நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பயணம் செல்லும் போது (வழியில்) பசுமையான நிலப்பரப்பைக் கண்டால் பயணம் செய்வதை நிறுத்தி உங்கள் கால்நடைகளுக்கு அதற்குரிய பங்கை கொடுங்கள். அல்லாஹ் இரக்கமுள்ளவன். இரக்கம் காட்டுவதை அவன் விரும்புகிறான். நீங்கள் (வழியில்) வறண்டுப்போன நிலப்பரப்பைக் கண்டால் அதை (விரைவாக) கடந்து செல்லுங்கள்.
இரவில் பயணம் மேற்கொள்ளுங்கள். ஏனெனில் இரவு நேரத்தில் தான் பூமி சுருட்டப்படுகிறது (சுருக்கப்படுகிறது).
பாதையின் நடுப்பகுதியை விட்டு உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் அதுதான் பாம்புகளும், வனவிலங்குகளும் ஒதுங்குமிடமாகவும், வந்துசெல்லும் இடமாகவும் உள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(bazzar-5302: 5302)حَدَّثنا مُحَمد بْنُ مُوسَى الْقَطَّانُ الْوَاسِطِيُّ، قَال: حَدَّثنا مُحَمد بن أبي نعيم، قَال: حَدَّثنا سَعِيد بْنُ زَيْدٍ، عَن عَمْرو بْنِ مَالِكٍ، عَن أَبِي الْجَوْزَاءِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِي اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قَالَ:
إِذَا كَانَتِ الأَرْضُ مُخْصِبَةً فَاقْصُرُوا فِي السَّفَرِ وَأَعْطُوا الرِّكَابَ حَظَّهَا فَإِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ، وَإِذَا كَانَتِ الأَرْضُ مُجْدِبَةً فَانْجُوا عَلَيْهَا
وَعَلَيْكُمْ بِالدُّلْجَةِ فَإِنَّ الأَرْضَ تُطْوَى بالليل
وإساكم وَقَارِعَةَ الطَّرِيقِ فَإِنَّهُ مَأْوَى الْحَيَّاتِ وَمُرَاحُ السِّبَاعِ.
وَهَذَا الْحَدِيثُ لا نعلَمُ أحَدًا حَدَّثَ بِهِ، عَن سَعِيد بْنِ زَيْدٍ إلاَّ مُحَمد بْنَ أَبِي نُعَيْمٍ، ولاَ نَعْلَمُهُ يُرْوَى عَنِ ابْنِ عَبَّاسٍ إلاَّ مِن هَذَا الْوَجْهِ، وَقَدْ رُوِيَ عَن أَبِي هُرَيرة وَأَنَسٍ شَبِيهًا بِهِ.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-5302.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-1070.
إسناد فيه محمد بن أبي نعيم الواسطي وهو كذاب
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் அபூநுஐம் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சித்துள்ளார். என்றாலும் அபூஹாத்திம் அர்ராஸீ,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸினான் போன்றோர் நம்பகமானவர் எனக் கூறியுள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் நம்பகமானவர் எனக் கூறியுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1 / 900 ), தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3 / 713 ) - மேலும் இதில் வரும் அம்ர் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.என்பவரைப் பற்றி இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் ஹதீஸில் நிராகரிக்கப்பட்டவர் என விமர்சித்துள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் இவரின் மகன் வழியாக வரும் செய்திகள் பலவீனமானவை எனக் கூறியுள்ளார். என்றாலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரைப் பற்றி நம்பகமானவர், ஆனால் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1 / 744 )
4 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-5302 , அல்முஃஜமுல் கபீர்-10811 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-2571 .
சமீப விமர்சனங்கள்