தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-7421

---


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூஸா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாக இருந்தார்கள். ஒரு தடவை அவர்கள் குளிப்பதற்காக சென்றபோது தனது ஆடையை ஒரு கல்லின் மீது வைத்தார்கள். (அவர்கள் அதிகமாக வெட்கப்பட்ட காரணத்தால்) தனது மறைவிடத்தை வெளிப்படுத்தமாட்டார்கள்.

பனூ இஸ்ரவேலர்கள் இவருக்கு விரைவீக்கம் எனும் குறை இருப்பதால் தான் இவர் (குளிக்கும்போது நமக்குமுன்) ஆடையைக் கழற்றுவதில்லை என்று கூறுவார்கள்.

(மூஸா (அலை) அவர்கள் குளித்து முடித்தவுடன் தம் துணிகளை எடுத்துக் கொள்வதற்காக அவற்றை நோக்கிச் சென்றார்கள்) அப்போது அந்தக் கல் அவர்களின் துணியுடன் ஓடி பனூ இஸ்ரவேலர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது.

அப்போது பனூ இஸ்ரவேலர்கள், மூஸா (அலை) அவர்கள் ஆண்களிலேயே அழகானவராக இருப்பதைக் கண்டனர்.

இந்த நிகழ்ச்சியைத் தான், ‘இறை நம்பிக்கையாளர்களே! மூஸாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூஸா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்’ எனும் (அல்குர்ஆன்: 33:69) ஆவது இறைவசனம் குறிக்கிறது.

(bazzar-7421: 7421)

حَدَّثنا رَوْحُ بْنُ حَاتِمٍ، وَأحمد بْنُ الْمُعَلَّى الآدمي، قَالاَ: حَدَّثنَا يحيى بن حماد، حَدَّثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَن أَنَس، عَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قال:

كان موسى رجلاً حييا وأنه أتى، أحسبه قال: الماء ليغتسل فوضع ثيابه على صخرة، وَكان لا يكاد تبدو عورته فقالت بنو إسرائيل: إن موسى آدر وبه آفة يعنون أي لا يضع ثيابه , فاحتملت الصخرة ثيابه حتى صارت بحذاء مجالس بني إسرائيل , فنظروا إلى موسى صَلَّى الله عَلَيه وَسَلَّم كأحسن الرجال، أو كما قال: فذلك قوله {فبرأ الله مما قالوا وَكان عند الله وجيها}

وَهَذَا الْحَدِيثُ لا نَعْلَمُ يُرْوَى عَن أَنَس إلاَّ بهذا الإسناد، ولاَ نعلمُ رواه عن حماد إلاَّ يحيى بن حماد وعبيد الله بن عائشة.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-7421.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2119.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . பஸ்ஸார் இமாம்

2 . ரவ்ஹ் பின் ஹாதிம், 3 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஅல்லா

4 . யஹ்யா பின் ஹம்மாத்

5 . ஹம்மாத் பின் ஸலமா

6 . அலீ பின் ஸைத்

7 . அனஸ் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-29905-அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், ஆதாரம்கொள்ளத்தக்கவர் அல்ல என்றும் விமர்சித்துள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/162, தக்ரீபுத் தஹ்தீப்-4768)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும். இந்தக் கருத்து வேறு சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது.

(பார்க்க: புகாரி-3404)


3 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:  முஸ்னத் பஸ்ஸார்-7421,


மேலும் பார்க்க: புகாரி-3404.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.