தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-528

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தைத் தவிர வேறு எந்த மாதத்திலும் முழுமையாக நோன்பு நோற்றதில்லை.

எனினும், ஷஅபான் மாத நோன்பை ரமளான் மாத நோன்புடன் சேர்த்து தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பார்கள்.

சில சமயம் அவர்கள் தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டே இருப்பார்கள். அப்போது நாங்கள், “இனி அவர்கள் நோன்பை விடமாட்டார்கள்” என்று சொல்லிக் கொள்வோம். சில சமயம் அவர்கள் நோன்பை விட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்போது நாங்கள், “இனி அவர்கள் நோன்பு நோற்கமாட்டார்கள்” என்று சொல்லிக் கொள்வோம்.

அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி)

 

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 528)

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ، ثنا يَحْيَى بْنُ عَبْدِ الْحَمِيدِ، ثنا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، وَأُمِّ سَلَمَةَ، قَالَتَا:

«مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا سِوَى رَمَضَانَ إِلَّا شَعْبَانَ، فَإِنَّهُ كَانَ يَصِلُهُ بِرَمَضَانَ، فَيَكُونُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ، وَكَانَ يَصُومُ الشَّهْرَ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-528.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-19069.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்

2 . ஹுஸைன் பின் இஸ்ஹாக்

3 . யஹ்யா பின் அப்துல்ஹமீத்

4 . கைஸ் பின் ரபீஉ

5 . மன்ஸூர் பின் முஃதமிர்

6 . ஸாலிம் பின் அபுல்ஜஃத்

7 . அபூஸலமா

8 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி), 9 . உம்மு ஸலமா (ரலி)


 


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (15/ 210)
3955- وسئل عن حديث أبي سلمة، عن أم سلمة، قالت: كان النبي صلى الله عليه وسلم، يصوم من الشهر حتى نقول: لا يفطر، ويفطر حتى نقول: لا يصوم إلا شعبان، فإنه كان يصله برمضان.
فَقَالَ: يَرْوِيهِ مَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فرواه قيس بن الربيع، عن منصور، عن سالم، عن أبي سلمة، عن عائشة، وأم سلمة.
ورواه … ، عن منصور، عن سالم، عن أبي سلمة، عن أم سلمة وحدها وهو المحفوظ.
وقيل: عن شعبة، عن منصور، عن هلال، عن أبي سلمة، عن أم سلمة، قاله خلاد بن أسلم، عن النضر، عن شعبة.


3 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-528,


மேலும் பார்க்க: புகாரி-1970.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.