Author: Farook

muwatta-malik-59

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

59. ஒருவர் தொழுகைக்காக ஒளுச் செய்கிறார். பின்பு சமைக்கப்பட்ட உணவை பெற்றுக் கொள்கின்றார். (சாப்பிடுகிறார்). இவர் ஒளுச் செய்ய வேண்டுமா? என அப்துல்லா இப்னு ஆமிர் இப்னு ரபீஆ அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ” என் தந்தை இவ்வாறு சாப்பிட்டு விட்டு ஒளுச் செய்யாமலேயே தொழுததை நான் பார்த்தேன்”” என (பதில்) கூறினார் என யஹ்யா இப்னு ஸயீத் அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّهُ سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ عَنِ الرَّجُلِ يَتَوَضَّأُ لِلصَّلَاةِ، ثُمَّ يُصِيبُ طَعَامًا قَدْ مَسَّتْهُ النَّارُ، أَيَتَوَضَّأُ؟ قَالَ: «رَأَيْتُ أَبِي يَفْعَلُ ذَلِكَ وَلَا يَتَوَضَّأُ»


muwatta-malik-58

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

58. அலீ(ரலி) அவர்களும், அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் சமைத்த உணவு வகைகளை சாப்பிட்டால், ஒளுச் செய்ய மாட்டார்கள் என தன்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூகின்றார்கள்.


أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ كَانَا «لَا يَتَوَضَّآَنِ مِمَّا مَسَّتِ النَّارُ»


muwatta-malik-56

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

56. உமர்(ரலி) அவர்களுடன் தான் இரவு உணவு சாப்பிட்டதாகவும், பின்பு அவர்கள் ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள் எனவும் ரபீஆ இப்னு அப்துல்லாஹ் இப்னு ஹுதைர் அறிவிக்கின்றார்கள்.


أَنَّهُ «تَعَشَّى مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


muwatta-malik-55

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

55. கைபர் போர் வருடம், கைபரை அடுத்த ‘ஸஹபாஹ்” என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்கள் (இளைப்பாற) இறங்கினார்கள். அஸரைத் தொழுதார்கள். பின்பு பயண உணவைக் கொண்டு வரும்படி கூறினார்கள். மணிக் கோதுமைத் தவிர (வேறு எதுவும்) கொண்டு வரப்படவில்லை. (அதை இழைக்கும்படி) ஏவினார்கள். குழைக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். நாங்களும் சாப்பிட்டோம். பின்பு மஹ்ரிபு தொழுகைக்காக நின்றார்கள். வாய் கொப்பளித்தார்கள். நாங்களும் வாய் கொப்பளித்தோம். பின்பு ஒளுச் செய்யாமலேயே தொழ வைத்தார்கள் என சுவைத் இப்னு நுஹ்மான்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, நஸயீ யில் உள்ளது).


أَنَّهُ خَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَامَ خَيْبَرَ. حَتَّى إِذَا كَانُوا بِالصَّهْبَاءِ وَهِيَ مِنْ أَدْنَى خَيْبَرَ، نَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَصَلَّى الْعَصْرَ. ثُمَّ دَعَا بِالْأَزْوَادِ فَلَمْ يُؤْتَ إِلَّا بِالسَّوِيقِ، فَأَمَرَ بِهِ فَثُرِّيَ فَأَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَكَلْنَا. ثُمَّ قَامَ إِلَى الْمَغْرِبِ فَمَضْمَضَ وَمَضْمَضْنَا. ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


muwatta-malik-54

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 13

சமைத்த உணவிற்காக ஒளுச் செய்யாதிருத்தல்

54. நபி(ஸல்) அவர்கள் ஆட்டின் முன் சப்பையைச் சாப்பிட்டார்கள். பின்பு ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள் என அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீயில் இக்கருத்துள்ள ஹதீஸ்கள் உள்ளன).


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَكَلَ كَتِفَ شَاةٍ، ثُمَّ صَلَّى، وَلَمْ يَتَوَضَّأْ»


muwatta-malik-52

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

52. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள், ஸயீத் இப்னு ஸைத் அவர்களின் மகனுக்கு ‘தஹ்னீக்” செய்தார்கள். அக் குழந்தையை தூக்கி வைத்து இருந்தார்கள். பின்பு பள்ளிக்குள் நுழைந்து, ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.

