தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-132

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம்: 51

(கேள்வி கேட்க) வெட்கப்பட்டுப் பிறரைக் கேட்கச் செய்தல்.

132. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி அறிய) மிக்தாத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் வினவினார். “அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 4


بَابُ مَنِ اسْتَحْيَا فَأَمَرَ غَيْرَهُ بِالسُّؤَالِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُنْذِرٍ الثَّوْرِيِّ، عَنْ مُحَمَّدِ ابْنِ الحَنَفِيَّةِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ

كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ المِقْدَادَ بْنَ الأَسْوَدِ أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ، فَقَالَ: «فِيهِ الوُضُوءُ»


Bukhari-Tamil-132.
Bukhari-TamilMisc-132.
Bukhari-Shamila-132.
Bukhari-Alamiah-129.
Bukhari-JawamiulKalim-174.

புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

محمد بن إسماعيل البخاري

இறப்பு: ஹி-256.

தரம்: மிகப் பலமானவர்.


இயற்பெயர்: முஹம்மத்

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வமிசம்: அல்ஜுஅஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ்

பிறப்பு: ஹிஜ்ரி-194.

இறப்பு: ஹிஜ்ரி-256

கால கட்டம்: 10.


இமாம் புகாரி

முழுப்பெயர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் இப்னுல் முகீரா  (ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம் ஆவார்)

புனைப்பெயர்: அபூ அப்தில்லாஹ் இப்னு அபீ ஹஸனில் புகாரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: இஸ்மாயில்

பிறந்த ஊர்: ரஷ்யாவில் உள்ள புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். எனவே தான் புகாரி – புகாராவைச் சார்ந்தவர் என்ற கருத்தில் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத் தனது 10 வயதில் இருந்தே ஈரானில் உள்ள குராஸான், கூஃபா, பாக்தாத் போன்ற  ஊர்களுக்கும் இன்னும் பஸரா,  எகிப்து, ஸிரியா, மக்கா, மதீனா, போன்ற உலகத்தின் பல பாகங்களுக்கு பயணம் செய்து இருக்கிறார்.

ஸஹீஹ் அல்புகாரிக்கு இமாம் புகாரி வைத்த பெயர்: அல்ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (நபியவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களுடன் வந்துள்ள செய்திகள் இன்னும் அவர்களின் வழிமுறைகள், வாழ்நாட்கள்)

ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (ஸஹீஹுல் புகாரி)

அல் அதபுல் முஃப்ரத்,

அத்தாரிகுல் கபீர், (அறிவிப்பாளர் தொடர்பான நூல்),

அல்லுஃபாவுஸ் ஸகீர் (பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர்பான நூல்),

ரஃபவுல் யதய்ன் ஃபிஸ் ஸலாதி, (தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்),

அல் கிராஅது கல்ஃபல் இமாம்  (இமாமுக்கு பின்னால் ஓதுதல்) போன்ற பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

அஹ்மது இப்னு ஹன்பல், இப்ராஹீம் இப்னு மூஸா அர்ராஸியி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்,           ஹஸன் இப்னு பஸருல் பஜலீ, அபுல் யமான் அல்ஹகம் இப்னு நாபிஃ, கைஸ் இப்னு ஹஃப்ஸுத்தாரமி, நுஐம் இப்னுல் ஹம்மாது அல்மரூஸியி, யஹ்யா இப்னு மயீன், ஹஸன் இப்னு லிஹாக் நைஸாபூரி, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

அபூக்கர் அப்துல்லாஹ் இப்னு அபீதாவூத், ஃபல் இப்னுல் அப்பாஸுர்ராஸி அல்ஹாஃபிழ், அபுஹாதம் முஹம்மது இப்னு இத்ரீஸு அர்-ராஸியி, முஹம்மது இப்னு யூசுஃபுல் ஃபர்பரீய், அத்திர்மிதி, முஸ்லிம் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்

இறப்பு:  ஹிஜ்ரி 256ல் ஷவ்வால் மாதம் நோன்பு பெருநாள் அன்று சனிக்கிழமை இஷா தொழுகை நேரத்தில் மரணித்தார். அப்போது அவருக்கு 62 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

