பாடம்: 20
உட்கார்ந்து தொழும் போது நோய் நீங்கி விட்டால் அல்லது நோயின் கடுமை குறைந்து விட்டால் எஞ்சியதை எழுந்து தொழலாம்.
ஒரு நோயாளி விரும்பினால் இரண்டு ரக்அத்களை நின்றுதொழுது விட்டு (பிந்திய) இரண்டு ரக்அத்களை உட்கார்ந்து தொழலாம் என்று ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் தங்களின் முதுமையை அடையும் வரை இரவுத் தொழுகையை உட்கார்ந்து தொழ நான் பார்த்ததில்லை. முதுமையான காலத்தில் அவர்கள் உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ருகூவுச் செய்ய எண்ணும்போது எழுந்து முப்பது அல்லது நாற்பது வசனங்கள் ஓதிவிட்டுப் பிறகு ருகூவு செய்வார்கள்.
அத்தியாயம்: 18
(புகாரி: 1118)بَابُ إِذَا صَلَّى قَاعِدًا، ثُمَّ صَحَّ، أَوْ وَجَدَ خِفَّةً، تَمَّمَ مَا بَقِيَ
وَقَالَ الحَسَنُ: «إِنْ شَاءَ المَرِيضُ صَلَّى رَكْعَتَيْنِ قَائِمًا وَرَكْعَتَيْنِ قَاعِدًا»
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أُمِّ المُؤْمِنِينَ، أَنَّهَا أَخْبَرَتْهُ
أَنَّهَا «لَمْ تَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلاَةَ اللَّيْلِ قَاعِدًا قَطُّ حَتَّى أَسَنَّ، فَكَانَ يَقْرَأُ قَاعِدًا، حَتَّى إِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ، فَقَرَأَ نَحْوًا مِنْ ثَلاَثِينَ آيَةً – أَوْ أَرْبَعِينَ آيَةً – ثُمَّ رَكَعَ»
Bukhari-Tamil-1118.
Bukhari-TamilMisc-1118.
Bukhari-Shamila-1118.
Bukhari-Alamiah-1051.
Bukhari-JawamiulKalim-1057.
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- உர்வா பின் ஸுபைர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: மாலிக்-364 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸ்னத் ஹுமைதீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, அப்து பின் ஹுமைத்-, புகாரி-1118 , 1148 , முஸ்லிம்-1329 , இப்னு மாஜா-, அபூதாவூத்-, நஸாயீ-, …
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1336 ,
சமீப விமர்சனங்கள்