தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Sharh-Maanil-Aasaar-7364

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற போது (ஜகாத்) தர்மங்கள் தொடர்பாக அம்ரு பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு (எழுதப்பட்ட) நபியவர்களுடைய கடிதத்தையும், உமர் (ரலி) அவர்களுடைய கடிதத்தையும் கேட்டு மதீனாவுக்கு ஒருவரை அனுப்பிவைத்தார்கள். அம்ரு பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரிடத்திலே (ஜகாத்) தர்மங்கள் தொடர்பாக அம்ரு பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு (எழுதப்பட்ட) நபியவர்களுடைய கடிதம் பெற்றுக் கொள்ளப்பட்டது. உமர் (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரிடத்திலே (ஜகாத்) தர்மங்கள் தொடர்பான உமர் (ரலி) அவர்களுடைய கடிதம் பெற்றுக் கொள்ளப்பட்டது. (உமருடைய கடிதம்) நபி (ஸல்) அவர்களுடைய கடிதத்தைப் போன்றே இருந்தது. அவை இரண்டும் அவருக்காகப் பிரிதியெடுக்கப்பட்டது.

ஹபீப் இப்னு அபீ ஹபீப் கூறுகிறார் : அம்ரு இப்னு ஹர்ம் அவர்கள் முஹம்மத் இப்னு அப்துர் ரஹ்மான் அவர்களிடம் அந்த இரண்டு கடிதங்களிலும் உள்ள விபரங்களை தனக்கு பிரதியெடுத்துத் தருமாறு வேண்டினார்.

ஒட்டகம், மாடு, ஆடு, தங்கம், வெள்ளி, பேரீத்தம் பழம், தானியம், உலர்ந்த திராட்சை முதலியவற்றுக்கான ஜகாத் தொடர்பான விபரங்கள் அக்கடித்தில் இருந்தது. (அதை) அவருக்கு அவர் பிரதியெடுத்துக் கொடுத்தார்………

(sharh-maanil-aasaar-7364: 7364)

بَابُ فَرْضِ الزَّكَاةِ فِي الْإِبِلِ السَّائِمَةِ فِيمَا زَادَ عَلَى عِشْرِينَ وَمِائَةٍ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ أَخْبَرَنَا حَبِيبُ بْنُ أَبِي حَبِيبٍ، قَالَ: ثنا عَمْرُو بْنُ هَرِمٍ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْأَنْصَارِيُّ، قَالَ:

لَمَّا اسْتُخْلِفَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ أَرْسَلَ إِلَى الْمَدِينَةِ , يَلْتَمِسُ كِتَابَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَمْرِو بْنِ حَزْمٍ فِي الصَّدَقَاتِ , وَكِتَابَ عُمَرَ. فَوَجَدَ عِنْدَ آلِ عَمْرِو بْنِ حَزْمٍ , كِتَابَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَمْرِو بْنِ حَزْمٍ فِي الصَّدَقَاتِ. وَوَجَدَ عِنْدَ آلِ عُمَرَ كِتَابَ عُمَرَ فِي الصَّدَقَاتِ , مِثْلَ كِتَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنُسِخَا. فَحَدَّثَنِي عَمْرٌو , أَنَّهُ طَلَبَ آلُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنْ يَنْسَخَهُ مَا فِي ذَيْنِكَ الْكِتَابَيْنِ , فَيَنْسَخَ لَهُ مَا فِي هَذَا الْكِتَابِ فَكَانَ مِمَّا فِي ذَلِكَ الْكِتَابِ «أَنَّ الْإِبِلَ إِذَا زَادَتْ عَلَى تِسْعِينَ وَاحِدَةً , فَفِيهَا حِقَّتَانِ طَرُوقَتَا الْفَحْلِ إِلَى أَنْ يَبْلُغَ عِشْرِينَ وَمِائَةً. فَإِذَا بَلَغَتِ الْإِبِلُ عِشْرِينَ وَمِائَةً , فَلَيْسَ فِيمَا زَادَ مِنْهَا دُونَ الْعَشْرِ شَيْءٌ. فَإِذَا بَلَغَتْ ثَلَاثِينَ وَمِائَةً , فَفِيهَا بِنْتَا لَبُونٍ وَحِقَّةٌ , إِلَى أَنْ تَبْلُغَ أَرْبَعِينَ وَمِائَةً. فَإِذَا كَانَتْ أَرْبَعِينَ وَمِائَةً , فَفِيهَا حِقَّتَانِ , وَابْنَةُ لَبُونٍ , إِلَى أَنْ تَبْلُغَ خَمْسِينَ وَمِائَةً. فَإِذَا كَانَتْ خَمْسِينَ وَمِائَةً , فَفِيهَا ثَلَاثُ حِقَاقٍ , ثُمَّ أَجْرَى الْفَرِيضَةَ كَذَلِكَ , حَتَّى يَبْلُغَ ثَلَاثَمِائَةٍ. فَإِذَا بَلَغَتْ ثَلَثَمِائَةٍ , فَفِيهَا مِنْ كُلِّ خَمْسِينَ حِقَّةٌ , وَمِنْ كُلِّ أَرْبَعِينَ , بِنْتُ لَبُونٍ»

قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ إِلَى هَذَا الْحَدِيثِ قَوْمٌ فَقَالُوا بِهِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: مَا زَادَ عَلَى الْعِشْرِينَ وَالْمِائَةِ , فَفِي كُلِّ خَمْسِينَ حِقَّةٌ , وَفِي كُلِّ أَرْبَعِينَ , بِنْتُ لَبُونٍ. وَتَفْسِيرُ ذَلِكَ , أَنَّهُ لَوْ زَادَتِ الْإِبِلُ بَعِيرًا وَاحِدًا , عَلَى عِشْرِينَ وَمِائَةٍ , وَجَبَ بِزِيَادَةِ هَذَا الْبَعِيرِ حُكْمٌ ثَانٍ , غَيْرُ حُكْمِ الْعِشْرِينَ وَالْمِائَةِ. [ص:374] فَوَجَبَ فِي كُلِّ أَرْبَعِينَ بِنْتُ لَبُونٍ ثُمَّ يُجْرُونَ ذَلِكَ كَذَلِكَ , حَتَّى تَبْلُغَ الزِّيَادَةُ تَمَامَ الْمِائَةِ وَالثَّلَاثِينَ , فَيَجْعَلُونَ فِيهَا حِقَّةً وَبِنْتَيْ لَبُونٍ. ثُمَّ يَكُونُ ذَلِكَ كَذَلِكَ , حَتَّى يَتَنَاهَى الزِّيَادَةُ إِلَى أَرْبَعِينَ وَمِائَةٍ , فَإِذَا كَانَتْ أَرْبَعِينَ وَمِائَةً , كَانَ فِيهَا حِقَّتَانِ , وَبِنْتُ لَبُونٍ , إِلَى خَمْسِينَ وَمِائَةٍ. فَإِذَا كَانَتْ خَمْسِينَ وَمِائَةً , كَانَ فِيهَا ثَلَاثُ حِقَاقٍ , ثُمَّ يُجْرُونَ الْفَرْضَ فِي الزِّيَادَةِ عَلَى ذَلِكَ كَذَلِكَ , أَبَدًا. وَاحْتَجُّوا فِي ذَلِكَ مِنَ الْآثَارِ


Sharh-Maanil-Aasaar-Tamil-.
Sharh-Maanil-Aasaar-TamilMisc-.
Sharh-Maanil-Aasaar-Shamila-7364.
Sharh-Maanil-Aasaar-Alamiah-.
Sharh-Maanil-Aasaar-JawamiulKalim-.




இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11236-ஹபீப் பின் யஸீத்-ஹபீப் பின் அபூஹபீப் அல்அன்மாதீ என்பவர் பற்றி பாராட்டியவர்கள்:

  • அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 65
    அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    இவரிடமிருந்து ஹதீஸை அறிவித்துள்ளார். (ஒருவரிடம் சிறிது குறைக் கண்டால்கூட அவரிடமிருந்து அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 65
    அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    ஹதீஸை அறிவிக்கமாட்டேன் என்ற கொள்கையுடையவர்)
  • ஹிப்பான் பின் ஹிலால் அல்பாஹிலீ இவர் பலமானவர் என்று கூறியதாக புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் குறிப்பிட்டுள்ளார்.
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் இவரிடம் நான் எந்தக் குறையையும் காணவில்லை என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.
  • முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் இவரின் ஒரு செய்தியை துணைச் சான்றாக கூறியுள்ளார். (பார்க்க: முஸ்லிம்-2294)
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் இவர் சுமாரானவர் என்றக் கருத்தில் கூறியுள்ளார்.

இவரை விமர்சித்தவர்கள்:

  • இவர் வியாபாரியாக இருந்தார். ஹதீஸ்கள் விசயத்தில் அந்தளவிற்கு இல்லை என்று யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    கூறியுள்ளார்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இவரிடமிருந்து ஹதீஸைக் கேட்பதைத் தடுத்ததாக இப்னு அபூகைஸமா கூறியுள்ளார்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் இவரிடம் சிறிது பலவீனம் உள்ளது என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் நம்பகமானவர்; சிறிது தவறிழைப்பவர் என்றும் கூறியுள்ளார்.

(நூல்கள்: தாரீகுல் கபீர்-2581, 3/208, அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/99, தஹ்தீபுல் கமால்-5/364, தாரீகுல் இஸ்லாம்-4/325, தஹ்தீபுத் தஹ்தீப்-1/348, தக்ரீபுத் தஹ்தீப்-1/218)

 

1 . இந்தக் கருத்தில் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அல்அன்ஸாரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்அம்வால்-அபூஉபைத்-934 , ஷரஹ் மஆனில் ஆஸார்-7364 , தாரகுத்னீ-1987 , ஹாகிம்-1445 , குப்ரா பைஹகீ-7258 , 7259 ,

2 . அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா பைஹகீ-7255 .

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-1454 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.