தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1969

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 52

ஷஅபான் மாதத்தில் நோன்பு நோற்பது.

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்” என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள். “(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்” என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள்!

ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!

அத்தியாயம்: 30

(புகாரி: 1969)

بَابُ صَوْمِ شَعْبَانَ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” يَصُومُ حَتَّى نَقُولَ: لاَ يُفْطِرُ، وَيُفْطِرُ حَتَّى نَقُولَ: لاَ يَصُومُ، فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ، وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ


Bukhari-Tamil-1969.
Bukhari-TamilMisc-1969.
Bukhari-Shamila-1969.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: புகாரி-1970.

2 comments on Bukhari-1969

  1. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمٰنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ:
    قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِذَا انْتَصَفَ شَعْبَانُ فَلَا تَصُومُوا?

    1. அஸ்ஸலாமு அலைக்கும். இந்தச் செய்தியை பற்றிய சுருக்கம்:

      இதை இப்னு மயீன், அஹ்மத், பைஹகீ போன்ற சிலர் முன்கர் என்று கூறியுள்ளனர். காரணம் நபி (ஸல்) அவர்கள் சில நேரம் ஷஃபான் மாத நோன்பை ரமலான் வரை தொடர்வார்கள் என்றும், ரமலானுக்கு ஒரு நாள், அல்லது இருநாள்களுக்கு முன்பு நோன்பு வைக்காதீர்கள் என்று மற்றவர்களை தடுத்ததாகவும் ஹதீஸ்கள் உள்ளன. இதை அலாஃ அவர்கள் தனது தந்தையிடமிருந்து தனித்து அறிவித்துள்ளார் என்று கூறி மறுக்கின்றனர்.

      மற்ற அறிஞர்கள் இதை சரியானது என்றே முடிவு செய்கின்றனர். இதற்கு அவர்கள் கூறும் விளக்கம், அலாஃ அவர்கள் தனது தந்தையிடமிருந்து தனித்து அறிவிப்பதால் பலவீனமாகிவிடாது, பலமானவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் ஏற்கப்படும் என்றும், இந்தத் தடை ஒருவர் அறவே நோன்பு வைக்காமல் இருந்து ஷஃபான் மாதம் வந்தவுடன் அதில் மட்டும் எந்த காரணமும் இல்லாமல் நோன்பு வைப்பதே என்று கூறியுள்ளனர். இன்ஷா அல்லாஹ் இந்த செய்தியைப் பற்றி மற்ற கூடுதல் தகவலை பிறகு பதிவு செய்வோம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.