முஸத்தத் பின் முஸர்ஹத்-அல்அஸதீ

مسدد بن مسرهد

இறப்பு: ஹிஜ்ரி 228, பஸரா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல் மலிக் பின் அப்துல் அஸீஸ்

தந்தை பெயர்: முஸர்ஹத்

வம்சம்: அல்அஸதீ

புனைப்பெயர்: அபூ ஹஸன்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 150

இறப்பு: ஹிஜ்ரி 228, பஸரா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

முஸத்தத் பின் முஸர்ஹத்-அல்அஸதீ ரஹ் அவர்கள் மிகப் பலமான ஹதீஸ் அறிவிப்பாளர் மற்றும் மனனசக்தி மிக்கவர். இவர் ஹிஜ்ரி 150-ல் பிறந்தார். பஸராவைச் சேர்ந்த இவர், பஸராவில் முதன்முதலில் முஸ்னத் நூலைத் தொகுத்தவர் என்று கூறப்படுகிறது.

இவர் ஹிஜ்ரி 228-ல் பஸராவில் மரணமடைந்தார். புகாரி இமாம், அபூ தாவூத், இமாம் திர்மிதீ போன்றோர் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அப்துல்லாஹ் பின் யஹ்யா பின் அபூ கஸீர், ஹுஷைம் பின் பஷீர் பின் அல்காஸிம், யஸீத் பின் ஸரீஃ, ஈஸா பின் யூனுஸ் பின் அபூ இஸ்ஹாக், ஃபுளைல் பின் இயாழ் பின் மஸ்ஊத், மஹ்தீ பின் மைமூன் அல்அஸ்தீ, ஜுவைரிய்யா பின் அஸ்மா பின் உபைத், ஜஃபர் பின் ஸுலைமான் அத்தபாஈ, ஹம்மாத் பின் ஸைத், அபூ அஹ்வஸ், ஸலாம் பின் ஸுலைம் அல்ஹனஃபீ, அப்துல் வாரிஸ் பின் ஸயீத் பின் தக்வான்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): புகாரி இமாம், அபூ தாவூத், இமாம் திர்மிதீ, முஹம்மத் பின் யஹ்யா, யஹ்யா (இவரது மகன்), அபூ ஸுர்ஆ, அபூ ஹாதிம், யஃகூப் அல்ஃபஸவீ, யஃகூப் அஸ்ஸதூஸீ, முஆத் பின் அல்முஸன்னா, இஸ்மாயீல் அல்காழீ, அபூ கலீஃபா அல்ஜுமஹீ

வேறு பெயர்கள்: முஸத்தத், முஸத்தத் பின் முஸர்ஹத்


ஆதாரம்: muslimscholars.info (30175) · Should verify

அப்துல்லாஹ் பின் தாவூத்-அல்குரைபீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அஃமஷ்-ஸுலைமான் பின் மிஹ்ரான்

سليمان بن مهران الأعمش

இறப்பு: ஹிஜ்ரி 148, கூஃபா

தரம்: மிகப் பலமானவர், ஹாஃபிழ்


விபரங்கள்

இயற்பெயர்: ஸுலைமான் பின் மிஹ்ரான்

தந்தை பெயர்: மிஹ்ரான்

வம்சம்: அல்அஸதீ, அல்காஹிலீ

புனைப்பெயர்: அபூ முஹம்மத்

ஊர் பெயர்: கூஃபா

பயணித்த ஊர்கள்: கூஃபா, வாஸித், மக்கா

பிறப்பு: ஹிஜ்ரி 61, கூஃபா

இறப்பு: ஹிஜ்ரி 148, கூஃபா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸுலைமான் பின் மிஹ்ரான் அல்அஃமஷ் ரஹ் அவர்கள் ஒரு தாபிஈ ஆவார். இவர் ஹிஜ்ரி 61 ஆம் ஆண்டு கூஃபாவில் பிறந்தார். இவர் ஹதீஸ் கலையில் மிகப் பலமானவர் மற்றும் ஹாஃபிழ் ஆவார்.