(சிறு குழந்தைகளுக்கு திடமான உணவை மென்று கொடுப்பதற்கே, ‘தஹ்னீக்” என்று கூறப்படும்).


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «حَنَّطَ ابْنًا لِسَعِيدِ بْنِ زَيْدٍ وَحَمَلَهُ ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


muwatta-malik-50

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

50. ரபீஆ இப்னு அபீ அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு பள்ளியில் இருந்த நிலையில் பல தடவை வாந்தி ஏற்பட்டது. (ஆனாலும்) அவர் (ஒளுச் செய்ய) புறப்படவும் இல்லை. ஒளுச் செய்யாமல் தொழுதார்கள் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


أَنَّهُ رَأَى رَبِيعَةَ بْنَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ «يَقْلِسُ، مِرَارًا وَهُوَ فِي الْمَسْجِدِ، فَلَا يَنْصَرِفُ، وَلَا يَتَوَضَّأُ، حَتَّى يُصَلِّيَ»


muwatta-malik-49

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 12

ஒளுவைக் கட்டாயமாக்காத செயல்கள்

49. நான் நீண்ட கீழாடை அணிந்த பெண்ணாக இருக்கிறேன். அசுத்தம் உள்ள இடத்திலே நடக்கவும் செய்கிறேன் என்று நான் உம்மு சல்மா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அசுத்தமான இடங்களை அடுத்து வருகின்ற (சுத்தமான) இடம் அதை சுத்தப்படுத்தும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு சல்மா(ரலி) அவர்கள் பதில் கூறினார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபு(ரலி) அவர்களின் அடிமைப் பெண் கூறுகின்றார்கள்.

(இது திர்மிதீ, அபூதாவூதிலும் உள்ளது).


أَنَّهَا سَأَلَتْ أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنِّي امْرَأَةٌ أُطِيلُ ذَيْلِي، وَأَمْشِي فِي الْمَكَانِ الْقَذِرِ. قَالَتْ أُمُّ سَلَمَةَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُطَهِّرُهُ مَا بَعْدَهُ»


muwatta-malik-48

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

48. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து ஒளுச் செய்யக் கூடியவர்களாக இருந்தனர் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«إِنْ كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ، فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَيَتَوَضَّئُونَ جَمِيعًا»


muwatta-malik-47

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

47. உமர்(ரலி) அவர்கள், அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்களும் இருந்த ஒரு பயணக் கூட்டத்தில் சேர்ந்து போனார்கள். ஒரு தண்ணீர் தடாகத்திற்கு வந்தார்கள். அத்தடாகத்தின் உரிமையாளாரிடம், ”உரிமையாளரே..! உமது தாடகத்திற்கு மிருகங்கள் வருவதுண்டா?”” என அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் கேட்டார்கள். ”உரிமையாளரோ! எங்களிடம் ஏதும் கூற வேண்டாம். நாங்கள் மிருகங்களுடன் இருக்கிறோம். அவைகளும் எங்களுடன் வருகின்றன”” என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். இதை யஹ்யா இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு ஹாதிப் கூறுகின்றார்கள்.

(இதை அறிவிக்கும் யஹ்யா, உமர்(ரலி) அவர்களைச் சந்தித்ததில்லை).


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ خَرَجَ فِي رَكْبٍ، فِيهِمْ عَمْرُو بْنُ الْعَاصِ، حَتَّى وَرَدُوا حَوْضًا، فَقَالَ عَمْرُو بْنُ الْعَاصِ لِصَاحِبِ الْحَوْضِ: يَا صَاحِبَ الْحَوْضِ هَلْ تَرِدُ حَوْضَكَ السِّبَاعُ؟  فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: «يَا صَاحِبَ الْحَوْضِ لَا تُخْبِرْنَا، فَإِنَّا نَرِدُ عَلَى السِّبَاعِ، وَتَرِدُ عَلَيْنَا»


Next Page » « Previous Page