அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“இரண்டு நற்செயல்களை வழமையாக கடைப்பிடித்து வரும் எவரும் கண்டிப்பாக சுவர்க்கத்தில் நுழைவார். அவ்விரண்டு நற்செயல்களும் (கடைப்பிடித்துவர ) எளிதானவை தான். ஆனால் அதைக் கடைப்பிடிப்பவர்கள் குறைவானவர்களே!
அவை ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர் , லாஇலாஹ இல்லல்லாஹ் என்று 100 தடவை கூறுவதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(bazzar-2403: 2403)حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«خَصْلَتَانِ لَا يُحْصِيهِمَا أَحَدٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ، هُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلْ بِهِمَا قَلِيلٌ، يُسَبِّحُ الرَّجُلُ فِي دُبُرِ صَلَاتِهِ مِائَةَ تَسْبِيحَةٍ وَيُكَبِّرُ وَيُهَلِّلُ»
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-2403.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2128.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அதாஉ பின் ஸாயிப் (ரஹ்) அவர்களிடமிருந்து ஜரீர் செவியேற்றது அதாஉ பின் ஸாயிப் மூளை குழம்பியதற்கு பின் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க : திர்மிதீ-3410 .
சமீப விமர்சனங்கள்