Author: Farook

muwatta-malik-96

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

96. (நிறத்தில்) முத்துப் போல் என்னிடம் (தொடர்ந்து மதீ) இறங்குகிறது. உங்களில் ஒருவர் இந்நிலையை அடைந்தால், ”தனது மறைவுறுப்பைக் கழுவி விட்டு, தொழுகைக்கான ஒளுச் செய்வது போல் ஒளுச் செய்யட்டும்”” என உமர்(ரலி) கூறினார்கள்.


«إِنِّي لَأَجِدُهُ يَنْحَدِرُ مِنِّي مِثْلَ الْخُرَيْزَةِ، فَإِذَا وَجَدَ ذَلِكَ أَحَدُكُمْ فَلْيَغْسِلْ ذَكَرَهُ، وَلْيَتَوَضَّأْ وُضُوءَهُ لِلصَّلَاةِ». يَعْنِي الْمَذْيَ


muwatta-malik-95

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 21

மதீ எனும் இச்சை நீருக்கு ஒளுச் செய்தல்

95. ஒருவர் தன் மனைவியிடம் நெருங்கி இருக்கிறார். அப்போது, மதீ வெளியாகியது. இவர் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வியை நபி(ஸல்) அவர்களிடம் கேட்கும்படி, என்னிடம் நபி(ஸல்) அவர்களின் மகள் (மனைவியாக) இருப்பதால் நான் இக்கேள்வி கேட்க வெட்கப்படுவதாகவும் அலீ(ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் இதை நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, ”உங்களில் ஒருவர் இந்த நிலையை அடைந்தால் மறைவுறுப்பில் தண்ணீர் தெளித்து விட்டு, தொழுகைக்காக ஒளுச் செய்வது போல் ஒளுச் செய்யட்டும்”” என்று (பதில்) கூறினார்கள். இதை மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இதே கருத்து புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, திர்மிதீ யில் உள்ளது).


أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ أَمَرَهُ أَنْ يَسْأَلَ لَهُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ، إِذَا دَنَا مِنْ أَهْلِهِ، فَخَرَجَ مِنْهُ الْمَذْيُ، مَاذَا عَلَيْهِ؟ قَالَ: عَلِيٌّ فَإِنَّ عِنْدِي ابْنَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا أَسْتَحِي أَنْ أَسْأَلَهُ، قَالَ الْمِقْدَادُ: فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ: «إِذَا وَجَدَ ذَلِكَ أَحَدُكُمْ فَلْيَنْضَحْ فَرْجَهُ بِالْمَاءِ وَلْيَتَوَضَّأْ وُضُوءَهُ لِلصَّلَاةِ»


muwatta-malik-94

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

94. ஸாலிம் இப்னு அப்துல்லா அவர்களின் மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறியதைப் பார்த்தேன். அவர்களது விரல்களின் நிறம் மாறியது. பின்பு அதை அவர்கள் துடைத்து விட்டு, (ஒளுச் செய்யாமல்) தொழுதார்கள் என அப்துர்ரஹ்மான் இப்னு முஜ்பிர் கூறுகின்றார்கள்.


«مَا تَرَوْنَ فِيمَنْ غَلَبَهُ الدَّمُ مِنْ رُعَافٍ فَلَمْ يَنْقَطِعْ عَنْهُ؟»

قَالَ مَالِكٌ: قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ: ثُمَّ قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ: أَرَى أَنْ يُومِئَ بِرَأْسِهِ إِيمَاءً

قَالَ يَحْيَى: قَالَ مَالِكٌ: «وَذَلِكَ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ فِي ذَلِكَ»


muwatta-malik-93

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 20

மூக்கில் இரத்தம் வந்தால்..?

93. ஸயீத் இப்னு முஸய்யிப் அவர்களுக்கு சில் மூக்கு உடைந்ததைப் பார்த்தேன். அதிலிருந்து இரத்தம் வெளியேறியது. மூக்கிலிருந்து வெளியேறிய இரத்தம் காரணமாக அவர்களின் விரல்களோ நிறம் மாறி விட்டது. (ஆனால்) அவர்கள் ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு ஹர்முலா அல் அஸ்லமீ கூறுகிறார்கள்.


أَنَّهُ دَخَلَ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ مِنَ اللَّيْلَةِ الَّتِي طُعِنَ فِيهَا، فَأَيْقَظَ عُمَرَ لِصَلَاةِ الصُّبْحِ، فَقَالَ: عُمَرُ: «نَعَمْ. وَلَا حَظَّ فِي الْإِسْلَامِ لِمَنْ تَرَكَ الصَّلَاةَ»، فَصَلَّى عُمَرُ، وَجُرْحُهُ يَثْعَبُ دَمًا


muwatta-malik-91

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 19

காயத்திலிருந்து வரும் இரத்தம், மூக்கில் வரும் இரத்தம் அதிக அளவில் வருபவர் செய்ய வேண்டியவை.

