பாடம் : 65 கடலிலிருந்து கிடைப்பவை.
புதையலில் கொழுப்புத் தலை திமிங்கம் (அம்பர்) சேராது. ஏனெனில் அது கடலலைகள் ஒதுக்கும் ஒரு பொருளாகும் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள்.
அம்பரிலும் முத்துக்களிலும் ஐந்தில் ஒரு பகுதி ஸகாத் உள்ளது என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இது தவறாகும். ஏனெனில்,) நபி (ஸல்) அவர்கள் புதையலுக்குத்தான் ஐந்தில் ஒரு பகுதி ஸகாத் என்றார்கள். தண்ணீரில் கிடைப்பவற்றுக்கு அல்ல.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்ரவேலர்களில் ஒருவர் தம் சமூகத்தைச் சேர்ந்த சிலரிடம் ஆயிரம் தீனார் கடன் கேட்டார். (அதற்கு ஒருவர் இசைந்து) அவருக்குப் பணத்தைக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது.
ஆனால், கடலில் செல்ல எந்த வாகனமும் கிடைக்கவில்லை. எனவே, ஒரு மரக்கட்டையை எடுத்து அதில் துளையிட்டு ஆயிரம் தீனாரையும் அதில் வைத்து அடைத்து கடலில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார்.
ஒரு நாள் அவருக்குக் கடன் கொடுத்த மனிதர் வெளிக் கிளம்பி (அவ்வழியே) வந்தபோது மரக்கட்டை ஒன்று கிடப்பதைக் கண்டு அதை (எரிப்பதற்கு) விறகாகத் தம் வீட்டிற்கு எடுத்து வந்தார். அதை(க் கோடாரியால்) பிளந்தபோது தம் பொருளைப் பெற்றார்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 24
بَابُ مَا يُسْتَخْرَجُ مِنَ البَحْرِ
وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «لَيْسَ العَنْبَرُ بِرِكَازٍ هُوَ شَيْءٌ دَسَرَهُ البَحْرُ» وَقَالَ الحَسَنُ فِي العَنْبَرِ وَاللُّؤْلُؤِ: «الخُمُسُ» فَإِنَّمَا جَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فِي الرِّكَازِ الخُمُسَ» لَيْسَ فِي الَّذِي يُصَابُ فِي المَاءِ
وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«أَنَّ رَجُلًا مِنْ بَنِي إِسْرَائِيلَ سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ بِأَنْ يُسْلِفَهُ أَلْفَ دِينَارٍ، فَدَفَعَهَا إِلَيْهِ فَخَرَجَ فِي البَحْرِ، فَلَمْ يَجِدْ مَرْكَبًا، فَأَخَذَ خَشَبَةً، فَنَقَرَهَا، فَأَدْخَلَ فِيهَا أَلْفَ دِينَارٍ، فَرَمَى بِهَا فِي البَحْرِ، فَخَرَجَ الرَّجُلُ الَّذِي كَانَ أَسْلَفَهُ، فَإِذَا بِالخَشَبَةِ، فَأَخَذَهَا لِأَهْلِهِ حَطَبًا»، فَذَكَرَ الحَدِيثَ فَلَمَّا نَشَرَهَا وَجَدَ المَالَ
சமீப விமர்சனங்கள்