நாயின் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீர் அனுப்பி, அது (பிராணியை) கொன்றால் அதை நீர் சாப்பிடு! வேட்டை நாய் வேட்டையாடப்பட்ட பிராணியிலிருந்து (எதையேனும்) சாப்பிட்டிருக்குமானால் அதை நீர் சாப்பிடாதே! ஏனெனில், அது தனக்காகவே அதைப் பிடித்திருக்கிறது’ என்று கூறியபோது,
‘என்னுடைய நாயை அனுப்புகிறேன்; ஆனால் (வேட்டையில்) அதோடு வேறொரு நாயையும் காண்கிறேன்?’ என்று கேட்டேன். ‘அப்படியானால் அதை நீர் சாப்பிடாதே! (ஏனெனில், நீர் உம்முடைய நாயைத்தான் இறைவனின் பெயர் சொல்லி அனுப்பினீரே தவிர வேறு நாய்க்கு நீர் இறைவனின் பெயர் சொல்லவில்லை’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அதீய் இப்னு ஹாதிம் (ரலி) அறிவித்தார்.
Book :4
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ ابْنِ أَبِي السَّفَرِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ
سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ المُعَلَّمَ فَقَتَلَ فَكُلْ، وَإِذَا أَكَلَ فَلاَ تَأْكُلْ، فَإِنَّمَا أَمْسَكَهُ عَلَى نَفْسِهِ» قُلْتُ: أُرْسِلُ كَلْبِي فَأَجِدُ مَعَهُ كَلْبًا آخَرَ؟ قَالَ: «فَلاَ تَأْكُلْ، فَإِنَّمَا سَمَّيْتَ عَلَى كَلْبِكَ وَلَمْ تُسَمِّ عَلَى كَلْبٍ آخَرَ»
Bukhari-Tamil-175.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-175.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தக் கருத்தில் அதிய்யு பின் ஹாதிம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஆமிர் ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
—> அதிய்யு பின் ஹாதிம் (ரலி)
பார்க்க: அஹ்மத்- , தாரிமீ- , புகாரி-175 , 2054 , 5475 , 5476 , 5483 , 5484 , 5486 , 5487 , முஸ்லிம்- , இப்னு மாஜா-3208 , 3212 , 3213 , 3214 , அபூதாவூத்-2848 , 2849 , 2850 , 2851 , 2854 , திர்மிதீ-1469 , 1470 , 1471 , நஸாயீ-4263 , 4264 , 4268 , 4269 , 4270 , 4271 , 4272 , 4273 , 4274 , 4275 , 4298 , 4299 , 4306 , 4307 , 4308 ,
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்