குர்ஆன் கிராஅத் மற்றும் ஃபராயித் (பாகப்பிரிவினை) சட்டங்களிலும் இவர் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார். இவர் ஹிஜ்ரி 148 ஆம் ஆண்டு கூஃபாவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அனஸ் பின் மாலிக், அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா, ஸைத் பின் வஹ்ப் அல்ஜுஹனீ, ஷகீக் பின் ஸலமா அல்அஸதீ, ஸஃத் பின் இயாஸ், அபூ அம்ர் ஷைபானீ, கைஸ் பின் அபூஹாஸிம், இஸ்மாயீல் பின் ரஜா பின் ரபீஆ அஸ்ஸுபைதீ, ஜமாஃ பின் ஷத்தாத் அல்மஹாரபீ, ஹுஸைன் பின் ஜுன்துப் பின் அல்ஹாரிஸ், கைஸமா பின் அப்துர்ரஹ்மான், ஆமிர் அஷ்ஷஅபீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஹகம் பின் உதைபா, ஸுபைது பின் அல்ஹாரிஸ், அபூ இஸ்ஹாக் அஸ்ஸபாயீ, ஸுலைமான் பின் தர்கான் அத்தைமீ, ஸுஹைல் பின் அபூஸாலிஹ், முஹம்மத் பின் வாஸிஃ பின் ஜாபிர், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், ஸுஃப்யான் பின் ஸயீத் அஸ்ஸவ்ரீ, ஸுஃப்யான் பின் உயைனா, இப்ராஹீம் பின் தஹ்மான், ஜரீர் பின் ஹாஸிம் பின் ஸைத், இஸ்ராயீல் பின் யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக்

வேறு பெயர்கள்: அஃமஷ், ஸுலைமான் பின் மிஹ்ரான்


ஆதாரம்: muslimscholars.info (11060) · Should verify

முன்திர் பின் அபூயஃலா-அஸ்ஸவ்ரீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

முஹம்மத் பின் ஹனஃபிய்யா-அல்ஹாஷிமீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அலீ பின் அபூதாலிப்-அல்ஹாஷிமீ (ரலி)

அலீ பின் அபூதாலிப்-அல்ஹாஷிமீ (ரலி) – Ali ibn Abi Talib

இறப்பு: ஹிஜ்ரி 40, கூஃபா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அலீ பின் அபூதாலிப் பின் அப்துல்முத்தலிப் பின் ஹாஷிம்

தந்தை பெயர்: அபூதாலிப் பின் அப்துல்முத்தலிப்

வம்சம்: குரைஷீ, ஹாஷிமீ

புனைப்பெயர்: அபூ ஹஸன், அபூ துராப், அமீருல் முஃமினீன்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, கூஃபா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 23, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 40, கூஃபா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் புனித தலமான கஅபாவில் பிறந்த ஒரே நபர் ஆவார். அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வீட்டிலேயே வளர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வந்தபோது, இஸ்லாத்தை முதலில் ஏற்றுக்கொண்டவர்களில் அவர்களும் ஒருவர்.

அவர்கள் இஸ்லாத்தின் நான்காவது கலீஃபாவாக இருந்தார்கள். ஹிஜ்ரி 40 இல் கூஃபாவில் ஷஹீதாக்கப்பட்டார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபாத்திமா பின்த் முஹம்மத், அல்மிக்ஃதாத் பின் அல்அஸ்வத்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஹஸன் பின் அலீ பின் அபூதாலிப், ஹுஸைன் பின் அலீ பின் அபூதாலிப், இப்னு மஸ்ஊத், அல்-பரா பின் ஆஸிப், அபூ ஹுரைரா, அபூ ஸயீத் அல்குத்ரீ, ஸுஹைப் பின் ஸினான் அர்ரூமீ, ஸஃபீனா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அப்துல்லாஹ் பின் ஜஃபர்

வேறு பெயர்கள்: அலீ, அபூ ஹஸன், அபூ துராப், அமீருல் முஃமினீன்


ஆதாரம்: muslimscholars.info (5) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.