தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1454

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 38

ஆடுகளின் ஸகாத்.

 அனஸ் (ரலி) அறிவித்தார்.

நான் பஹ்ரைனுக்கு (ஆளுநராக) அனுப்பப்பட்டதும் அபூபக்ர் (ரலி) எனக்குக் கடிதம் எழுதினார். அதில், ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம். இது அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு ஏவி அவர்கள் முஸ்லிம்களின் மீது கடமையாக்கிய ஸகாத் (பற்றிய விவரம்) ஆகும்.

முஸ்லிம்களில் யாரும் கணக்குப்படி ஸகாத் கோரப்பட்டால் அதை வழங்கவேண்டும். கணக்குக்கு மேல் ஸகாத் கோரப்பட்டால் அதைக் கொடுக்க வேண்டாம்.

24 ஒட்டகங்கள் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், ஒவ்வொரு 5 ஒட்டகத்திற்கும் 1 ஆடு ஸகாத் கொடுக்க வேண்டும்.

25 ஒட்டகம் முதல் 35 வரை ஒரு வயது பெண் ஒட்டகம்.

36 முதல் 45 வரை, இரண்டு வயது பெண் ஒட்டகம்.

46 முதல் 60 வரை மூன்று வயதுள்ள, பருவமான பெண் ஒட்டகம்.

61 லிருந்து 75 வரை நான்கு வயது பெண் ஒட்டகம்.

76 லிருந்து 90 வரை இரண்டு வயதுள்ள இரண்டு பெண் ஒட்டகங்கள்.

91 லிருந்து 120 வரை மூன்று வயதுள்ள, பருவமடைந்த இரண்டு பெண் ஒட்டகங்கள் ஸகாத்தாகும்.

120 க்கும் அதிகமாகிவிட்டால், ஒவ்வொரு 40 ஒட்டகத்திற்கும் பெண் ஒட்டகம் ஒன்று.

ஒவ்வொரு 50 க்கும், மூன்று வயது பெண் ஒட்டகம் ஒன்றும் ஸகாத்தாகும்.

யாரிடம் 4 ஒட்டகங்கள் மட்டுமே உள்ளதோ அவற்றிற்கு ஸகாத் – இல்லை – உரிமையாளர் நாடினாலே தவிர! அவை ஐந்து ஒட்டகங்களாகிவிட்டால் அதற்குரிய ஸகாத் ஓர் ஆடாகும்.

காடுகளில் மேயும் ஆடுகள் 40 லிருந்து 120 வரை இருந்தால், அதற்கு ஸகாத் ஓர் ஆடாகும்.

120 க்கு மேல் 200 வரை இருந்தால் இரண்டு ஆடுகளும்,

200 க்கு மேல் 300 வரை மூன்று ஆடுகளும்,

300 க்கும் அதிகமாகிவிட்டால் ஒவ்வொரு 100 க்கும் ஓர் ஆடும் ஸகாத்தாகும்.

காடுகளில் மேயக் கூடிய ஆடுகளில் 40 இல் ஒன்று குறைந்துவிட்டாலும் உரிமையாளன் நாடினாலே தவிர அதில் ஸகாத் இல்லை.

வெள்ளியில் நாற்பதில் ஒரு பங்கு (இரண்டரை சதவீதம்) ஸகாத் கொடுக்க வேண்டும். அதில் 199 திர்ஹம் மட்டுமேயிருந்தால் உரிமையாளன் நாடினாலே தவிர ஸகாத் இல்லை. (200 திர்ஹங்களில் தான் ஸகாத் கடமையாகும்.)

