Author: Farook

muwatta-malik-21

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 5

நேரங்களின் கட்டாயம்

21. எவருக்கு அஸர் த் தொழுகை தவறி விடுகிறதோ, அவர் தனது குடும்பத்தவரையும், செல்வத்தையும் இழந்தவர் போன்றவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் உள்ளது)


«الَّذِي تَفُوتُهُ صَلَاةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ»


muwatta-malik-20

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

20. சூரியன் சாய்வது என்பது, அதன் நிழல் சாய்வது என்பதாகும். இரவு சூழ்வது என்பது, இரவு சூழ்ந்து, அதன் இருள் ஏற்படுவதாகும் என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) கூறுவார்கள் என முக்பின் தனக்கு கூறியதாக தாவூத் இப்னு ஹுஸைன் என்பார் கூறுகின்றார்கள்.


دُلُوكُ الشَّمْسِ إِذَا فَاءَ الْفَيْءُ ، وَغَسَقُ اللَّيْلِ اجْتِمَاعُ اللَّيْلِ وَظُلْمَتُهُ


muwatta-malik-19

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 4

சூரியன் சாய்வது, இரவு சூழ்வது பற்றிய ஹதீஸ்கள்

19. ‘துலூகி ஷம்சீ” என்பது, சூரியன் நன்றாக சாய்வது என்பதாகும் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


دُلُوكُ الشَّمْسِ : مَيْلُهَا


muwatta-malik-18

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

18. ருகூஉ வை அடைந்தவர், ஸஜ்தாவை (அந்த ரக்அத்தை) அடைந்தவராவார். சூரா பாத்திஹா (கேட்க) கிடைக்கவில்லையானால் அதிக நன்மை அவருக்குத் தவறி விடும் என அபூஹுரைரா(ரலி) கூறினார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


مَنْ أَدْرَكَ الرَّكْعَةَ فَقَدْ أَدْرَكَ السَّجْدَةَ ، وَمَنْ فَاتَهُ قِرَاءَةُ أُمِّ الْقُرْآنِ فَقَدْ فَاتَهُ خَيْرٌ كَثِيرٌ


muwatta-malik-17

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17. ருகூஉ வை அடைந்தவர், ஸஜ்தாவை அடைந்தவராவார் என அப்துல்லா இப்னு உமர்(ரலி), ஸைது இப்னு ஸாபித்(ரலி) இருவரும் கூறினார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாகக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


مَنْ أَدْرَكَ الرَّكْعَةَ فَقَدْ أَدْرَكَ السَّجْدَةَ


muwatta-malik-16

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

16. ருகூஉ உமக்கு கிடைக்கவில்லையானால், ஸஜ்தாவும் உமக்குக் கிடைக்காது என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


إِذَا فَاتَتْكَ الرَّكْعَةُ فَقَدْ فَاتَتْكَ السَّجْدَةُ


muwatta-malik-15

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 3

தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர்

15. தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர், அந்தத் தொழுகையையே அடைந்தவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ யிலும் உள்ளது).


«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلَاةِ فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ»


muwatta-malik-14

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

14. உதுமான்(ரலி) அவர்கள் மதீனாவில் ஜும்ஆத் தொழ வைப்பார்கள். பின்பு ‘மலல்” என்ற இடத்தில் அஸரைத் தொழ வைப்பார்கள் என இப்னு அபீ ஸலீத் என்பார் கூறுகின்றார்கள்.


أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ «صَلَّى الْجُمُعَةَ بِالْمَدِينَةِ، وَصَلَّى الْعَصْرَ بِمَلَلٍ»،

قَالَ مَالِكٌ: «وَذَلِكَ لِلتَّهْجِيرِ وَسُرْعَةِ السَّيْرِ»


muwatta-malik-13

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 2

ஜும்ஆத் தொழுகையின் நேரங்கள்

13: ஜும்ஆ நாளன்று அகீல் இப்னு அபீதாலிப் உடைய ஆடைவிரிப்பை பள்ளியின் மேற்குப் புறத்து சுவற்றின் பக்கம் போடப்படுவதை நான் பார்த்துள்ளேன். அந்த ஆடை விரிப்பு முழுவதையும் சுவற்றின் நிழல் மூடி விட்டால் உமர்(ரலி) அவர்கள் (வீட்டை விட்டு) வெளியேறி வந்து, ஜும்ஆத் தொழுகை நடத்துவார்கள். பின்பு நாங்கள் ஜும்ஆத் தொழுகைக்குப் பின்பு வந்து லுஹா (பகல்) நேரத்தூக்கம் தூங்குவோம் என அபூஸுஹைல் அவர்களின் தந்தை மாலிக் கூறுகின்றார்கள்.


كُنتُ أَرَى طِنْفَسَةً لِعَقِيلِ بنِ أَبِي طَالِبٍ، يومَ الْجُمُعَةِ تُطرَحُ إِلى جِدَارِ الْمَسْجِدِ الْغَرْبِيِّ، فَإِذَا غَشِيَ الطِّنْفِسَةَ كُلَّهَا ظِلُّ الْجِدَارِ «خَرَجَ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَصَلَّى الْجُمُعَةَ»، قَالَ مَالِكٌ وَالِدُ أَبِي سُهَيلٍ: ثُمَّ نَرْجِعُ بَعْدَ صَلَاةِ الْجُمُعَةِ فَنَقِيلُ قَائِلَةَ الضَّحَاءِ


muwatta-malik-11

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அஸ்ர் தொழுவோம். பிறகு எங்களில் (மேட்டுப்பகுதிகளில் ஒன்றான) “குபா”வுக்குச் செல்பவர் அங்கு சென்றடைவார். அப்போதும் சூரியன் (வானில்) உயர்ந்தே இருக்கும்.


كُنَّا «نُصَلِّي الْعَصْرَ، ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ إِلَى قُبَاءٍ، فَيَأْتِيهِمْ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»


Next Page » « Previous Page