Author: Farook

muwatta-malik-70

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

70. கழிவறைக்கு தண்ணீர் எடுத்துச் சென்று கழுவுவது பற்றி நான் கேட்ட போது, ”அது, பெண்களின் கழுவும் முறை”” என்று ஸயீத் இப்னு முஸய்யப் பதில் கூறினார்கள் என யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ يُسْأَلُ عَنِ الْوُضُوءِ مِنَ الْغَائِطِ بِالْمَاءِ. فَقَالَ سَعِيدٌ: «إِنَّمَا ذَلِكَ وُضُوءُ النِّسَاءِ»


muwatta-malik-69

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

69. ஒருவர் ஒளுச் செய்து, அந்த ஒளுவையும் அழகாகச் செய்து பின்பு தொழுகையை விரும்பியவராக வந்தால், அவர் தொழுகையை விரும்பி வரும் வரை தொழுகையில் உள்ளவர் போலாவார். அவாரின் காலடி எட்டுக்களில் ஒன்றுக்கு அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். மற்றொரு அடிக்கு ஒரு தீமை அவரை விட்டும் அழிக்கப்படும். உங்களில் ஒருவர் இகாமத் கூறுவதைக் கேட்டால் அவர் விரைந்து வர வேண்டாம். கூலி பெறுவதில் உங்களில் மேன்மையானவர், வீட்டால் உங்களில் தூரமாக இருப்பவரே என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ”அபூஹுரைரா அவர்களே! ஏன் இப்படி? என்று மக்கள் கேட்டனர். ‘அதிகமான காலடிகள் தான் காரணம்” என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் பதில் கூறினார்கள். இதை நுஐம் இப்னு அப்துல்லா மதனி அல் முஜ்மிரி கூறுகின்றார்கள்.


«مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ خَرَجَ عَامِدًا إِلَى الصَّلَاةِ، فَإِنَّهُ فِي صَلَاةٍ مَادَامَ يَعْمِدُ إِلَى الصَّلَاةِ. وَإِنَّهُ يُكْتَبُ لَهُ بِإِحْدَى خُطْوَتَيْهِ حَسَنَةٌ، وَيُمْحَى عَنْهُ بِالْأُخْرَى سَيِّئَةٌ. فَإِذَا سَمِعَ أَحَدُكُمُ الْإِقَامَةَ فَلَا يَسْعَ. فَإِنَّ أَعْظَمَكُمْ أَجْرًا أَبْعَدُكُمْ دَارًا»، قَالُوا: لِمَ يَا أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: «مِنْ أَجْلِ كَثْرَةِ الْخُطَا»


muwatta-malik-68

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

68. அஸர் தொழுகை நேரம் நெருங்கிய சமயத்தில் நபி(ஸல்) அவர்களை நான் பார்த்தேன். உடனே மக்கள் தண்ணீரைத் தேடினார்கள். அதை அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. அப்போது ஒரு பாத்திரத்தில் ஒளுச் செய்யும் தண்ணீர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அந்த பாத்திரத்தில் தன் கையை நபி(ஸல்) அவர்கள் வைத்தார்கள். பின்பு அதில் அவர்களை ஒளுச் செய்ய மக்களுக்கு ஏவினார்கள் என்று கூறிய அனஸ்(ரலி) அவர்கள், ”நபி(ஸல்) அவர்களின் விரல்களின் கீழிலிருந்து தண்ணீர் வெளியேறியதை நான் பார்த்தேன். அவர்களில் இருந்த கடைசி நபர் உட்பட அனைவரும் ஒளுச் செய்தார்கள்”” என்றும் அனஸ்(ரலி) கூறினார்கள்.


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَانَتْ صَلَاةُ الْعَصْرِ، فَالْتَمَسَ النَّاسُ وَضُوءًا فَلَمْ يَجِدُوهُ. فَأُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَضُوءٍ فِي إِنَاءٍ. فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ الْإِنَاءِ يَدَهُ. ثُمَّ أَمَرَ النَّاسَ يَتَوَضَّئُونَ مِنْهُ. قَالَ أَنَسٌ: «فَرَأَيْتُ الْمَاءَ يَنْبُعُ مِنْ تَحْتِ أَصَابِعِهِ. فَتَوَضَّأَ النَّاسُ حَتَّى تَوَضَّئُوا مِنْ عِنْدِ آخِرِهِمْ»


muwatta-malik-67

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

67. ஒரு முஸ்லிம் அடியான் ஒளுச் செய்யும் சமயம் முகத்தைக் கழுவினால் அவன் தன் இரு கண்களால் பார்த்த தவறுகள் அனைத்தும் (கழுவிய) தண்ணீருடன் முகத்தில் இருந்து வெளியேறி விடும். அவன் தன் இரு கைகளைக் கழுவினால் (கழுவிய) தண்ணீருடன் அவன் தன் கைகளால் செய்த தவறுகள் அனைத்தும் அவனது கைகளில் இருந்து வெளியேறி விடும். இறுதியில் பாவங்களில் இருந்து சுத்தமாக வெளியேறுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு: ”ஒரு முஸ்லிம்”” என்ற வார்த்தைக்குப் பதிலாக ”ஒரு முஃமின்”” என்றும், ”தண்ணீருடன்”” என்ற வார்த்தைக்குப் பதிலாக ”தண்ணீரின் கடைசிச் சொட்டுடன்”” என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்கலாம் என அறிவிப்பாளர் தன் சந்தேகத்தை இங்கே வெளிப்படுத்துகிறார். (இது முஸ்லிம், திர்மிதியில் உள்ளது).


«إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ أَوِ الْمُؤْمِنُ فَغَسَلَ وَجْهَهُ، خَرَجَتْ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ، فَإِذَا غَسَلَ يَدَيْهِ، خَرَجَتْ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ بَطَشَتْهَا يَدَاهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ. فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتْ كُلُّ خَطِيئَةٍ مَشَتْهَا رِجْلَاهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ. حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنَ الذُّنُوبِ»


muwatta-malik-66

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

66. ”ஒரு அடியான் ஒளுச் செய்யும் போது வாய் கொப்பளித்தால் அவனது வாயிலிருந்து குற்றங்கள் வெளியேறி விடும். மூக்கை கழுவினால் அவனது மூக்கிலிருந்து குற்றங்கள் வெளியேறி விடும். தன் முகத்தைக் கழுவினால் அவனின் முத்திலிருந்து குற்றங்கள் வெளியேறி விடும். அவனின் இரு கண்களின் இமைகளிலிருந்தும் வெளியேறும். தன் கைகளைக் கழுவினால் அவனது கைகளில் இருந்து குற்றங்கள் வெளியேறி விடும். அவனது கைகளின் நகக் கண்கள் வழியாகவும் வெளியேறி விடும். தன் தலைக்கு மஸஹ் செய்தால் அவனின் தலையில் இருந்து குற்றங்கள் வெளியேறி விடும். தன் கால்களை கழுவினால் அவனின் கால்களிலிருந்து குற்றங்கள் வெளியேறி விடும். அவனது கால்களின் நகக் கண்களின் கீழிலிருந்தும் வெளியாகும். பின்பு, பள்ளியின் பக்கம் அவன் நடந்து வருவதும், அவனது தொழுகையும் உபாரியாக அமையும்”” என்று நபி(ஸல்) அவாகள் கூறினார்கள் என அப்துல்லா ஸனாபிஹி(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது நஸயீ, இப்னுமாஜா, ஹாகிமியில் உள்ளது).


«إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُؤْمِنُ، فَتَمَضْمَضَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ فِيهِ وَإِذَا اسْتَنْثَرَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ أَنْفِهِ، فَإِذَا غَسَلَ وَجْهَهُ خَرَجَتِ الْخَطَايَا مِنْ وَجْهِهِ، حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَشْفَارِ عَيْنَيْهِ، فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ يَدَيْهِ، حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ يَدَيْهِ. فَإِذَا مَسَحَ بِرَأْسِهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رَأْسِهِ، حَتَّى تَخْرُجَ مِنْ أُذُنَيْهِ. فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رِجْلَيْهِ، حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ رِجْلَيْهِ.» قَالَ: «ثُمَّ كَانَ مَشْيُهُ إِلَى الْمَسْجِدِ وَصَلَاتُهُ نَافِلَةً لَهُ»


muwatta-malik-65

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

65. உஸ்மான்(ரலி) அவர்கள் திண்ணையில் அமர்ந்திருந்தார்கள். அதுசமயம் பாங்கு கூறுபவர் வந்து அவர்களை அஸர் தொழுகைக்காக அழைத்தார். உடனே தண்ணீர் வரவழைத்து ஒளுச் செய்தார்கள். அலலாஹ்வின் மீது சத்தியமாக, நான் உங்களுக்கு ஒரு ஹதீஸைத் தொரிவிக்கிறேன். அல்லாஹ்வின் வேதத்தில் அது இல்லை என்றால் நான் இதை உங்களுக்கு தொரிவித்திருக்க மாட்டேன் என்று உதுமான்(ரலி) கூறினார்கள். பின்பு, ”ஒருவர் ஒளுச் செய்து, அந்த ஒளுவையும் அழகாகச் செய்து, பின்பு தொழுதால், அந்த தொழுகைக்கும், அந்தத் தொழுகைக்கு இடைப்பட்ட (நேரத்)தில் உள்ள (குற்றத்)தை மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி, தான் கேட்டதாக உஸ்மான்(ரலி) அவர்கள் கூறினார்கள் என அவர்களின் அடிமை ஹம்ரான் கூறுகின்றார்கள்.


أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ جَلَسَ عَلَى الْمَقَاعِدِ. فَجَاءَ الْمُؤَذِّنُ فَآذَنَهُ بِصَلَاةِ الْعَصْرِ. فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ. ثُمَّ قَالَ: وَاللَّهِ لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا، لَوْلَا أَنَّهُ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُكُمُوهُ. ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنِ امْرِئٍ يَتَوَضَّأُ، فَيُحْسِنُ وُضُوءَهُ، ثُمَّ يُصَلِّي الصَّلَاةَ، إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلَاةِ الْأُخْرَى حَتَّى يُصَلِّيَهَا» قَالَ يَحْيَى: قَالَ مَالِكٌ: «أُرَاهُ يُرِيدُ هَذِهِ الْآيَةَ» {أَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ، إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ} [هود: 114]


muwatta-malik-63

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 14

ஒளுவைக் கட்டாயமாக்குபவை

63. (மலம் கழித்தபின்) சுத்தம் செய்து கொள்வது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், ”உங்களில் ஒருவர் மூன்று கற்களைப் பெற்றுக் கொள்ளவில்லையா? (அது போதுமே) என்று (பதில்) கூறினார்கள். இதை உர்வா கூறுகின்றார்கள்.

(இதே கருத்தில் நபித்தோழர் அறிவித்து புகாரி, திர்மிதீ, நஸயீ, அபூதாவூதில் உள்ளது).


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ الِاسْتِطَابَةِ، فَقَالَ: «أَوَلَا يَجِدُ أَحَدُكُمْ ثَلَاثَةَ أَحْجَارٍ؟»


muwatta-malik-62

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

62. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் ஈராக்கில் இருந்து வந்தார்கள். அவர்களிடம் அபு தல்ஹா(ரலி), உபை இப்னு கஹ்பு(ரலி) இருவரும் வந்தனர். அவ்விருவருக்கும் சமைக்கப்பட்ட உணவு தரப்பட்டது. அதை (மூவரும்) சாப்பிட்டார்கள். அனஸ் அவர்கள் எழுந்து ஒளுச் செய்தார்கள். அப்போது அபூ தல்ஹா அவர்களும், உஸை இப்னு கஹ்பு(ரலி), ”இது என்ன அனஸே..! ஈராக் நாட்டின் செயலா?”” என்று கேட்டனர். ”நான் அப்படிச் செய்யாமல் இருந்திருக்கலாம்”” என அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். அபூதல்ஹா(ரலி), உபை இப்னு கஹ்பு(ரலி) ஆகிய இருவரும் எழுந்து, ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள். இதை அப்துர் ரஹ்மான் இப்னு ஸைதுல் அன்சாரி கூறுகின்றார்கள்.


أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ قَدِمَ مِنَ الْعِرَاقِ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو طَلْحَةَ وَأُبَيُّ بْنُ كَعْبٍ فَقَرَّبَ لَهُمَا طَعَامًا قَدْ مَسَّتْهُ النَّارُ، فَأَكَلُوا مِنْهُ. فَقَامَ أَنَسٌ فَتَوَضَّأَ فَقَالَ أَبُو طَلْحَةَ وَأُبَيُّ بْنُ كَعْبٍ مَا هَذَا يَا أَنَسُ أَعِرَاقِيَّةٌ؟ فَقَالَ أَنَسٌ: «لَيْتَنِي لَمْ أَفْعَلْ». وَقَامَ أَبُو طَلْحَةَ وَأُبَيُّ بْنُ كَعْبٍ، فَصَلَّيَا وَلَمْ يَتَوَضَّآَ


muwatta-malik-61

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

61. நபி(ஸல்) அவர்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ரொட்டியும், கறியும் தரப்பட்டது. அதைச் சாப்பிட்டார்கள். பின்பு ஒளுச் செய்து விட்டு தொழுதார்கள். பின்பு அதே உணவின் மீதம் கொண்டு வரப்பட்டது. அதைச் சாப்பிட்டார்கள். பின்பு ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள் என முஹம்மதுஇப்னு முன்கதீர் அவர்கள் கூறுகின்றார்கள்.

(இந்த முஹம்மது இப்னு முன்கதீர் என்பவர் நபித்தோழர் அல்லர். ஜாபிர் இப்னு அப்துல்லா(ரலி) அறிவித்து இது, திர்மிதீ, அபூதாவூது, நஸயீ யில் உள்ளது).


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «دُعِيَ لِطَعَامٍ، فَقُرِّبَ إِلَيْهِ خُبْزٌ وَلَحْمٌ، فَأَكَلَ مِنْهُ، ثُمَّ تَوَضَّأَ وَصَلَّى، ثُمَّ أُتِيَ بِفَضْلِ ذَلِكَ الطَّعَامِ، فَأَكَلَ مِنْهُ ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


muwatta-malik-60

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

60. அபூபக்கர்(ரலி) அவர்கள், கறி சாப்பிட்டு விட்டு ஒளுச் செய்யாமலேயே தொழுததை நான் பார்த்தேன் என ஜாபிர் அப்துல்லா அன்சாரி(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيَّ، يَقُولُ: رَأَيْتُ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ، «أَكَلَ لَحْمًا. ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


Next Page » « Previous Page