Author: Farook

muwatta-malik-106

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 24

ஒருவன் தன் மனைவியை முத்தமிட்டால் ஒளு..?

106. ஒருவன் தன் மனைவியை முத்தமிடுவதும், தன் கையால் அவளைத் தொடுவதும், 5:6 வசனத்தில் உள்ள ”பெண்களைத் தீண்டினால்”” என்பதில் உள்ளதாகும். ஒருவன் தன் மனைவியை முத்தமிட்டால் அல்லது தன் கையால் அவளைத் தொட்டால் அவன் மீது ஒளுச் செய்வது கடமையாகும்”” என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


«قُبْلَةُ الرَّجُلِ امْرَأَتَهُ، وَجَسُّهَا بِيَدِهِ، مِنَ الْمُلَامَسَةِ، فَمَنْ قَبَّلَ امْرَأَتَهُ، أَوْ جَسَّهَا بِيَدِهِ، فَعَلَيْهِ الْوُضُوءُ»


muwatta-malik-105

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

105. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுடன் நான் ஒரு பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள் சூரியன் உதயமாகிய பின் ஒளுச் செய்து, பின்பு தொழுததைப் பார்த்தேன். இந்தத் தொழுகையைத் தான் (சற்று முன்) தொழுதீர்களே! என்றேன். சுப்ஹுத் தொழுகைக்காக நான் ஒளுச் செய்து விட்டு, என் மறைவுறுப்பைத் தொட்டேன். எனவே (மீண்டும்) ஒளுச் செய்தேன். மீண்டும் தொழுதேன் என்று பதில் கூறினார்கள். இதை ஸாலிம் கூறுகின்றார்கள்.

(குறிப்பு: சதாரணமாக மறைவுறுப்பைத் தொட்டால் ஒளு முறியாது. ஆசையுடன் தொட்டு, அதன் மூலம் மதீ வெளிப்பட்டாலே ஒளு முறியும். மறைவுறுப்பைத் தொட்டால் ஒளு முறியாது என்று வந்துள்ள ஆதாரப்பூர்வமான நபிமொழியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்).


كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي سَفَرٍ، فَرَأَيْتُهُ، بَعْدَ أَنْ طَلَعَتِ الشَّمْسُ، تَوَضَّأَ ثُمَّ صَلَّى. قَالَ: فَقُلْتُ لَهُ: إِنَّ هَذِهِ لَصَلَاةٌ مَا كُنْتَ تُصَلِّيهَا، قَالَ: «إِنِّي بَعْدَ أَنْ تَوَضَّأْتُ لِصَلَاةِ الصُّبْحِ مَسِسْتُ فَرْجِي، ثُمَّ نَسِيتُ أَنْ أَتَوَضَّأَ، فَتَوَضَّأْتُ وَعُدْتُ لِصَلَاتِي»


muwatta-malik-104

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

104. என் தந்தை அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் குளித்து விட்டு பின்பு ஒளுச் செய்வதையும் பார்த்தேன். தந்தையவர்களே! குளித்ததே ஒளுவிற்கும் பகரமாகி விடுமே என்று நான் கேட்டேன். ‘ஆம்”. பகரமாகி விடும் தான் என்றும், நான் மறைவுறுப்பை சில சமயம் தொட்டிருக்கக் கூடும். எனவே ஒளுச் செய்தேன் என்று (பதில்) கூறினார்கள். இதை ஸாலிம் கூறுகின்றார்கள்.


رَأَيْتُ أَبِي، عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَغْتَسِلُ ثُمَّ يَتَوَضَّأُ. فَقُلْتُ لَهُ: يَا أَبَتِ أَمَا يَجْزِيكَ الْغُسْلُ مِنَ الْوُضُوءِ؟ قَالَ: «بَلَى وَلَكِنِّي أَحْيَانًا أَمَسُّ ذَكَرِي فَأَتَوَضَّأُ»


muwatta-malik-103

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

103. ஒருவன் தன் மறைவுறுப்பைத் தொட்டு விட்டால் ஒளுச் செய்யட்டும் என (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


مَنْ مَسَّ ذَكَرَهُ، فَقَدْ وَجَبَ عَلَيْهِ الْوُضُوءُ


muwatta-malik-102

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

102. உங்களில் ஒருவர் தன் மறைவுறுப்பைத் தொட்டு விட்டால் ஒளுச் செய்யட்டும் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


«إِذَا مَسَّ أَحَدُكُمْ ذَكَرَهُ، فَقَدْ وَجَبَ عَلَيْهِ الْوُضُوءُ»


muwatta-malik-101

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

101. ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் முன் நான் குர்ஆனைப் படித்து இருந்தேன். அதுசமயம் நான் சொறிந்தேன். ”உன் மறைவுறுப்பைத் தொட்டிருக்க வேண்டுமே”” என ஸஃது(ரலி) கேட்க, நான் ஆம் என்றேன். ‘நீ எழுந்து (போய்) ஒளுச் செய்” என்று ஸஃது(ரலி) கூறினார்கள். நான் எழுந்து போய் ஒளுச் செய்து விட்டுத் திரும்பினேன் என முஸ்அப் அவர்கள் கூறுகின்றார்கள்.


