தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3177

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

“அந்நூர்-அந்த ஒளி” எனும் அத்தியாயத்தின் வசனங்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவில்) மர்ஸத் பின் அபூமர்ஸத் (ரலி) எனும் ஒரு மனிதர் இருந்தார். அவர் மக்காவிலிருந்து மதீனாவிற்குக் கைதிகளை (இரவோடு இரவாக) தூக்கி வந்து சேர்ப்பவராகவும் இருந்தார்.

(அவர் கூறுகிறார்):

மக்காவில் அனாக் எனும் (பெயரில்) விபச்சாரி ஒருத்தி இருந்தாள். அவள் (நான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்பு) என்னுடைய காதலியாக இருந்தாள். நான் ஒரு மனிதரை இவ்வாறு அழைத்து செல்வதாக வாக்குறிதி அளித்திருந்தேன்.

(எனவே அவரை அழைப்பதற்காக நான் சென்றேன். அது இரவு நேரம் என்பதால்) இரவில் நிலவின் வெளிச்சம் இருக்கும்போது மக்காவின் சுவர் ஒன்றின் நிழலில் ஒதுங்கினேன். அப்போது அனாக் என்பவள் சுவரின் ஓரத்தில் என் நிழல் தெரியவே என்னை நெருங்கி வந்து என்னை அடையாளம் கண்டுவிட்டாள். அவள், மர்ஸதா? என்று கேட்க, நான், ஆம் என்று கூறினேன். உடனே அவள், மர்ஸதே! வருக, வருக! இவ்விரவில் என்னிடம் தங்கிவிட்டுச் செல்வீராக!” என்று கூறினாள். (அப்போது நான் அவளிடம்) “அனாக்! திண்ணமாக அல்லாஹ் விபச்சாரத்தைத் தடை செய்துவிட்டான்” என்று கூறினேன். உடனே அவள், “கூடாரங்களில் இருப்போரே! (மக்களே) இவர் உங்களுடைய கைதிகளை மக்காவிலிருந்து மதீனாவிற்குக் கொண்டுசெல்பவர்” என்று கூறி (என்னைப் பிடிக்கச் சொன்)னாள்.

உடனே என்னை எட்டுப்பேர் பிடிக்க வந்தார்கள். நான் (மக்காவின் மலையான) ‘கன்தமா’ நோக்கி ஓடிச் சென்று ஒரு குகையில் ஒளிந்து கொண்டிருந்தேன். அவர்கள் தேடி வந்தார்கள். என் தலைக்கு மேல் வந்துவிட்டார்கள். (நான் கீழே ஒரு குகையில் ஒளிந்து கொண்டிருந்தேன்.) அங்கு அவர்கள் சிறுநீர் கழித்தார்கள். அவர்களின் சிறுநீர்ச் சாரல் என்மீது பட்டது. என்னைப் பார்க்க விடாமல் அல்லாஹ் அவர்க(ளின் கண்க)ளைக் குருடாக்கிவிட்டான். பிறகு அவர்கள் சென்றுவிட்டார்கள்.

பிறகு நான் என்னுடைய அந்தத் தோழரிடம் சென்று அவரைச் சுமந்துகொண்டு ‘இத்கிர்’ எனும் பகுதிக்கு வந்து, (அவர் மிகவும் கனமானவராக இருந்ததால் சுமை குறைய) அவருடைய (கையில் இருந்த) பெரிய விலங்கை உடைத்து அவரை மதீனா கொண்டு வந்து விட்டேன். பின்னர் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அனாக் என்பவளைத் திருமணம் செய்துகொள்ளலாமா?’ என்று கேட்டேன். அவர்கள் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள். அப்போது,

விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான்.  விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள்

எனும் (அல்குர்ஆன்: 24:3) வது வசனம் இறங்கியது. உடனே அவர்கள் மர்ஸதே! என்று என்னை அழைத்து என்னிடம் இந்த இறைவசனத்தை ஓதிக்காட்டி, “எனவே அவளை மண முடிக்காதே!” என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இந்தச் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்திருப்பதாக நாம் அறிகிறோம்.

