ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் (36 வது அத்தியாயம்) யாஸீன் ஆகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(bazzar-9312: 9312)حَدَّثَنا عبد الرحمن بن الفضل حَدَّثَنا زيد حَدَّثَنا حميد , عن عَطَاء , عن أبي هريرة رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِنَّ لِكُلِّ شَيْءٍ قلبا وقلب القرآن {يس}
ولا نعلم روى هذين الحديثين إلا زيد عن حميد
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-9312.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹுமைத் அல்மக்கீ என்பவரைப் பற்றி புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் அவர்கள் இவர் தனித்து அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.1 / 501 , தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1 / 277 )
எனவே பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சமீப விமர்சனங்கள்