Author: Farook

muwatta-malik-10

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

10. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அஸர் தொழுகை தொழுவோம். பிறகு (எங்களில்) ஒரு மனிதர் பனூ அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரிடம் புறப்பட்டுச் செல்வார். அப்போது அவர்கள் அஸர் தொழுகை தொழுதுகொண்டிருப்பதைக் காண்பார்.


كُنَّا «نُصَلِّي الْعَصْرَ، ثُمَّ يَخْرُجُ الْإِنْسَانُ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ، فَيَجِدُهُمْ يُصَلُّونَ الْعَصْرَ»


muwatta-malik-9

ஹதீஸின் தரம்: Pending

9. தொழுகையின் நேரம் பற்றி அபூஹுரைரா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ”நான் உனக்கு அறிவிக்கிறேன். உன் நிழல் உன் போன்று ஆகி விட்டால் லுஹரையும், உனது நிழல் உன் போன்று இரண்டு மடங்காகி விட்டால் அஸரையும், சூரியன் மறைந்து விட்டால் மஹ்ரிபையும், உன(து ஆரம்ப இரவு)க்கும், இரவின் மூன்றாவது பகுதிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இஷாவையும் தொழுது கொள். இரவின் கடைசி இருளின் போது சுப்ஹையும் தொழுது கொள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாக உம்மு சல்மா(ரலி) அவர்களின் அடிமை அப்துல்லா இப்னு ராபீஉ என்பவர் கூறுகின்றார்கள்.

(இது திர்மிதீ, நஸயீயிலும் உள்ளது).


أَنَّهُ سَأَلَ أَبَا هُرَيْرَةَ عَنْ وَقْتِ الصَّلَاةِ.؟ فَقَالَ أَبُو هُرَيْرَةَ: أَنَا أُخْبِرُكَ «صَلِّ الظُّهْرَ إِذَا كَانَ ظِلُّكَ مِثْلَكَ وَالْعَصْرَ إِذَا كَانَ ظِلُّكَ مِثْلَيْكَ، وَالْمَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ، وَالْعِشَاءَ مَا بَيْنَكَ وَبَيْنَ ثُلُثِ اللَّيْلِ، وَصَلِّ الصُّبْحَ بِغَبَشٍ» يَعْنِي الْغَلَسَ


muwatta-malik-8

ஹதீஸின் தரம்: Pending

8. உர்வா (ரஹ்)  அறிவித்தார்.

உமர் (ரலி) அவர்கள், அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்களுக்கு

சூரியன் நன்கு வெண்மையாகியதும், ஒரு பயணி ஒன்பது மைல் தூரம் சாதாரண முறையில் பயணம் செய்யும் அளவு வரை அஸரைத் தொழு! (இரவின் முந்திய) உனது நேரத்திற்கும், இரவின் மூன்றாவது நேரத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் இஷாவைத் தொழு! தாமதப்படுத்தினால் இரவின் இறுதிப் பகுதி வரை (தாமதப்படுத்திக் கொள்). ”தொழ அலுப்பாகக் கூடியவர்களில் ஒருவராகி விடாதே”” என்று   கடிதம் எழுதினார்கள்.

 


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَتَبَ إِلَى أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ أَنْ «صَلِّ الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ نَقِيَّةٌ، قَدْرَ مَا يَسِيرُ الرَّاكِبُ ثَلَاثَةَ فَرَاسِخَ، وَأَنْ صَلِّ الْعِشَاءَ، مَا بَيْنَكَ وَبَيْنَ ثُلُثِ اللَّيْلِ. فَإِنْ أَخَّرْتَ فَإِلَى شَطْرِ اللَّيْلِ، وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ»


muwatta-malik-7

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7. அபூ ஸுஹைல் தன் தந்தை கூறியதாகக் கூறுகிறார்கள்.

சூரியன் சாய்ந்து விட்டால் லுஹரையும், சூரியன் வெண்மையாகி, மஞ்சனிக்கும் முன் அஸரையும், சூரியன் மறைந்து விட்டால் மஹ்ரிபையும் தொழுது கொள்வீராக!

தூக்கம் வரும் வரை இஷாவை பிற்படுத்திச் செய். நெருக்கமாகவும், பிரகாசமாகவும் நட்சத்திரங்கள் உள்ள போது சுப்ஹைத் தொழு. குர்ஆனில் நீண்ட இரண்டு அத்தியாயங்களை, அதில் ஓது என அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் கடிதம் எழுதினார்கள்.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அபூ மூஸா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்:

“சூரியன் சாய்ந்ததும் லுஹர் தொழுகையை நிறைவேற்றுவீராக. அஸ்ர் தொழுகையை சூரியன் வெண்மையாகவும், தெளிவாகவும் இருக்கும்போதே நிறைவேற்றுவீராக, மஞ்சள் நிறம் அதற்குள் நுழையும் முன். சூரியன் மறைந்ததும் மக்ரிப் தொழுகையை நிறைவேற்றுவீராக. இஷா தொழுகையை நீர் தூங்கும் வரை தாமதப்படுத்துவீராக. சுப்ஹு தொழுகையை நட்சத்திரங்கள் பிரகாசமாகவும், ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தும் இருக்கும்போதே நிறைவேற்றுவீராக. மேலும் அதில் முஃபஸ்ஸலின் இரண்டு நீண்ட சூராக்களை ஓதுவீராக.”


