தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-2232

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

2232. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திடம் ஏற்பட்ட பொறாமை, குரோதம் எனும் நோய் உங்களுக்கும் ஏற்பட்டு விட்டது. அவை மழித்துவிடக் கூடியது. அவை முடியை மழிக்கும் என்று நான் கூறவில்லை. மாறாக மார்க்கத்தை மழித்து விடும்.

“என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. உங்கள் உள்ளத்தில் நேசத்தை ஏற்படுத்தும் ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)…

அறிவிப்பவர் : (ரலி)

ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)

ஸுபைர் பின் அவ்வாம்-அல்மதனீ (ரலி) – Zubayr ibn al-Awwam

இறப்பு: ஹிஜ்ரி 36, பஸரா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஸுபைர் பின் அவ்வாம் பின் குவைலித் பின் அஸத் பின் அப்துல் உஸ்ஸா பின் குஸய்யி பின் கிலாப் பின் முர்ரா

தந்தை பெயர்: அவ்வாம் பின் குவைலித்

வம்சம்: குரைஷீ, அஸதீ

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ், ஹவாரிய்யுன் நபி (நபி (ஸல்) அவர்களின் சீடர்)

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 28, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 36, பஸரா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

ஸுபைர் பின் அவ்வாம் ரலி அவர்கள் நபித்தோழர் ஆவார். இவர் நபி (ஸல்) அவர்களின் அத்தை ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் அவர்களின் மகன். சுவர்க்கம் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட பத்து நபித்தோழர்களில் இவரும் ஒருவர்.

அல்லாஹ்வின் பாதையில் முதன்முதலில் வாளை உருவியவர் இவரே. பத்ர் உட்பட நபி (ஸல்) அவர்களுடன் அனைத்துப் போர்களிலும் கலந்துகொண்டார். ஹிஜ்ரி 36 ஆம் ஆண்டு பஸரா அருகே ஷஹீதாக்கப்பட்டார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், உர்வா பின் அஸ்ஸுபைர், அஹ்னஃப் பின் கைஸ், கைஸ் பின் அபூஹாஸிம், மாலிக் பின் அவ்ஸ் பின் அல்ஹதஸான், மைமூன் பின் மெஹ்ரான், நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம், ஹஸன் அல் பஸரீ, முஸ்லிம் பின் ஜுன்துப் அல்ஹுதலீ, அபூ ஜர்வ் அல்மாஸினீ, அபூ ஹகீம், உம்மு அதா

வேறு பெயர்கள்: அபூ அப்துல்லாஹ், அஸ்ஸுபைர்


ஆதாரம்: muslimscholars.info (7) · Should verify


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورِ بْنِ سَيَّارٍ، قَالَ: نا خَلَفُ بْنُ مُوسَى بْنِ خَلَفٍ، قَالَ: نا أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ يَعِيشَ بْنِ الْوَلِيدِ، مَوْلًى لِابْنِ الزُّبَيْرِ، عَنِ ابْنِ الزُّبَيْرِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«دَبَّ إِلَيْكُمْ دَاءُ الْأُمَمِ قَبْلَكُمُ الْبَغْضَاءُ وَالْحَسَدُ، وَالْبَغْضَاءُ وَهِيَ الْحَالِقَةُ، لَيْسَ حَالِقَةَ الشَّعْرِ لَكِنْ حَالِقَةَ الدِّينِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَفَلَا أُنَبِّئُكُمْ – أَظُنُّهُ بِمَا يَثْبُتُ لَكُمْ – أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ»

وَهَذَا الْحَدِيثُ خَالَفَ مُوسَى بْنَ خَلَفٍ فِي إِسْنَادِهِ هِشَامٌ صَاحِبُ الدَّسْتُوَائِيِّ. فَرَوَاهُ هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ يَعِيشَ بْنِ الْوَلِيدِ، عَنْ مَوْلَى الزُّبَيْرِ، عَنِ الزُّبَيْرِ، وَقَالَ مُوسَى: عَنْ يَحْيَى، عَنْ يَعِيشَ مَوْلَى ابْنِ الزُّبَيْرِ، عَنِ ابْنِ الزُّبَيْرِ، وَهِشَامٌ أَحْفَظُ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-2232.
Bazzar-Shamila-2232.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-1995.



இதன் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது.

யயீஷ் பின் வலீத் என்பாருக்கு ஸுபைரின் அடிமை அறிவித்தார் என்பதே சரியானது.

  • இதில் மூஸா பின் கலஃப் என்ற அறிவிப்பாளர் இப்னு ஸுபைரின் அடிமையான யயீஷ் பின் வலீதுக்கு இப்னு ஸுபைர் அறிவித்தார்.. என்று கூறுகிறார்.
  • இதே செய்தியை ஹிஷாம் என்ற அறிவிப்பாளர் யயீஷ் பின் வலீத் என்பாருக்கு ஸுபைரின் அடிமை அறிவித்தார், ஸுபைரின் அடிமைக்கு ஸுபைர் அறிவித்தார் என்று கூறுகிறார்.
  • மூஸா வை விட ஹிஷாம் தான் நினைவாற்றல் மிக்கவர்.

யயீஷ் பின் வலீத் என்பாருக்கு ஸுபைரின் அடிமை அறிவித்தார் என்று இடம் பெற்றுள்ளது. அவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார். அவர் யார்? அவரது நம்பகத்தன்மை என்னவென்று உறுதி செய்யப்படாததால் இது பலவீனமானது.

  • முஃஜமுஸ் ஸஹாபா பாகம் 1 பக்கம் 223 எனும் நூலிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதில் பஹ்ர் பின் கனீஸ், உஸ்மான் பின் மிக்ஸம் என்பவர்கள் இடம் பெற்றுள்ளார்கள் இவர்களை பல அறிஞர்களும் பலவீனமானவர்கள் என்று விமர்சித்துள்ளனர்.
    மேலும் சில அறிவிப்புகளில் (முஸ்னது ஷாஷி ஹதீஸ் எண் 52), யஈஷ் பின் வலீத் நேரடியாக ஸுபைர் அவர்களிடமிருந்து அறிவிப்பதாகவும் உள்ளது. ஆனால் யஈஷ் என்பார் ஸுபைர் அவர்களின் காலத்தை அடையவில்லை. எனவே இது ஆதாரப்பூர்வமானதல்ல.
  • மேலும் இதே கருத்தை கொண்ட செய்தி இப்னு அப்பாஸ் ( ரலி ) அவர்கள் அறிவிப்பதாக இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    எனும் அறிஞரின் அல்காமில் (பாகம் 4 பக்கம் 198) எனும் நூலில் உள்ளது.
    இதில் அப்துல்லாஹ் பின் அராதா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் மிகவும் பலவீனமானவர் ஆவார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்பாகம் 1 பக்கம் 527 .

மேலும் பார்க்க : திர்மிதீ-2510 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.