தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-7981

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) நபி (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம், “உமக்கு காய்ச்சல் வந்ததுண்டா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர், காய்ச்சல் என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “தோலுக்கும் இரத்தத்திற்கும் இடையில் ஏற்படும் சூடு” என்று கூறினார்கள். அந்த கிராமவாசி இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள், அவரிடம் “உமக்கு தலைவலி(யாவது) ஏற்பட்டதுண்டா? என்று கேட்டார்கள். அதற்கவர், தலைவலி என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “மனிதனின் தலையில் இருக்கும் நரம்புகள் படபடப்பதால் ஏற்படும் வலி” என்று கூறினார்கள். அதற்கு அந்த கிராமவாசி, “இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை” என்று கூறினார். பிறகு அவர் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளில் ஒரு மனிதரைக் காண விருப்பமுள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

(bazzar-7981: 7981)

حَدَّثنا مُحَمد بن بَشَّار، قَال: حَدَّثنا عَمْرو بن خليفة، قَال: حَدَّثنا مُحَمد بن عَمْرو، عَن أبي سَلَمَة، عَن أبي هُرَيرة، قَالَ:

قَالَ رَسُول اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم لأعرابي هل أخذتك أم ملدم قط؟ قال: ما أم ملدم؟ قال: حر يكون بين الجلد واللحم قال: لا، قال: فأخذك الصداع قط؟ قال: وما الصداع؟ قال: عرق يضرب على الإنسان في رأسه قال: ما وجدت هذا قط. فلما ولى قَالَ رَسُول اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم: من سره أَن ينظر إلى رجل من أهل النار فلينظر إلى هذا.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-7981.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.




மேலும் பார்க்க: அஹ்மத்-8395 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.