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَتَبَ إِلَى أَبِي مُوسَى: أَنْ «صَلِّ الظُّهْرَ، إِذَا زَاغَتِ الشَّمْسُ. وَالْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ نَقِيَّةٌ، قَبْلَ أَنْ يَدْخُلَهَا صُفْرَةٌ. وَالْمَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ، وَأَخِّرِ الْعِشَاءَ مَا لَمْ تَنَمْ. وَصَلِّ الصُّبْحَ، وَالنُّجُومُ بَادِيَةٌ مُشْتَبِكَةٌ. وَاقْرَأْ فِيهَا بِسُورَتَيْنِ طَوِيلَتَيْنِ مِنَ الْمُفَصَّلِ»


muwatta-malik-6

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

6. அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களின் அடிமை நாபிஉ  (ரஹ்) அறிவித்தார்.

என்னிடம் உங்களின் காரியங்களில் மிக முக்கியமானது, தொழுகை தான். ஒருவர் அதை (தானும்) பேணி, அதன் மீது (பிறரைப்) பேணச் செய்தால் தன் மார்க்கத்தை பேணியவராவார். ஒருவர் அதை பாழாக்கினால் அவர் அது அல்லாத மற்றவைகளை ரொம்ப பாழாக்கி விடுவார் என உமர்(ரலி) அவர்கள் தன் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார்கள்.

மேலும், நிழல் ஒரு முழம் சாய்ந்து விட்டால், உங்களில் ஒருவரது நிழல் அவரைப் போன்று ஆகும் வரை அஸர் தொழுங்கள். சூரியன் மறையும்முன் ஆறு மைலோ அல்லது ஒன்பது மைலோ எளிதான பயணம் செல்பவரின் கால அளவுக்கு வெள்ளையாக சூரியன் உயர்ந்த நிலையில் அஸரையும், சூரியன் மறைந்து விட்டால் மஹ்ரிபையும், சூரியனின் மஞ்சள் நிறம் மறைந்து விட்டால், இரவின் மூன்றாவது பகுதி வரை இஷாவையும் (தொழுங்கள்). தூக்கம் வந்தால் (இஷாவை) தொழாமல் தூங்க வேண்டாம் என்று மூன்று முறை குறிப்பிட்டும், நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து தெளிவாக இருக்கும் நிலையில் சுப்ஹையும் (தொழுங்கள்) என்றும் (கடிதத்தில்) எழுதினார்கள்.

 

 


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَتَبَ إِلَى عُمَّالِهِ: ” إِنَّ أَهَمَّ أَمْرِكُمْ عِنْدِي الصَّلَاةُ. فَمَنْ حَفِظَهَا وَحَافَظَ عَلَيْهَا، حَفِظَ دِينَهُ. وَمَنْ ضَيَّعَهَا فَهُوَ لِمَا سِوَاهَا أَضْيَعُ،

ثُمَّ كَتَبَ: أَنْ صَلُّوا الظُّهْرَ، إِذَا كَانَ الْفَيْءُ ذِرَاعًا، إِلَى أَنْ يَكُونَ ظِلُّ أَحَدِكُمْ  مِثْلَهُ. وَالْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ بَيْضَاءُ نَقِيَّةٌ، قَدْرَ مَا يَسِيرُ الرَّاكِبُ فَرْسَخَيْنِ أَوْ ثَلَاثَةً، قَبْلَ غُرُوبِ الشَّمْسِ وَالْمَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ. وَالْعِشَاءَ إِذَا غَابَ الشَّفَقُ إِلَى ثُلُثِ اللَّيْلِ. فَمَنْ نَامَ فَلَا نَامَتْ عَيْنُهُ. فَمَنْ نَامَ فَلَا نَامَتْ عَيْنُهُ فَمَنْ نَامَ فَلَا نَامَتْ عَيْنُهُ “. وَالصُّبْحَ وَالنُّجُومُ بَادِيَةٌ مُشْتَبِكَةٌ


muwatta-malik-5

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் உதயமாகும் முன் ஸுப்ஹு தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்தவர் ஸுப்ஹு தொழுகையை அடைந்தவராவார். சூரியன் மறையும் முன் அஸ்ர் தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்தவர் அஸ்ர் தொழுகையை அடைந்தவராவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصُّبْحِ، قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ»


muwatta-malik-4

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுப்ஹு தொழுகையை நடத்தி முடிப்பார்கள். (தொழுகைக்கு வந்து தொழுத) பெண்கள் தங்கள் மேலாடைகளால் போர்த்திக் கொண்டு திரும்புவார்கள். இருட்டில் அவர்களை அடையாளம் காண முடியாது.


