தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-8148

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

மூவரின் பிரார்த்தனையை மறுக்காமலிருப்பது அல்லாஹ்வின் மீது உள்ள கடமையாகும். (அவர்கள்)

1 . நோன்பாளி. அவர் நோன்பு துறக்கும் வரை.

2 . அநீதமிழைக்கப்பட்டவன். அவன் உதவி பெறும் வரை.

3 . பயணி. அவர் பயணத்திலிருந்து திரும்பும் வரை.

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 

(bazzar-8148: 8148)

حَدَّثنا الجراح بن مخلد، قَال: حَدَّثنا مُحَمد بن موسى، قَال: حَدَّثنا إبراهيم بن خُثَيم بن عراك عن أبيه، عَن جَدِّه، عَن أَبِي هُرَيرة، عَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قال:

ثلاث حق على الله أن لا يرد لهم دعوة: الصائم حتى يفطر والمظلوم حتى ينتصر والمسافر حتى يرجع.

وَهَذَا الْحَدِيثُ لا نعلَمُ أحَدًا رَوَاهُ بِهَذَا اللفظ إلاَّ أَبُو هُرَيرة بهذا الإسناد.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-8148.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-439-இப்ராஹீம் பின் குஸைம் என்பவர் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவர் கைவிடப்பட்டவர் என்றும், அபூஸுர்ஆ அவர்கள், இவர் நிராகரிக்கப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர். வேறு சிலர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல்-267 )

மேலும் பார்க்க: திர்மிதீ-3598 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.