தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-3190

 

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3190. அபூகப்ஷா அவர்கள் கூறியதாவது:

“நல்ல நண்பனின் உதாரணம் கஸ்தூரியை விற்பவனைப் போன்றதாகும். கஸ்தூரியைச் விற்பவன் அதை உனக்கு அன்பளிப்பாக வழங்காவிட்டாலும் அதன் வாசனையை நீ நுகர்வாய். கெட்ட நண்பனின் உதாரணம் (உலைக் களத்தில்) உலை ஊதுகிறவனைப் போன்றதாகும். உலை ஊதுபவன் உன்னுடைய ஆடையை எரித்துக் கரித்து விடாவிட்டாலும் (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்.

உள்ளம் மாறிக்கொண்டே இருப்பதால் தான் அதற்கு (மாறக்கூடியது என்ற பொருள் கொண்ட) கல்ப் என்று பெயரிடப்பட்டது. இந்த உள்ளம் மரத்தின் அடியில் தொங்கவிடப்பட்டிருக்கும் (பறவையின்) இறகைப் போன்றதாகும். காற்று அதை தலைகீழாக புரட்டிப்போடுகிறது.

(விரைவில்) இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற சில குழப்பங்கள் தோன்றும். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான்.

சில குழப்பங்கள் தோன்றும். அப்போது உட்கார்ந்திருப்பவர் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவரை விட சிறந்தவர் ஆவார். (அவற்றுக்காக) எழுந்து நிற்பவர் (அவற்றுக்காக) நடப்பவரை விட சிறந்தவர் ஆவார்”

என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா (ரலி) அவர்கள் உரை மேடையில் கூறியதை நான் செவியேற்றேன்.

 

 

(bazzar-3190: 3190)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْقُرَشِيُّ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: أَخْبَرَنَا عَاصِمٌ الْأَحْوَلُ، عَنْ أَبِي كَبْشَةَ، قَالَ:

سَمِعْتُ أَبَا مُوسَى الْأَشْعَرِيَّ، رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى الْمِنْبَرِ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ مَثَلُ الْعَطَّارِ، إِلَّا يُحْذِكَ مِنْ عِطْرِهِ أَصَابَكَ مِنْ رِيحِهِ، وَمَثَلُ الْجَلِيسِ السُّوءِ مَثَلُ الْقَيْنِ إِنْ لَا يُصِبْ ثِيَابَكَ يَعْبَقْ بِكَ مِنْ رِيحِهِ»

قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا سُمِّيَ الْقَلْبُ مِنْ تَقَلُّبِهِ، وَمَثَلُ الْقَلْبِ كَمَثَلِ الرِّيشَةِ بِضَلَاةٍ تَقَلَّبُ بِأَصْلِ شَجَرَةٍ، يُقَلِّبُهَا الرِّيحُ ظَهْرًا لِبَطْنٍ»

وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَكُونُ فِتَنٌ كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ فِيهَا مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا»

وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَكُونُ فِتْنَةٌ الْقَاعِدُ فِيهَا خَيْرٌ مِنَ الْقَائِمِ، وَالْقَائِمُ فِيهَا خَيْرٌ مِنَ الْمَاشِي»

وَهَذَا الْحَدِيثُ لَا نَعْلَمُ رَوَاهُ عَنْ عَاصِمٍ عَنْ أَبِي كَبْشَةَ عَنْ أَبِي مُوسَى إِلَّا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-3190.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2759,
2760,
2761,
2762.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-8974-அபூகப்ஷா-பராஉ பின் கைஸ் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே இவரை பலமானவர் பட்டியலில் சேர்த்துள்ளார். இவரைப் பற்றி தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் அறியப்படாதவர் என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் மக்பூல் என்ற தரத்திலும் சேர்த்துள்ளார்.

இந்த செய்தியின் 2 வது பகுதியைத் தவிர மற்றவை வேறு சரியான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-88 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.