தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-3228

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔

பாடம்:

விபச்சாரியை மணமுடித்தல் (கூடாது).

3228. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவில்) மர்ஸத் பின் அபூமர்ஸத் அல்ஃகனவீ (ரலி) அவர்கள் பலமான மனிதராக இருந்தார். மக்காவிலிருந்து மதீனாவிற்குக் கைதிகளை (இரவோடு இரவாக) தூக்கி வந்து சேர்ப்பவராகவும் இருந்தார்.

(அவர் கூறுகிறார்):

நான் ஒரு மனிதரைத் தூக்கிச் செல்வதற்காக அவரை (என்னுடன் வருமாறு) அழைத்தேன். மக்காவில் அனாக் எனும் விபச்சாரி ஒருத்தி இருந்தாள். அவள்(நான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்பு) என்னுடைய காதலியாக இருந்தாள். (நான் அந்த மனிதரை அழைக்கச் சென்ற போது) அவள் வெளியே வந்து, சுவரின் நிழலில் என் உருவத்தைப் பார்த்துவிட்டாள். “இவர் யார்? மர்ஸதா?, மர்ஸதே! வருக, வருக! இவ்விரவின் இப்பயணத்தில் என்னிடம் தங்கிவிட்டுச் செல்வீராக!” என்று கூறினாள். (அப்போது நான் அவளிடம்) “அனாக்! திண்ணமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விபச்சாரத்தைத் தடை செய்துள்ளார்கள்” என்று கூறினேன். உடனே அவள், “கூடாரங்களில் இருப்போரே! (மக்களே) இவர் (ஒரு) முள்ளம்பன்றி(யைப் போன்றவர்). இவர் உங்களுடைய கைதிகளை மக்காவிலிருந்து மதீனாவிற்குக் கொண்டுசெல்பவர்” என்று கூறி (என்னைப் பிடிக்கச் சொன்)னாள். உடனே நான் (மக்காவின் மலை) ‘கன்தமா’ நோக்கி ஓடிச் சென்றேன்.

என்னை எட்டுப்பேர் தேடி வந்தார்கள். அவர்கள் என் தலைக்கு மேல் வந்துவிட்டார்கள். (நான் கீழே ஒரு குகையில் ஒளிந்து கொண்டிருந்தேன்.) அங்கு அவர்கள் சிறுநீர் கழித்தார்கள். அவர்களின் சிறுநீர்ச் சாரல் என்மீது பட்டது. என்னைப் பார்க்க விடாமல் அல்லாஹ் அவர்க(ளின் கண்க)ளைக் குருடாக்கிவிட்டான்.

பிறகு நான் என்னுடைய அந்தத் தோழரிடம் வந்து அவரைச் சுமந்துகொண்டு ‘அராக்’ எனும் பகுதிக்கு வந்து, (அவர் மிகவும் கனமானவராக இருந்ததால் சுமை குறைய) அவருடைய (கையில் இருந்த) பெரிய விலங்கை உடைத்து (அவரை மதீனா கொண்டு வந்து) விட்டேன். பின்னர் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அனாக் என்பவளைத் திருமணம் செய்துகொள்ளலாமா?’ என்று கேட்டேன். அவர்கள் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள். அப்போது,

விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள் எனும் (அல்குர்ஆன்: 24:3) வது வசனம் இறங்கியது. உடனே அவர்கள் என்னை அழைத்து என்னிடம் இந்த இறைவசனத்தை ஓதிக்காட்டி, “அவளை மண முடிக்காதே!” என்று கூறினார்கள்.