(திர்மதி: 3177)

بَابٌ: وَمِنْ سُورَةِ النُّورِ

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الأَخْنَسِ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ:

كَانَ رَجُلٌ يُقَالُ لَهُ: مَرْثَدُ بْنُ أَبِي مَرْثَدٍ، وَكَانَ رَجُلًا يَحْمِلُ الأَسْرَى مِنْ مَكَّةَ حَتَّى يَأْتِيَ بِهِمُ المَدِينَةَ، قَالَ: وَكَانَتْ امْرَأَةٌ بَغِيٌّ بِمَكَّةَ يُقَالُ لَهَا: عَنَاقٌ وَكَانَتْ صَدِيقَةً لَهُ، وَإِنَّهُ كَانَ وَعَدَ رَجُلًا مِنْ أُسَارَى مَكَّةَ يَحْمِلُهُ، قَالَ: فَجِئْتُ حَتَّى انْتَهَيْتُ إِلَى ظِلِّ حَائِطٍ مِنْ حَوَائِطِ مَكَّةَ فِي لَيْلَةٍ مُقْمِرَةٍ، قَالَ: فَجَاءَتْ عَنَاقٌ فَأَبْصَرَتْ سَوَادَ ظِلِّي بِجَنْبِ الحَائِطِ فَلَمَّا انْتَهَتْ إِلَيَّ عَرَفَتْ، فَقَالَتْ: مَرْثَدٌ؟ فَقُلْتُ: مَرْثَدٌ. فَقَالَتْ: مَرْحَبًا وَأَهْلًا هَلُمَّ فَبِتْ عِنْدَنَا اللَّيْلَةَ. قَالَ: قُلْتُ: يَا عَنَاقُ حَرَّمَ اللَّهُ الزِّنَا، قَالَتْ: يَا أَهْلَ الخِيَامِ، هَذَا الرَّجُلُ يَحْمِلُ أُسَرَاءَكُمْ، قَالَ: فَتَبِعَنِي ثَمَانِيَةٌ وَسَلَكْتُ الخَنْدَمَةَ فَانْتَهَيْتُ إِلَى كَهْفٍ أَوْ غَارٍ فَدَخَلْتُ، فَجَاءُوا حَتَّى قَامُوا عَلَى رَأْسِي فَبَالُوا فَظَلَّ بَوْلُهُمْ عَلَى رَأْسِي وَعَمَّاهُمُ اللَّهُ عَنِّي، قَالَ: ثُمَّ رَجَعُوا وَرَجَعْتُ إِلَى صَاحِبِي فَحَمَلْتُهُ وَكَانَ رَجُلًا ثَقِيلًا حَتَّى انْتَهَيْتُ إِلَى الإِذْخِرِ، فَفَكَكْتُ عَنْهُ أَكْبُلَهُ فَجَعَلْتُ أَحْمِلُهُ وَيُعْيِينِي حَتَّى قَدِمْتُ المَدِينَةَ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَنْكِحُ عَنَاقًا؟ فَأَمْسَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَرُدَّ عَلَيَّ شَيْئًا حَتَّى نَزَلَتْ الزَّانِي لَا يَنْكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مَرْثَدُ الزَّانِي لَا يَنْكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ، فَلَا تَنْكِحْهَا»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3177.
Tirmidhi-Alamiah-3101.
Tirmidhi-JawamiulKalim-3120.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . அப்து பின் ஹுமைத்

3 . ரவ்ஹு பின் உபாதா

4 . உபைதுல்லாஹ் பின் அக்னஸ்

5 . அம்ர் பின் ஷுஐப்

6 . ஷுஐப் பின் முஹம்மத்

7 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


இந்தச் செய்தியை உபைதுல்லாஹ் பின் அக்னஸ் அவர்களிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர். சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.


1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • உபைதுல்லாஹ் பின் அக்னஸ் —> அம்ர் பின் ஷுஐப் —>  ஷுஐப் பின் முஹம்மத் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: அபூதாவூத்-2051 , திர்மிதீ-3177 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-3228 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,


  • உபைதுல்லாஹ் பின் அக்னஸ் —> அம்ர் பின் ஷுஐப் —>  ஷுஐப் பின் முஹம்மத் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) —> மர்ஸத் பின் அபூமர்ஸத் (ரலி)

பார்க்க: ஹாகிம்-,


  • காஸிம் பின் முஹம்மத் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, குப்ரா நஸாயீ-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-, …


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.