தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1009

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது அவர்களின் முகத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் (சொற்பொழிவு மேடையிலிருந்து) கீழே இறங்குவதற்குள் எல்லா நீர்வழித்தடங்களிலிருந்தும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அப்போது நான்,

“இவர் வெண்ணிறம் கொண்டவர்;
இவர் முகம்தனை முன்வைத்தே;
முகில்மழை வேண்டப்படும்;
அநாதைகளின் புகலிடம்;
விதைவைகளின் காவலர்”

எனும் கவிதையை நான் நினைத்துக் கொள்வேன். இது அபூதாலிப் அவர்களின் கவிதையாகும்.

அத்தியாயம்: 15

(புகாரி: 1009)

وَقَالَ عُمَرُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا سَالِمٌ، عَنْ أَبِيهِ

رُبَّمَا ذَكَرْتُ قَوْلَ الشَّاعِرِ، وَأَنَا أَنْظُرُ إِلَى وَجْهِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَسْقِي، فَمَا يَنْزِلُ حَتَّى يَجِيشَ كُلُّ مِيزَابٍ 
وَأَبْيَضَ يُسْتَسْقَى الغَمَامُ بِوَجْهِهِ … ثِمَالُ اليَتَامَى عِصْمَةٌ لِلْأَرَامِلِ
«وَهُوَ قَوْلُ أَبِي طَالِبٍ»


Bukhari-Tamil-1009.
Bukhari-TamilMisc-1009.
Bukhari-Shamila-1009.
Bukhari-Alamiah-953.
Bukhari-JawamiulKalim-958.




மேலும் பார்க்க: புகாரி-1008 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.