பாடம் : 45 அமர்ந்திருக்கும் அறிஞரிடம் நின்று கொண்டு கேள்வி கேட்பது.
‘ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்திற்காகப் போராடுகிறார். (இன்னொருவர்) தம் குலப்பெருமைகளைக் காக்கும் சீற்றத்துடன் போரிடுகிறார். இவற்றில் இறைவழியில் செய்யப்படும் போர் எது?’ என்று கேட்டார்.
உடனே நபி(ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, ‘அல்லாஹ்வின் கொள்கை (இவ்வுலகில்) மேலோங்குவதற்காக (மட்டும்) போர் புரிகிறவர் தாம் மகத்துவமும் கண்ணியமுமிக்க இறைவழியில் போரிட்டவராவார்’ என்று கூறினார்கள். கேள்வி கேட்டவர் நின்றிருந்ததால்தான் நபி(ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்தினார்கள்’ என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Book : 3
بَابُ مَنْ سَأَلَ وَهُوَ قَائِمٌ عَالِمًا جَالِسًا
حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ ، مَا القِتَالُ فِي سَبِيلِ اللَّهِ؟ فَإِنَّ أَحَدَنَا يُقَاتِلُ غَضَبًا، وَيُقَاتِلُ حَمِيَّةً، فَرَفَعَ إِلَيْهِ رَأْسَهُ، قَالَ: وَمَا رَفَعَ إِلَيْهِ رَأْسَهُ إِلَّا أَنَّهُ كَانَ قَائِمًا، فَقَالَ: «مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللَّهِ هِيَ العُلْيَا، فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ»
சமீப விமர்சனங்கள்