தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-66

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

”ஒரு அடியான் ஒளுச் செய்யும் போது வாய் கொப்பளித்தால் அவனது வாயிலிருந்து குற்றங்கள் வெளியேறி விடும். மூக்கை கழுவினால் அவனது மூக்கிலிருந்து குற்றங்கள் வெளியேறி விடும். தன் முகத்தைக் கழுவினால் அவனின் முத்திலிருந்து குற்றங்கள் வெளியேறி விடும். அவனின் இரு கண்களின் இமைகளிலிருந்தும் வெளியேறும். தன் கைகளைக் கழுவினால் அவனது கைகளில் இருந்து குற்றங்கள் வெளியேறி விடும். அவனது கைகளின் நகக் கண்கள் வழியாகவும் வெளியேறி விடும். தன் தலைக்கு மஸஹ் செய்தால் அவனின் தலையில் இருந்து குற்றங்கள் வெளியேறி விடும். தன் கால்களை கழுவினால் அவனின் கால்களிலிருந்து குற்றங்கள் வெளியேறி விடும். அவனது கால்களின் நகக் கண்களின் கீழிலிருந்தும் வெளியாகும். பின்பு, பள்ளியின் பக்கம் அவன் நடந்து வருவதும், அவனது தொழுகையும் உபாரியாக அமையும்”” என்று நபி(ஸல்) அவாகள் கூறினார்கள் என அப்துல்லா ஸனாபிஹி(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது நஸயீ, இப்னுமாஜா, ஹாகிமியில் உள்ளது).

(முஅத்தா மாலிக்: 66)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ الصُّنَابِحِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُؤْمِنُ، فَتَمَضْمَضَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ فِيهِ وَإِذَا اسْتَنْثَرَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ أَنْفِهِ، فَإِذَا غَسَلَ وَجْهَهُ خَرَجَتِ الْخَطَايَا مِنْ وَجْهِهِ، حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَشْفَارِ عَيْنَيْهِ، فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ يَدَيْهِ، حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ يَدَيْهِ. فَإِذَا مَسَحَ بِرَأْسِهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رَأْسِهِ، حَتَّى تَخْرُجَ مِنْ أُذُنَيْهِ. فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رِجْلَيْهِ، حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ رِجْلَيْهِ.» قَالَ: «ثُمَّ كَانَ مَشْيُهُ إِلَى الْمَسْجِدِ وَصَلَاتُهُ نَافِلَةً لَهُ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-66.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.