91. உமர்(ரலி) அவர்களிடம், அவர்கள் தாக்கப்பட்டிருந்த இரவில் சென்றிருந்தேன். உமர்(ரலி) அவர்கள் சுப்ஹு தொழுகைக்காக விழித்தார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள், ”தொழுகையை விட்டவனுக்கு இஸ்லாத்தில் எந்தப் பங்கும் இல்லை”” என்று கூறினார்கள். அவர்களின் காயம், இரத்தத்தை வெளியேற்றிய நிலையில் உமர்(ரலி) அவர்கள் தொழுதார்கள் என மிஸ்வர் இப்னு மக்ரமா கூறுகின்றார்கள்.


رَأَيْتُ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ «يَرْعُفُ، فَيَخْرُجُ مِنْهُ الدَّمُ، حَتَّى تَخْتَضِبَ أَصَابِعُهُ مِنَ الدَّمِ الَّذِي يَخْرُجُ مِنْ أَنْفِهِ، ثُمَّ يُصَلِّي، وَلَا يَتَوَضَّأُ»


muwatta-malik-90

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

90. ஸயீத் இப்னு முஸய்யிப் அவர்கள் தொழுது கொண்டிருந்த போது (அவர்களுக்கு) மூக்கில் ரத்தம் வந்தது. உடனே அவர்கள், நபி(ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸல்மா(ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். (ஒளுச் செய்யும்) தண்ணீர் குவளை தரப்பட்டது. உடனே ஒளுச் செய்தார்கள். இதை யஸீத் இப்னு அப்துல்லா இப்னு குஸைத்துல் லைஸீ கூறுகின்றார்கள்.


أَنَّهُ رَأَى سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ «رَعَفَ وَهُوَ يُصَلِّي، فَأَتَى حُجْرَةَ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُتِيَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ، ثُمَّ رَجَعَ فَبَنَى عَلَى مَا قَدْ صَلَّى»


muwatta-malik-89

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

89. அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு மூக்கில் இரத்தம் வந்தது. (உடனே தொழுகையில் இருந்து) வெளியேறி, ரத்தத்தைக் கழுவினார்கள். பின்பு திரும்பி வந்து, தான் தொழுத (தொழுகையில் விட்ட)தில் இருந்து தொடர்ந்தார்கள் என தனக்கு செய்தி கிடைத்தாக மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ كَانَ «يَرْعُفُ فَيَخْرُجُ فَيَغْسِلُ الدَّمَ عَنْهُ، ثُمَّ يَرْجِعُ فَيَبْنِي عَلَى مَا قَدْ صَلَّى»


muwatta-malik-88

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 18

மூக்கில் இரத்தம் வழிதல்

88. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு மூக்கில் இரத்தம் வந்தால் (தொழுகையில் இருந்து) திரும்பி, ஒளுச் செய்வார்கள். பின்பு, (யாருடனும்) பேசாமல் திரும்பி வந்து, (விட்ட தொழுகையை) தொடர்வார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «إِذَا رَعَفَ انْصَرَفَ فَتَوَضَّأَ، ثُمَّ رَجَعَ فَبَنَى وَلَمْ يَتَكَلَّمْ»


muwatta-malik-87

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

87. காலுறைகள் மீது மஸஹ் செய்வது எப்படி? என்று கேட்ட போது, இப்னு ஷிஹாப் அவர்கள், தன் கைகளில் ஒன்றை காலுறையின் அடிப்பாகத்தில் நுழைத்து மற்றொன்றை மேற்புறத்திலும் வைத்து, தடவிக் காட்டினார்கள் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ كَيْفَ هُوَ؟ فَأَدْخَلَ ابْنُ شِهَابٍ «إِحْدَى يَدَيْهِ تَحْتَ الْخُفِّ، وَالْأُخْرَى فَوْقَهُ ثُمَّ أَمَرَّهُمَا»

قَالَ يَحْيَى: قَالَ مالِكٍ: «وَقَوْلُ ابْنِ شِهَابٍ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ فِي ذَلِكَ»


muwatta-malik-86

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 17

காலுறைகள் மீது மஸஹ் செய்யும் முறை

86. தன் தந்தை (உர்வா அவர்கள்) காலுறைகள் மீது மஸஹ் செய்யும் பொது அதன் மேற்பகுதியிலேயே மஸஹ் செய்வார்கள். உட்பகுதியில் மஸஹ் செய்ய மாட்டார்கள். (இதைவிட) அதிகப்படுத்தாமல் இருந்தமையும் தான் பார்த்ததாக ஹிஷாம் இப்னு உர்வா அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّهُ رَأَى أَبَاهُ «يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ».

قَالَ: وَكَانَ لَا يَزِيدُ إِذَا مَسَحَ عَلَى الْخُفَّيْنِ، عَلَى أَنْ يَمْسَحَ ظُهُورَهُمَا، وَلَا يَمْسَحُ بُطُونَهُمَا


Next Page » « Previous Page