إِنْ «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُصَلِّي الصُّبْحَ»، فَيَنْصَرِفُ النِّسَاءُ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، مَا يُعْرَفْنَ مِنَ الْغَلَسِ


muwatta-malik-3

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3. அதாஉ பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்கள். மறுநாள் ஃபஜ்ர் நேரம் உதயமானதும் ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். பின்பு (மறுநாள்) கிழக்கு வெளுத்தப் பின் (அதாவது நன்கு வெளிச்சம் ஆன பிறகு) ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள்.

பின்னர், “தொழுகையின் நேரம் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்று கேட்டார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் இங்கே இருக்கிறேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “(நேற்றும் இன்றும் தொழ வைத்த) இந்த இரண்டு நேரங்களுக்கு இடைப்பட்ட நேரம் தான் (ஸுப்ஹுத் தொழுகையின்) நேரம்” என கூறினார்கள்.


جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ عَنْ وَقْتِ صَلَاةِ الصُّبْحِ. قَالَ: فَسَكَتَ عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كَانَ مِنَ الْغَدِ، صَلَّى الصُّبْحَ حِينَ طَلَعَ الْفَجْرُ، ثُمَّ صَلَّى الصُّبْحَ مِنَ الْغَدِ بَعْدَ أَنْ أَسْفَرَ. ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟» قَالَ: هَأَنَذَا يَا رَسُولَ اللَّهِ فَقَالَ: «مَا بَيْنَ هَذَيْنِ وَقْتٌ»


muwatta-malik-2

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2. மேலும் உர்வா (ரஹ்) அறிவித்தார்:

எனது அறையிலிருந்து சூரிய ஒளி (முழுவதும்) அகலாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை நடத்துவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.


 أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا، قَبْلَ أَنْ تَظْهَرَ»


muwatta-malik-1

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

بسم الله الرحمن الرحيم

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அல்லாஹ், நமது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள் புரிவானாக! மேலும் அவர்களுக்கு முழுமையான சாந்தி அளிப்பானாக!


முஅத்தா மாலிக் நூலின் பிரதிகளில் இந்த பிரதியின் அறிவிப்பாளர்தொடர்:

“மார்க்க மேதை அபூஅப்துல்லாஹ்-முஹம்மது பின் ஃபரஜ் (ரஹ்) (ரலியல்லாஹு அன்ஹு-அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக!) அவர்கள் இந்த மாலிக் நூலை, அல்காழீ அபுல்வலீத் யூனுஸ் பின் அப்தில்லாஹ் பின் முஃகீஸ் (குர்துபாவின் நீதிபதி; இப்னுஸ் ஸஃப்பார் என்று பிரபலமானவர்) —> அபூஈஸா யஹ்யா பின் அப்தில்லாஹ் பின் அபூஈஸா —> உபைதுல்லாஹ் பின் யஹ்யா —> யஹ்யா அல்லைஸீ என்ற அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார்கள்.

இதை (ஸ்பெயினின்) குர்துபா எனும் நகரில் உள்ள அவரது மஸ்ஜிதில், ரபீஉல் ஆகிர் மாதத்தின் ஆரம்பத்தில், ஹிஜ்ரீ 494 ஆம் ஆண்டில், அவரிடம் (மாலிக் நூல்) படித்துக் காட்டப்பட்டது. அப்பொழுது நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.


அத்தியாயம்: 1

தொழுகை

பாடம்: 1

தொழுகையின் நேரங்கள்.

1. இப்னு ஷிஹாப்-முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அப்துல்அஸீஸ் ஒரு

أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ أَخَّرَ الصَّلَاةَ يَوْمًا ، فَدَخَلَ عَلَيْهِ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ، فَأَخْبَرَهُ أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ أَخَّرَ الصَّلَاةَ يَوْمًا وَهُوَ بِالْكُوفَةِ ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو مَسْعُودٍ الْأَنْصَارِيُّ فَقَالَ مَا هَذَا يَا مُغِيرَةُ؟ أَلَيْسَ قَدْ عَلِمْتَ أَنَّ جِبْرِيلَ نَزَلَ فَصَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – فَقَالَ : بِهَذَا أُمِرْتُ ،

فَقَالَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ : اعْلَمْ مَا تُحَدِّثُ يَا عُرْوَةُ ، أَوَ إِنَّ جِبْرِيلَ هُوَ الَّذِي أَقَامَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقْتَ الصَّلَاةِ  –

قَالَ عُرْوَةُ : كَذَلِكَ كَانَ بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيُّ يُحَدِّثُ عَنْ أَبِيهِ


Next Page » « Previous Page