُ، وَقَدْ حَلَّتِ الصَّلَاةُ»


muwatta-malik-500

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

500. நோன்புப் பெருநாள் அன்று தொழுகைக்கு முன் பள்ளியில் தன் தந்தை உர்வா தொழுவார்கள் என ஹாஷிம் இப்னு உர்வா கூறுகின்றார்கள்.

குறிப்பு: நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்-பின் நபில் தொழுகை தொழுததில்லை என்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா வில் இடம் பெற்றுள்ளது).


أَنَّهُ كَانَ «يُصَلِّي يَوْمَ الْفِطْرِ قَبْلَ الصَّلَاةِ فِي الْمَسْجِدِ»


muwatta-malik-499

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 116

பெருநாள் தொழுகைக்கு முன்-பின் தொழுதிட அனுமதி

499. நோன்புப் பெருநாள் அன்னு தொழுமிடத்திற்கு செல்லும் முன் நான்கு ரக்அத்கள் தன் தந்தை ஸாலிம் தொழுவார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு காஸிம் கூறுகிறார்கள்.


أَنَّ أَبَاهُ الْقَاسِمَ كَانَ: «يُصَلِّي قَبْلَ أَنْ يَغْدُوَ إِلَى الْمُصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ»


muwatta-malik-498

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

498. சூரியன் உதயமாகும் முன் சுப்ஹு தொழதப் பின் பெருநாள் தொழுமிடத்திற்கு ஸயீத் இப்னு முஸய்யப் அவர்ள் செல்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ كَانَ «يَغْدُو إِلَى الْمُصَلَّى، بَعْدَ أَنْ يُصَلِّيَ الصُّبْحَ، قَبْلَ طُلُوعِ الشَّمْسِ»


muwatta-malik-497

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 115

பெருநாள் தொழுகைக்கு முன் – பின் தொழாமல் இருப்பது

497. நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்பும், பின்பும் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் எதுவும் தொழ மாட்டார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «لَمْ يَكُنْ يُصَلِّي يَوْمَ الْفِطْرِ قَبْلَ الصَّلَاةِ وَلَا بَعْدَهَا»


muwatta-malik-495

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

495. நான் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் இரண்டிலும் அபூஹுரைரா(ரலி) அவர்களுடன் கலந்திருக்கிறேன். அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் (அல்ஹம்து சூரா) ஓதும் முன் (அதிகபட்சமாக) 7 தக்பீர் கூறினார்கள். இரண்டாவது ரக்அத்திலும் ஓதும் முன் 5 தக்பீர் கூறினார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.

‘இது நம்மிடத்திலும் சட்டமாகும் என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


شَهِدْتُ الْأَضْحَى وَالْفِطْرَ مَعَ أَبِي هُرَيْرَةَ «فَكَبَّرَ فِي الرَّكْعَةِ الْأُولَى سَبْعَ تَكْبِيرَاتٍ قَبْلَ الْقِرَاءَةِ، وَفِي الْآخِرَةِ خَمْسَ تَكْبِيرَاتٍ قَبْلَ الْقِرَاءَةِ»

قَالَ مَالِكٌ: «وَهُوَ الْأَمْرُ عِنْدَنَا» 


muwatta-malik-494

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 114

பெருநாள் தொழுகையில் தக்பீர் கூறுதல், கிராஅத் ஓதுதல்

494. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் எந்த அத்தியாயத்தை ஓதினார்கள் என அபூவாகித் லைஸி(ரலி) அவாகளிடம் உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 50 வது அத்தியாயத்தையும், 54 வது அத்தியாயத்தையும் ஓதுவார்கள் என பதில் கூறினார்கள். இதை உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லா கூறுகின்றார்கள்.

(முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா வில் அபூவாகித்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது).