تَزْوِيجُ الزَّانِيَةِ

أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى هُوَ ابْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ،

أَنَّ مَرْثَدَ بْنَ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيَّ، وَكَانَ رَجُلًا شَدِيدًا، وَكَانَ يَحْمِلُ الْأُسَارَى مِنْ مَكَّةَ، إِلَى الْمَدِينَةِ، قَالَ: فَدَعَوْتُ رَجُلًا لِأَحْمِلَهُ، وَكَانَ بِمَكَّةَ بَغِيٌّ يُقَالُ لَهَا: عَنَاقُ، وَكَانَتْ صَدِيقَتَهُ، خَرَجَتْ فَرَأَتْ سَوَادِي فِي ظِلِّ الْحَائِطِ، فَقَالَتْ: مَنْ هَذَا مَرْثَدٌ، مَرْحَبًا وَأَهْلًا يَا مَرْثَدُ، انْطَلِقِ اللَّيْلَةَ فَبِتْ عِنْدَنَا فِي الرَّحْلِ، قُلْتُ: يَا عَنَاقُ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرَّمَ الزِّنَا، قَالَتْ: يَا أَهْلَ الْخِيَامِ، هَذَا الدُّلْدُلُ، هَذَا الَّذِي يَحْمِلُ أُسَرَاءَكُمْ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ، فَسَلَكْتُ الْخَنْدَمَةَ، فَطَلَبَنِي ثَمَانِيَةٌ، فَجَاءُوا حَتَّى قَامُوا عَلَى رَأْسِي، فَبَالُوا، فَطَارَ بَوْلُهُمْ عَلَيَّ، وَأَعْمَاهُمُ اللَّهُ عَنِّي، فَجِئْتُ إِلَى صَاحِبِي، فَحَمَلْتُهُ، فَلَمَّا انْتَهَيْتُ بِهِ إِلَى الْأَرَاكِ، فَكَكْتُ عَنْهُ كَبْلَهُ، فَجِئْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَنْكِحُ عَنَاقَ، فَسَكَتَ عَنِّي، فَنَزَلَتْ: {الزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ} [النور: 3]، فَدَعَانِي، فَقَرَأَهَا عَلَيَّ وَقَالَ: «لَا تَنْكِحْهَا»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-3228.
Nasaayi-Alamiah-3176.
Nasaayi-JawamiulKalim-3194.

நஸாயீ இமாம்

இமாம் நஸாயீ

முழுப்பெயர்: அஹ்மத் இப்னு ஷுஐப் இப்னு அலி இப்னு ஸினான் இப்னு பஹ்ர் இப்னு தீனார் (சுனன் நஸாயீ என்ற ஹதீஸ்  நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூஅப்துர்ரஹ்மான் அந்நஸாயீ

இயற்பெயர்: அஹ்மத்

தந்தை பெயர்: ஷுஐப்

பிறந்த ஊர்: இவர் நஸா எனும் ஊரில் பிறந்தார்,

பிறப்பு: ஹிஜ்ரி 215

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானிலுள்ள குராஸான், அல்ஹிஜாஸ், எகிப்து, ஷாம் இன்னும் ஜஸீரா போன்ற உலகின் பல பாகங்களுக்கும் கல்விக்காகப் பிரயாணம் செய்துள்ளார்கள்.

அஸ்ஸுனன் நஸாயீ (ஸுனன் அல்குப்ரா, ஸுனன் அஸ்ஸுக்ரா),

ஃபலாயிலுல் குர்ஆன் (குர்ஆனுடைய சிறப்புகள் தொடர்பானது),

ஜுஸ்வுன் ஃபிஹி மஜ்லிஸானி,

அஷரதுந் நிஷா,

ஃபலாயிலுஸ் ஸஹாபா (சஹாபாக்களின் சிறப்புகள் தொடர்பானது),

அல்இக்ராப், அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன் (ஹதீஸ்களில் பலவீனமானவர்கள் இன்னும் விடப்பட்டவர்கள் தொடர்பானது),

அமலுல் யவ்மி வல்லைலா,

அல்குனா, அத்தஃப்ஸீர்,

தஸ்மியதுல் ஃபுகஹாயில் வல்அம்ஸாரி போன்ற பல புத்தகங்களை தொகுத்துள்ளார்.

இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், குதைபா, திர்மிதி, முஹம்மது இப்னு இஸ்மாயில் இப்னு உலய்யா, முஹம்மது இப்னு இஸ்மாயில் தப்ரானீ, முஹம்மது இப்னு ஹுஸைன் இப்னு இப்ராஹீமுல் ஆமிரிய்யீ, அபூதாவூத் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

யஃகூப் இப்னு முபாரக், மன்சூர் இப்னு இஸ்மாயில் அல்ஃபகீஹ், முஹம்மது இப்னுல் காஸிம் இப்னு முஹம்மது இப்னுல் ஸியாருல் குர்துபீ, அபூதய்யிப் முஹம்மது இப்னு ஃபலுல் இப்னு அப்பாஸ், ஜஃபர் இப்னு முஹம்மது இப்னுல் ஹாரிஸ் அல்கஸாயீ, இஸ்ஹாக் இப்னு அப்துல்கரீமுஸ் ஸவாஃப் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 303ல் ஸஃபர் மாதம் 13ம்நாள் ஃபலஸ்தீனில் இறந்தார். அப்போது அவருக்கு 88 வயதாகும்.(தகவல்: பயான் சைட்)

இப்ராஹீம் பின் முஹம்மத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

யஹ்யா பின் ஸயீத்

يحيى بن سعيد الأنصاري

இறப்பு: ஹிஜ்ரி 144 அல்லது அதற்குப் பிறகு, அல்ஹாஷிமியா, அன்பார்

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: யஹ்யா பின் ஸயீத் பின் கைஸ் பின் அம்ர் பின் ஸஹ்ல் பின் தஃலபா பின் அல்ஹாரிஸ் பின் ஸைத் பின் தஃலபா பின் ஃகனம் பின் மாலிக் பின் அன்நஜ்ஜார்

தந்தை பெயர்: ஸயீத் பின் கைஸ் பின் கஹ்த்

வம்சம்: அன்ஸாரீ, கஸ்ரஜ், பனூ மாலிக் பின் அன்நஜ்ஜார்

புனைப்பெயர்: அபூ ஸயீத், நீதிபதி

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, இராக், அல்ஹாஷிமியா, அன்பார், ஆப்பிரிக்கா

பிறப்பு: ஹிஜ்ரி 70க்கு முன்

இறப்பு: ஹிஜ்ரி 144 அல்லது அதற்குப் பிறகு, அல்ஹாஷிமியா, அன்பார்

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ ரஹ் அவர்கள் மதீனாவைச் சேர்ந்த மிகப் பலமான தாபிஈ ஆவார். அவர் மதீனாவின் நீதிபதியாகவும், அறிஞராகவும் திகழ்ந்தார். அஹ்மத் பின் ஹன்பல் ரஹ் அவர்கள், 'யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீயை விட மிக உறுதியானவர் யாரும் இல்லை' என்று கூறியுள்ளார்.

அந்நஸாயீ ரஹ் அவர்கள் இவரை 'மிகப் பலமானவர், உறுதியானவர்' என்றும் 'மிகப் பலமானவர், நம்பகமானவர்' என்றும் குறிப்பிட்டுள்ளார். அய்யூப் ரஹ் அவர்கள், 'யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீயை விட அறிவில் சிறந்த ஒருவரை நான் மதீனாவில் விட்டு வரவில்லை' என்று கூறியுள்ளார். லைஸ் பின் ஸஃத் ரஹ் அவர்கள், 'இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீயை விட யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீயை ஒத்த ஒருவரை நான் கண்டதில்லை.

இவ்விருவரும் இல்லையெனில் பல சுன்னத்துகள் மறைந்திருக்கும்' என்று கூறியுள்ளார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அனஸ் பின் மாலிக், ஸயீத் பின் அல்முஸய்யப், அல்காஸிம் பின் முஹம்மத், உம்ரா பின்த் அப்துர்ரஹ்மான், அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான், முஹம்மத் பின் இப்ராஹீம் அத்தைமீ, அஸ்ஸுஹ்ரீ, நாஃபிஃ, அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் ரபீஆ, உபாதா பின் அல்வலீத், அம்ர் பின் யஹ்யா, ஹுமைத் பின் அபூஹுமைத்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அஸ்ஸுஹ்ரீ, மாலிக் இமாம், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, ஸுஃப்யான் பின் உயைனா, ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், அல்லைஸ் பின் ஸஃத், இப்னு இஸ்ஹாக், முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூதிஃப், அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ, இப்ராஹீம் பின் தஹ்மான், யஸீத் பின் ஹாரூன், ஜஃபர் பின் அவ்ன்

