ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள்.
உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்! என்றும் நபி (ஸல்) கூறுவார்கள்.
(கூடுதலாக தொழும் வணக்கங்களில்) குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையே நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.
அத்தியாயம்: 30
(புகாரி: 1970)حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، حَدَّثَتْهُ قَالَتْ
لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ، فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ
وَكَانَ يَقُولُ: «خُذُوا مِنَ العَمَلِ مَا تُطِيقُونَ، فَإِنَّ اللَّهَ لاَ يَمَلُّ حَتَّى تَمَلُّوا»
«وَأَحَبُّ الصَّلاَةِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا دُووِمَ عَلَيْهِ وَإِنْ قَلَّتْ، وَكَانَ إِذَا صَلَّى صَلاَةً دَاوَمَ عَلَيْهَا»
Bukhari-Tamil-1970.
Bukhari-TamilMisc-1970.
Bukhari-Shamila-1970.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் கருத்தை அபூஸலமா அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் சிலர் சுருக்கமாகவும், தனித்தனியாகவும் அறிவித்துள்ளனர். சிலர் விரிவாகவும், சேர்த்தும் அறிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
மேலும் இந்தச் செய்தியின் முதல் பகுதியின் கருத்தை யஹ்யா பின் அபூகஸீர் அவர்களிடமிருந்து அவ்ஸாஈ, ஹிஷாம் அத்தஸ்துவாஈ, உகைல் பின் காலித் போன்ற பலரும் அறிவித்துள்ளனர்.
சில விமர்சிக்கப்பட்டவர்கள் இதை விடக் கூடுதலாக “நிச்சயமாக அல்லாஹ், அந்த ஆண்டில் மரணிக்கவிருக்கும் ஒவ்வொரு உயிரையும் (பட்டியலில்) பதிவு செய்கிறான். எனவே, எனது தவணை-மரண நேரம் வரும்போது நான் (ஷஅபானில்) நோன்பாளியாக இருப்பதை விரும்புகிறேன்” என்ற கருத்தை அறிவித்துள்ளனர். மற்ற மிகப் பலமானவர்களுக்கு மாற்றமாக இருப்பதால் இது பலவீனமான கருத்தாகும்.
(பார்க்க: ஸவாஇத் செய்திகள்: முஸ்னத் அபீ யஃலா-4911)
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸலமா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: … அஹ்மத்- 24542, 24967, 25558, 26123, புகாரி-1970, 1969, முஸ்லிம்-2132, நஸாயீ- 2180, …
- ஸாலிம் பின் அபூஉமைய்யா —> அபூஸலமா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: … மாலிக்-859, அஹ்மத்- 24757, 25195, 25195, 26053, முஸ்லிம்-2130, அபூதாவூத்- 2434, திர்மிதீ-737, நஸாயீ- 2351, …
- முஹம்மத் பின் அம்ர் —> அபூஸலமா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க:
…
…
2 . உம்மு ஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-736.
3 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-528.
சமீப விமர்சனங்கள்