அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது.
ஒருவர், (அல்லாஹ்விடம்) மூன்று தடவை நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(bazzar-7583: 7583)وسمعت أبا الحسن القزاز يحدث عَن أبي داود عن سلام أبي الأحوص، عَن أبي إسحاق، عَن بُرَيد بن أَبِي مَرْيَم، عَن أَنَس؛ أَن رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قال:
من سأل الجنة ثلاثًا قالت الجنة: اللهم أدخله الجنة، وَمَنْ استعاذ من النار ثلاثًا قالت النار: اللهم أعذه من النار.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-7583.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அபுல்ஹஸன் அல்கஸ்ஸாஸ்-முஹம்மது பின் ஸினான் பின் யஸீத் என்பவர் பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் சுமாரானவர் என்றும், சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும் விமர்சித்துள்ளனர்.
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/582, தக்ரீபுத் தஹ்தீப்-1/851)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-2572 .
சமீப விமர்சனங்கள்