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ، مَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْأَضْحَى وَالْفِطْرِ؟ فَقَالَ: كَانَ «يَقْرَأُ بِق وَالْقُرْآنِ الْمَجِيدِ، وَاقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ»


muwatta-malik-493

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

493. நோன்புப் பெருநாள் அன்று பெருநாள் தொழுகைக்கு முன் சாப்பிட மக்கள் கட்டளையிடப்பட்டனர் என ஸயித் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


أَنَّ النَّاسَ كَانُوا «يُؤْمَرُونَ بِالْأَكْلِ يَوْمَ الْفِطْرِ قَبْلَ الْغُدُوِّ»

قَالَ مَالِكٌ: «وَلَا أَرَى ذَلِكَ عَلَى النَّاسِ فِي الْأَضْحَى»


muwatta-malik-492

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 113

பெருநாள் தொழுகைக்குச் செல்லும் முன் சாப்பிடுதல்

492. உர்வா அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று (காலையில்) ஈத்கா செல்லும் முன் சாப்பிடுவார்கள் என அவர்களின் மகன் ஹிஷாம் கூறுகின்றார்கள்.


أَنَّهُ كَانَ «يَأْكُلُ يَوْمَ عِيدِ الْفِطْرِ قَبْلَ أَنْ يَغْدُوَ»


muwatta-malik-491

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

491. நான் ஒரு பெருநாளில் உமர்(ரலி) அவர்களுடன் கலந்திருந்தேன். அவர்கள் தொழுகை நடத்தி விட்டு பிரசங்கம் செய்வார்கள். (அதில) ‘இந்த இரண்டு பெருநாட்களில் நோன்பு வைப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இன்று உங்களை நோன்பிலிருந்து விடுவித்த நாளாகும். மற்றொரு நாளோ நீங்கள் கொடுத்த குர்பானியில் இருந்து உண்ணும் நாளாகும் என்று கூறினார்கள்.

(இது போல்) உதுமான்(ரலி) அவர்களுடன் ஒரு பெருநாளில் கலந்து கொண்ட போது அவர்கள் வந்து தொழுகை நடத்தினார்கள். அது முடிந்ததும் பிரசங்கம் செய்தார்கள். (அதில்) ‘இன்று உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் (ஜும்ஆ வும் பெருநாளும்) சேர்ந்து வந்து விட்டது. ஜும்ஆ விலும் கலந்து கொள்ளலாம். எனவே விரும்புவோர் ஜும்ஆ தொழுது கொள்ளுங்கள். வீட்டிற்குச் செல்ல விரும்புவோருக்கு (ஜும்ஆ தொழாமல் செல்ல) அனுமதிக்கிறேன் என்று கூறினார்கள்.

(இது போல்) உதுமான்(ரலி) முற்றுகையிடப்பட்டிருந்த நேரத்தில் அவர்களுடன் பெருநாளில் கலந்து கொண்டேன். அவர்கள் தொழ வைத்து விட்டு, பின்பு பிரசங்கம் செய்தார்கள் என அபூ உபைத் அவர்கள் கூறுகின்றார்கள்.


شَهِدْتُ الْعِيدَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فَصَلَّى، ثُمَّ انْصَرَفَ فَخَطَبَ النَّاسَ، فَقَالَ: ” إِنَّ هَذَيْنِ يَوْمَانِ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صِيَامِهِمَا: يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ، وَالْآخَرُ يَوْمٌ تَأْكُلُونَ فِيهِ مِنْ نُسُكِكُمْ ”  قَالَ أَبُو عُبَيْدٍ ثُمَّ شَهِدْتُ الْعِيدَ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ. فَجَاءَ فَصَلَّى، ثُمَّ انْصَرَفَ فَخَطَبَ. وَقَالَ: إِنَّهُ قَدِ «اجْتَمَعَ لَكُمْ فِي يَوْمِكُمْ هَذَا عِيدَانِ. فَمَنْ أَحَبَّ مِنْ أَهْلِ الْعَالِيَةِ أَنْ يَنْتَظِرَ الْجُمُعَةَ فَلْيَنْتَظِرْهَا، وَمَنْ أَحَبَّ أَنْ يَرْجِعَ، فَقَدْ أَذِنْتُ لَهُ»

قَالَ أَبُو عُبَيْدٍ ثُمَّ شَهِدْتُ الْعِيدَ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَعُثْمَانُ مَحْصُورٌ فَجَاءَ «فَصَلَّى ثُمَّ انْصَرَفَ فَخَطَبَ»


Next Page » « Previous Page