வேறு பெயர்கள்: யஹ்யா பின் ஸயீத்


ஆதாரம்: muslimscholars.info (11062) · Should verify

உபைதுல்லாஹ் பின் அக்னஸ்

عبيد الله بن الأخنس النخعي

தரம்: பலமானவர்.


இயற்பெயர்: உபைதுல்லாஹ்

தந்தை பெயர்: அக்னஸ்

வமிசம்: அன்னகஈ, பஸரீ, கூஃபீ

ஊர் பெயர்: பஸரா, கூஃபா

கால கட்டம்: 7.


உபைதுல்லாஹ் பின் அக்னஸ் அவர்களை இப்னு மயீன், அஹ்மத், அபூதாவூத், நஸாயீ ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.

இப்னு மயீன் அவர்கள், இவரை லை பிஹீ பஃஸ் என்று கூறியதாக இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார். (இந்த வார்த்தையை இப்னு மயீன் அவர்கள் பலமானவருக்கு கூறுவார்)

மேலும் இவரின் சில செய்திகளை புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

பார்க்க: புகாரி-1595, 5737, முஸ்லிம்-2075, 4265.


இப்னு ஹிப்பான் அவர்கள், இவர் அதிகம் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார். ஆனால் இதற்கான சான்றைக் கூறவில்லை. இப்னு ஹிப்பான் அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர் என்பதால் மற்றவர்களின் நன்சான்றிதல் இருக்கும்போது இவரின் விமர்சனம் ஏற்கப்படாது.

இப்னு ஹஜர் அவர்கள், இப்னு ஹிப்பான் அவர்களின் விமர்சனம் இருப்பதால் தான் இவரை ஸதூக்-நடுத்தரமானவர் எனும் தரத்தில் கூறியுள்ளார்.


4275- ‌عبيد ‌الله ‌ابن ‌الأخنس ‌النخعي أبو مالك الخزاز بمعجمات صدوق قال ابن حبان كان يخطىء [كثيراً] من السابعة ع


* [4275] ‌عبيد ‌الله ‌بن ‌الأخنس ‌النخعي أبو مالك الخزاز بمعجمات صدوق قال بن حبان كان يخطئ من السابعة ع

قلت: حسن الحديث: قال ابن معين وأحمد وأبو داود والنسائي "ثقة" (تهذيب التهذيب 7/ 2). وأما قول ابن حبان "يخطئ" فتعقبه ابن حجر فقال "وثقه الأئمة وشذ ابن حبان فقال في الثقات "يخطئ كثيرا" (فتح الباري 10/ 199).


4275 - ‌عُبيد ‌الله ‌بن ‌الأخنس ‌النَّخَعي، أبو مالك الخزاز، بمعجمات: صدوق، قال ابن حبان: كان يُخطئ، من السابعة. ع.

• بل: ثقة، فقد وثقه أحمد بن حنبل، وابن معين، وأبو داود، والنَّسائيُّ، واحتج به الشيخان في "الصحيح" فلا نعلم لم عدل عن توثيقه، فقال: "صدوق"، مع أن أحدًا لم يطلق عليه هذه اللفظة، وقول ابن معين فيه في رواية: ليس به بأس، يعني أنَّه ثقة، فقد جاء في "مقدمة ابن الصلاح" ص 134: قال ابن أبي خيثمة: قلت ليحيى بن معين: إنك تقول: فلان ليس به بأس، وفلان ضعيف؟ قال: إذا قلت لك: ليس به بأس، فثقة، وإذا قلت لك ضعيف: فهو ليس بثقة، لا تكتب حديثه. أما قوله: "قال ابن حبان: يخطئ"، فهذا من قعقعة ابن حبان، وأين يأتي هذا القولُ تجاة الجم الغفير من الجهابذة الذين وثقوه، واحتجوا به في "الصحيح".

