பாடம் : 30
கடமையான தொழுகைக்குப் பின் கூடுதலான தொழுகை களைத் தொழாமல் இருப்பது.
அபுஷ்ஷஅஸா ஜஅஃபர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எட்டு ரக்அத்கள் (கொண்ட லுஹ்ர், அஸ்ர் ஆகிய தொழுகைகளை இடையில் கூடுதல் தொழுகைகள் ஏதும் தொழாமல்) சேர்ந்தாற்போல் தொழுதிருக்கிறேன். ஏழு ரக்அத்கள் கொண்ட (மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளை இடையில் கூடுதல் தொழுகைகள் ஏதும் தொழாமல்) சேர்ந்தாற்போல் தொழுதிருக்கிறேன்” என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அபுஷ்ஷஅஸா (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையைத் தாமதப்படுத்தி அஸ்ரின் ஆரம்ப நேரத்திலும், மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி இஷாவின் ஆரம்ப நேரத்திலும் தொழுதிருப்பார்கள் என நான் எண்ணுகிறேன்” என்றேன். அதற்கு அபுஷ்ஷஅஸா (ரஹ்) அவர்கள் “நானும் அவ்வாறே எண்ணுகிறேன்” என்றார்கள்.31
அத்தியாயம் : 19
(புகாரி: 1174)بَابُ مَنْ لَمْ يَتَطَوَّعْ بَعْدَ المَكْتُوبَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ: سَمِعْتُ أبَا الشَّعْثَاءِ جَابِرًا، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
«صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانِيًا جَمِيعًا، وَسَبْعًا جَمِيعًا»،
قُلْتُ: يَا أَبَا الشَّعْثَاءِ، أَظُنُّهُ أَخَّرَ الظُّهْرَ، وَعَجَّلَ العَصْرَ، وَعَجَّلَ العِشَاءَ، وَأَخَّرَ المَغْرِبَ، قَالَ: وَأَنَا أَظُنُّهُ
சமீப விமர்சனங்கள்