كُنْتُ أُمْسِكُ الْمُصْحَفَ عَلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ فَاحْتَكَكْتُ فَقَالَ سَعْدٌ: «لَعَلَّكَ مَسِسْتَ ذَكَرَكَ؟» قَالَ: فَقُلْتُ نَعَمْ. فَقَالَ: «قُمْ، فَتَوَضَّأْ». فَقُمْتُ فَتَوَضَّأْتُ، ثُمَّ رَجَعْتُ


muwatta-malik-100

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 23

மறைவுறுப்பைத் தொடுவதால் ஒளு?

100. நான் மர்வான் இப்னு ஹகம் அவர்களிடம்சென்றேன். அப்போது எதனால் ஒளு நீங்கும்? எனப் பேசிக் கொண்டிருந்தோம். மறைவுறுப்பை தொடுவதினால் ஒளுச் செய்தல் வேண்டும் என் மர்வான் கூறினார். இது எனக்குத் தொரியாது என நான் கூறினேன். அப்போது மர்வான் அவர்கள், ”ஒருவர் தன் மறைவுறுப்பைத் தொட்டால் அவர் ஒளுச் செய்யட்டும்”” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என புஸ்ரா பின்த் ஸப்வான் (ரலி அவர்கள் தனக்குக் கூறியதாக கூறினார்கள். இதை உர்வா இப்னுஸ் ஸுபைர் அறிவிக்கின்றார்கள்.

(இது திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான் ல் உள்ளது).


دَخَلْتُ عَلَى مَرْوَانَ بْنِ الْحَكَمِ فَتَذَاكَرْنَا مَا يَكُونُ مِنْهُ الْوُضُوءُ، فَقَالَ مَرْوَانُ وَمِنْ مَسِّ الذَّكَرِ الْوُضُوءُ، فَقَالَ عُرْوَةُ مَا عَلِمْتُ هَذَا، فَقَالَ مَرْوَانُ بْنُ الْحَكَمِ، أَخْبَرَتْنِي بُسْرَةُ بِنْتُ صَفْوَانَ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا مَسَّ أَحَدُكُمْ ذَكَرَهُ فَلْيَتَوَضَّأْ»


muwatta-malik-99

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

99. வெட்டை நீர் வெளியாகுவது பற்றி நான் சுலைமான் இப்னு யஸார் அவர்களிடம் கேட்டேன், ”உன் ஆடையில் தண்ணீரைத் தெளித்துக் கொள். அதை மறந்துவிடு”” என்று (பதில்) கூறினார்கள். தை ஸலத் இப்னு ஸுபைர் கூறுகின்றார்கள்.

(குறிப்பு: மேற்கண்ட இரண்டுமே நபி மொழி அல்ல! தாயியீன்களின் கருத்து. மேலும் இது இச்சை நீருக்குரிய சட்டமல்ல! இது, உடல் சூட்டினால் வெளியாகும், ‘வெட்டை நீர்” பற்றி சட்டமாகும்).


سَأَلْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ عَنِ الْبَلَلِ أَجِدُهُ، فَقَالَ: «انْضَحْ مَا تَحْتَ ثَوْبِكَ بِالْمَاءِ وَالْهَ عَنْهُ»


muwatta-malik-98

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 22

“மதி” காரணமாக

98. நான் தொழுது கொண்டிருக்கும் போதும் ஈரம் வெளிப்படுவதாக உணர்ந்து உடனே தொழுகையை முறித்து விடுகின்றேன். (இது சாரியா?) என்று ஒருவர் ஸயீத் இப்னு முஸய்யப் அவர்களிடம் கேட்டார். ”என் தொடையில் அது ஓடினால் நான் தொழுகையை முழுமையாக நிறைவேற்றும் வரை முடிக்க மாட்டேன்”” என்று (பதில்) கூறினார்கள். இதை யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


أَنَّهُ سَمِعَهُ، وَرَجُلٌ يَسْأَلُهُ فَقَالَ: إِنِّي لَأَجِدُ الْبَلَلَ وَأَنَا أُصَلِّي أَفَأَنْصَرِفُ؟ فَقَالَ لَهُ: سَعِيدٌ: «لَوْ سَالَ عَلَى فَخِذِي مَا انْصَرَفْتُ حَتَّى أَقْضِيَ صَلَاتِي»


muwatta-malik-97

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

97. மதீ பற்றி அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதை நீ அடைந்தால் உன் மறைவுறுப்பைக் கழுவு! தொழுகைக்காக ஒளுச் செய்வது போல் ஒளுச் செய்து கொள் என்று பதில் கூறினார்கள். இதை அப்துல்லா இப்னு அய்யாழ் அவர்களின் அடிமை ஜுன்துப் கூறுகின்றார்கள்.


سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ عَنِ الْمَذْي، فَقَالَ: إِذَا وَجَدْتَهُ، فَاغْسِلْ فَرْجَكَ، وَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاَةِ


Next Page » « Previous Page