அத்தியாயம்: 24

(புகாரி: 1454)

بَابُ زَكَاةِ الغَنَمِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ المُثَنَّى الأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُ

أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، كَتَبَ لَهُ هَذَا الكِتَابَ لَمَّا وَجَّهَهُ إِلَى البَحْرَيْنِ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ هَذِهِ فَرِيضَةُ الصَّدَقَةِ الَّتِي فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى المُسْلِمِينَ، وَالَّتِي أَمَرَ اللَّهُ بِهَا رَسُولَهُ، «فَمَنْ سُئِلَهَا مِنَ المُسْلِمِينَ عَلَى وَجْهِهَا، فَلْيُعْطِهَا وَمَنْ سُئِلَ فَوْقَهَا فَلاَ يُعْطِ فِي أَرْبَعٍ وَعِشْرِينَ مِنَ الإِبِلِ، فَمَا دُونَهَا مِنَ الغَنَمِ مِنْ كُلِّ خَمْسٍ شَاةٌ إِذَا بَلَغَتْ خَمْسًا وَعِشْرِينَ إِلَى خَمْسٍ وَثَلاَثِينَ، فَفِيهَا بِنْتُ مَخَاضٍ أُنْثَى، فَإِذَا بَلَغَتْ سِتًّا وَثَلاَثِينَ إِلَى خَمْسٍ وَأَرْبَعِينَ فَفِيهَا بِنْتُ لَبُونٍ أُنْثَى، فَإِذَا بَلَغَتْ سِتًّا وَأَرْبَعِينَ إِلَى سِتِّينَ فَفِيهَا حِقَّةٌ طَرُوقَةُ الجَمَلِ، فَإِذَا بَلَغَتْ وَاحِدَةً وَسِتِّينَ إِلَى خَمْسٍ وَسَبْعِينَ، فَفِيهَا جَذَعَةٌ فَإِذَا بَلَغَتْ يَعْنِي سِتًّا وَسَبْعِينَ إِلَى تِسْعِينَ، فَفِيهَا بِنْتَا لَبُونٍ فَإِذَا بَلَغَتْ إِحْدَى وَتِسْعِينَ إِلَى عِشْرِينَ وَمِائَةٍ، فَفِيهَا حِقَّتَانِ طَرُوقَتَا الجَمَلِ، فَإِذَا زَادَتْ عَلَى عِشْرِينَ وَمِائَةٍ، فَفِي كُلِّ أَرْبَعِينَ بِنْتُ لَبُونٍ وَفِي كُلِّ خَمْسِينَ حِقَّةٌ، وَمَنْ لَمْ يَكُنْ مَعَهُ إِلَّا أَرْبَعٌ مِنَ الإِبِلِ، فَلَيْسَ فِيهَا صَدَقَةٌ إِلَّا أَنْ يَشَاءَ رَبُّهَا، فَإِذَا بَلَغَتْ خَمْسًا مِنَ الإِبِلِ، فَفِيهَا شَاةٌ وَفِي صَدَقَةِ الغَنَمِ فِي سَائِمَتِهَا إِذَا كَانَتْ أَرْبَعِينَ إِلَى عِشْرِينَ وَمِائَةٍ شَاةٌ، فَإِذَا زَادَتْ عَلَى عِشْرِينَ وَمِائَةٍ إِلَى مِائَتَيْنِ شَاتَانِ، فَإِذَا زَادَتْ عَلَى مِائَتَيْنِ إِلَى ثَلاَثِ مِائَةٍ، فَفِيهَا ثَلاَثُ شِيَاهٍ، فَإِذَا زَادَتْ عَلَى ثَلاَثِ مِائَةٍ، فَفِي كُلِّ مِائَةٍ شَاةٌ، فَإِذَا كَانَتْ سَائِمَةُ الرَّجُلِ نَاقِصَةً مِنْ أَرْبَعِينَ شَاةً وَاحِدَةً، فَلَيْسَ فِيهَا صَدَقَةٌ إِلَّا أَنْ يَشَاءَ رَبُّهَا وَفِي الرِّقَّةِ رُبْعُ العُشْرِ، فَإِنْ لَمْ تَكُنْ إِلَّا تِسْعِينَ وَمِائَةً، فَلَيْسَ فِيهَا شَيْءٌ إِلَّا أَنْ يَشَاءَ رَبُّهَا»


Bukhari-Tamil-1454.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1454.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




..

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-7364 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.