பாடம் : 35 ஒருவர் தம் நண்பருக்கு உளூ செய்ய உதவுதல்.
‘நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள்.
‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?’ என்று நான் கேட்டதற்கு, ‘தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
Book : 4
بَابٌ: الرَّجُلُ يُوَضِّئُ صَاحِبَهُ
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ يَحْيَى، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أَفَاضَ مِنْ عَرَفةَ عَدَلَ إِلَى الشِّعْبِ فَقَضَى حَاجَتَهُ، قَالَ أُسَامَةُ بْنُ زَيْدٍ فَجَعَلْتُ أَصُبُّ عَلَيْهِ وَيَتَوَضَّأُ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتُصَلِّي؟ فَقَالَ: «المُصَلَّى أَمَامَكَ»
Bukhari-Tamil-181.
Bukhari-TamilMisc-181.
Bukhari-Shamila-181.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-177.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . முஹம்மத் பின் ஸலாம்-அல்பைகந்தீ
3 . யஸீத் பின் ஹாரூன்
4 . யஹ்யா பின் ஸயீத்-அல்அன்ஸாரீ
5 . மூஸா பின் உக்பா-அல்குரைஷீ
6 . குரைப் பின் அபூமுஸ்லிம்-அல்குரைஷீ
7 . உஸாமா பின் ஸைத் (ரலி)-அல்கல்பீ
சமீப விமர்சனங்கள்