தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-131

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஒரு மரம் உள்ளது. அம்மரத்தின் இலைகள் உதிர்வதில்லை. அம்மரம் இறைநம்பிக்கையாளனுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று கூறுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர். மக்களின் சிந்தனை கிராமப் புறத்தில் உள்ள மரங்களின் பால் சென்றது.

அது பேரீச்சை மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (நான் சிறுவனாக இருந்ததால் அதைக் கூற) வெட்கமடைந்ததேன். அப்போது மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! நீங்களே கூறுங்கள்’ என்றனர். ‘அது பேரீச்சை மரம் தான்’ என்று நபி(ஸல்) கூறினார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை கூறினேன். அதைக் கேட்ட அவர்கள் ‘நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்ன எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்’ என்றார்’ என்றும் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்
Book :3

(புகாரி: 131)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ يَسْقُطُ وَرَقُهَا، وَهِيَ مَثَلُ المُسْلِمِ، حَدِّثُونِي مَا هِيَ؟» فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ البَادِيَةِ، وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، قَالَ عَبْدُ اللَّهِ: فَاسْتَحْيَيْتُ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنَا بِهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هِيَ النَّخْلَةُ»

قَالَ عَبْدُ اللَّهِ: فَحَدَّثْتُ أَبِي بِمَا وَقَعَ فِي نَفْسِي، فَقَالَ: لَأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي كَذَا وَكَذَا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.