தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1983

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 62

மாதக் கடைசியில் நோன்பு நோற்றல்.

 முதர்ரிஃப் (ரஹ்) அறிவித்தார்.

இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) அவர்களிடமோ, அவர்கள் செவிமடுத்துக் கொண்டிருக்க வேறொருவரிடமோ நபி (ஸல்) அவர்கள் ‘இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா?’ என்று கேட்டார்கள். அம்மனிதர் ‘இல்லை! இறைத்தூதர் அவர்களே!’ என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘நீர் நோன்பைவிட்டுவிட்டால் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பீராக!’ என்று கூறினார்கள்.

‘நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தைக் கருத்தில் கொண்டே. ‘இம்மாதம்’ என்று சொன்னதாக எனக்கு இதை அறிவித்தவர் (மஹ்தீ இப்னு மைமூன்) கூறினார்கள் என நான் நினைக்கிறேன்!’ என்று அபுந் நுஃமான் கூறுகிறார்.

‘நபியவர்கள் ரமளானையே கருத்தில் கொண்டு ‘இம்மாதம்’ என்று சொன்னதாக நான் நினைக்கிறேன்!’ என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான ‘ஸல்த்’ என்பவர் கூறவில்லை.

‘ஷஅபானின் கடைசி’ என்று மற்றோர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
Book : 30

(புகாரி: 1983)

بَابُ الصَّوْمِ مِنْ آخِرِ الشَّهْرِ

حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مَهْدِيٌّ، عَنْ غَيْلاَنَ، ح وحَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

أَنَّهُ سَأَلَهُ – أَوْ سَأَلَ رَجُلًا وَعِمْرَانُ يَسْمَعُ -، فَقَالَ: «يَا أَبَا فُلاَنٍ، أَمَا صُمْتَ سَرَرَ هَذَا الشَّهْرِ؟» قَالَ: – أَظُنُّهُ قَالَ: يَعْنِي رَمَضَانَ -، قَالَ الرَّجُلُ: لاَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَإِذَا أَفْطَرْتَ فَصُمْ يَوْمَيْنِ»،

لَمْ يَقُلِ الصَّلْتُ: أَظُنُّهُ يَعْنِي رَمَضَانَ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ : وَقَالَ ثَابِتٌ: عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ سَرَرِ شَعْبَانَ»


Bukhari-Tamil-1983.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1983.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




ஹதீஸின் விளக்கம் ஆய்வில்…

1 . இந்தக் கருத்தில் இம்ரான் பின் ஹுசைன் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முதர்ரிஃப் (ரஹ்) —> இம்ரான் பின் ஹுசைன் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-870 , அஹ்மத்-19839 , 19882 , 19896 , 19947 , 19970 , 19978 , 19979 , 19988 , 20006 , தாரிமீ-1783 , புகாரி-1983 , முஸ்லிம்-2150 , 2154 , 2155 , 2156 , அபூதாவூத்-2328 , …

  • அபுல் அலா —> இம்ரான் பின் ஹுசைன் (ரலி)

பார்க்க: அஹ்மத்-19971 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.