Author: Abdul Hakkim

Tirmidhi-103

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

பெருந்தொடக்கினால் குளிப்பது (கட்டாயம்) என்பது குறித்து வந்துள்ளவை.

103. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தேன். அவர்கள் பெருந்துடக்கினால் (கடமையான) குளிப்பை நிறைவேற்றினார்கள். அப்போது இடது கையால் பாத்திரத்தை வலது கையின் மீது சாய்த்து, தமது இரு உள்ளங்கைகளையும் கழுவினார்கள். பிறகு தமது கையை பாத்திரத்தினுள் நுழைத்து, தமது மர்ம உறுப்பின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பிறகு தமது கையால் சுவரையோ அல்லது தரையையோ தேய்த்து, வாய் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். பின்னர் தமது முகத்தையும், இரு முழங்கைகளையும் கழுவினார்கள். பிறகு தமது தலையின் மீது மும்முறை தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் தமது உடலின் மற்ற பாகங்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பிறகு சற்றே விலகிச் சென்று தமது கால்களைக் கழுவினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன், ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் உம்மு ஸலமா (ரலி), ஜாபிர் (ரலி), அபூஸயீத் (ரலி), ஜுபைர் பின் முத்இம் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.


«وَضَعْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسْلًا، فَاغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، فَأَكْفَأَ الإِنَاءَ بِشِمَالِهِ عَلَى يَمِينِهِ، فَغَسَلَ كَفَّيْهِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَأَفَاضَ عَلَى فَرْجِهِ، ثُمَّ دَلَكَ بِيَدِهِ الحَائِطَ، أَوِ الأَرْضَ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى رَأْسِهِ ثَلَاثًا، ثُمَّ أَفَاضَ عَلَى سَائِرِ جَسَدِهِ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ رِجْلَيْهِ»


Tirmidhi-102

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

102. அபூஉபைதா பின் முஹம்மத் பின் அம்மார் பின் யாஸிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் காலுறைகள் மீது மஸ்ஹு செய்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “என் சகோதரர் மகனே! அது நபிவழி” என்று பதிலளித்தார்கள். மேலும் நான் தலைப்பாகை மீது மஸ்ஹு செய்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “முடிக்குத் தண்ணீர் படச் செய்” என்று பதிலளித்தார்கள்.


سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنِ المَسْحِ عَلَى الخُفَّيْنِ؟ فَقَالَ: «السُّنَّةُ يَا ابْنَ أَخِي»، وَسَأَلْتُهُ عَنِ المَسْحِ عَلَى العِمَامَةِ؟ فَقَالَ: «أَمِسَّ الشَّعَرَ المَاءَ»


Tirmidhi-101

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

101. பிலால் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் காலுறைகள் மீதும் தலைப்பாகை மீதும் (மஸ்ஹு) ஈரக் கையால் தடவினார்கள்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ عَلَى الخُفَّيْنِ وَالخِمَارِ»


Alilal-Ibn-Abi-Hatim-322

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

322.


رحِم الله من صلّى قبل العصرِ أربعًا.
فقال : دع ذي.
فقُلتُ : إِنَّ أبا داوُد قد رواهُ.
فقال أبُو الولِيدِ : كان ابنُ عُمر يقُولُ : حفِظتُ عنِ النّبِيِّ صلى الله عليه وسلم عشر ركعاتٍ فِي اليومِ واللّيلةِ ، فلو كان هذا لعدّهُ.
قال أبِي : يعنِي ، كان يقُولُ : حفِظتُ اثني عشر ركعة.


Tirmidhi-3579

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3579. அல்லாஹ் தன் அடியாருக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் இரவின் கடைசிப் பகுதி நேரமாகும். எனவே அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களில் நீயும் ஒருவனாக இருக்க முடிந்தால், அவ்வாறு இருப்பாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி)


«أَقْرَبُ مَا يَكُونُ الرَّبُّ مِنَ العَبْدِ فِي جَوْفِ اللَّيْلِ الآخِرِ، فَإِنْ اسْتَطَعْتَ أَنْ تَكُونَ مِمَّنْ يَذْكُرُ اللَّهَ فِي تِلْكَ السَّاعَةِ فَكُنْ»


Kubra-Nasaayi-4369

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4369.


«عِصَابَتَانِ مِنْ أُمَّتِي عِصَابَةٌ تَغْزُو الْهِنْدَ، وَعِصَابَةٌ تَكُونُ مَعَ عِيسَى ابْنِ مَرْيَمَ»


Kubra-Bayhaqi-18600

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

18600.


عِصَابَتَانِ مِنْ أُمَّتِي أَحْرَزَهُمَا اللهُ مِنَ النَّارِ: عِصَابَةٌ تَغْزُو الْهِنْدَ , وَعِصَابَةٌ تَكُونُ مَعَ عِيسَى ابْنِ مَرْيَمَ عَلَيْهِمَا السَّلَامُ


Almujam-Alawsat-6741

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

6741. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தின் இரு கூட்டத்தினரை அல்லாஹ் நரகத்திலிருந்து பாதுகாப்பான்.

1 . ஒரு கூட்டம் இந்தியாவுடன் போர் செய்யும்.
2 . மற்றொன்று மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்களுடன் இருக்கும்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி ஸவ்பான் (ரலி) வழியாக இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ அவர்கள் மட்டுமே இந்தச் செய்தியை (தனித்து) அறிவித்துள்ளார்.


«عِصَابَتَانِ مِنْ أُمَّتِي أَحْرَزَهُمَا اللَّهُ مِنَ النَّارِ: عِصَابَةٌ تَغْزُو الْهِنْدَ، وَعِصَابَةٌ تَكُونُ مَعَ عِيسَى ابْنِ مَرْيَمَ»


Musnad-Ahmad-22396

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22396.


عِصَابَتَانِ مِنْ أُمَّتِي أَحْرَزَهُمُ اللَّهُ مِنَ النَّارِ: عِصَابَةٌ تَغْزُو الْهِنْدَ، وَعِصَابَةٌ تَكُونُ مَعَ عِيسَى ابْنِ مَرْيَمَ


Nasaayi-3175

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3175. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தின் இரு கூட்டத்தினரை அல்லாஹ் நரகத்திலிருந்து பாதுகாப்பான்.

1 . ஒரு கூட்டம் இந்தியாவுடன் போர் செய்யும்.
2 . மற்றொன்று மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்களுடன் இருக்கும்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


عِصَابَتَانِ مِنْ أُمَّتِي أَحْرَزَهُمَا اللَّهُ مِنَ النَّارِ: عِصَابَةٌ تَغْزُو الْهِنْدَ، وَعِصَابَةٌ تَكُونُ مَعَ عِيسَى ابْنِ مَرْيَمَ عَلَيْهِمَا السَّلَام


Next Page » « Previous Page