அம்ர் பின் ஷுஐப்

عمرو بن شعيب بن محمد بن عبد الله بن عمرو

இறப்பு: ஹி-118

தரம்: இவரைப் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் இந்த தவறுக்கு காரணம் இவரிடமிருந்து அறிவித்த பலவீனமானவர்கள் தான். இவர் காரணமல்ல. இவரை ஆரம்பகால மூத்த அறிஞர்கள் பலமானவர் என்று முடிவு செய்துள்ளனர்.


இயற்பெயர்: அம்ர்

தந்தை பெயர்: ஷுஐப்

வமிசப் பெயர்: குறஷீ, ஸஹ்மீ, மதனீ.

ஊர் பெயர்: மக்கா, மதீனா, தாயிஃப்

இறப்பு: ஹிஜ்ரி-118

கால கட்டம்: 5.


عَمْرُو بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ،

இந்த அறிவிப்பாளர்தொடரை யஹ்யா பின் ஸயீத், அபூதாவூத், இப்னு ஹஸ்ம் போன்றோர் முர்ஸல் என்றும் அல்லது முன்கதிஃ என்றும் விமர்சித்துள்ளனர். இதற்கு காரணம் இவரின் பாட்டனார் முஹம்மத் பின் அப்துல்லாஹ் என்பதால் ஆகும். இவர் தாபிஈ ஆவார். (என்றாலும் வேறு சிலர் இதில் கூறப்படும் பாட்டனார் என்பது ஷுஐப் அவர்களின் பாட்டனார் என்றும், 10 க்கும் மேற்பட்ட செய்திகளில் பாட்டனார் என்ற வார்த்தைக்குப் பின்பு அப்துல்லாஹ் பின் அம்ர் என்று தெளிவாக வந்துள்ளது என்றும் விளக்கம் கூறியுள்ளனர்.)

இப்னு ஹஸ்ம் அவர்கள், அம்ர் பின் ஷுஐப் அறிவிப்பது (அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு எழுதிவைத்திருந்த) ஒரு ஏட்டிலிருந்து-நூலிலிருந்து என்பதால் இது சரியானதல்ல என்று கூறியுள்ளார். (இது போன்று (விஜாதா எனும் முறையில்) கிடைக்கும் நூலின் செய்திகளை அதற்குரிய நிபந்தனைகளின்படி இருந்தால் ஏற்கலாம்)

இமாம் அஹ்மத், இப்னுல் மதீனீ, அல்ஹுமைதீ, இஸ்ஹாக் பின் ராஹவைஹி போன்றோர் இந்த அறிவிப்பாளர்தொடரை ஆதாரமாக ஏற்றுள்ளதை நான் பார்த்துள்ளேன் என புகாரீ இமாம் கூறியதாக திர்மிதீ இமாம் குறிப்பிட்டுள்ளார்.

இப்னு ஹஜர் அவர்கள் மற்ற பலமான செய்திக்கு இந்த அறிவிப்பாளர்தொடர் முரண்படாதபோது ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

தஹபீ அவர்கள், இந்த அறிவிப்பாளர்தொடரை பற்றிய விமர்சனங்களையும், சிலர் சரியானது என்றும் சிலர் பலவீனமானது என்றும் கூறுவர் என்ற விவரங்களையும் கூறிய பின் இந்த அறிவிப்பாளர்தொடரை சரியான ஹதீஸ்களில் உயர்ந்த தரம் என்று நாம் கூறவில்லை; இது ஹஸன் தரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: அல்முஹல்லா-4/38, இலலுத் திர்_மிதீ-108/181, தஹ்தீபுத் தஹ்தீப்-8/48, மீஸானுல் இஃதிதால்-268, தாரீகுல் கபீர்...

ஷுஐப் பின் முஹம்மத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நபித்தோழர்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.