தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2072

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்.’ என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.
Book :34

(புகாரி: 2072)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ ثَوْرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ المِقْدَامِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ، خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ، كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ»





10 comments on Bukhari-2072

  1. அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரரே உங்கள் கமேண்ட் பாக்ஸில் அரபியில் பதிய முடியவில்லை சரி செய்யவும்.

    1. வ அலைக்கும் ஸலாம். சகோதரரே! எங்களால் பதிய முடிகிறது. இதில் பிரச்சனை இல்லை.

      1. الرابط:https://al-maktaba.org/book/12999/934#p1

        பதிய முயற்சி செய்தேன் முடியவில்லை.அதன் லிங்கை இணைத்துள்ளேன்.இந்த செய்தியின் தரம் மற்றும் தமிழாக்கம் தேவை இன்ஷா அல்லாஹ் தயவுசெய்து பதியவும்.

        1. 1106 – قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَمْرِو بْنِ هَرِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْأَنْصَارِيِّ، أَنَّ فِي كِتَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَفِي كِتَابِ عُمَرَ فِي الصَّدَقَةِ أَنَّ «§الذَّهَبَ لَا يُؤْخَذُ مِنْهُ شَيْءٌ حَتَّى يَبْلُغَ عِشْرِينَ دِينَارًا، فَإِذَا بَلَغَ عِشْرِينَ دِينَارًا فَفِيهِ نِصْفُ دِينَارٍ، وَالْوَرِقُ لَا يُؤْخَذُ مِنْهُ شَيْءٌ حَتَّى يَبْلُغَ مِائَتَيْ دِرْهَمٍ، فَإِذَا بَلَغَ مِائَتَيْ دِرْهَمٍ فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ»

          இந்த செய்தி முர்ஸல் ஆகும். இதை அறிவிக்கும் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் தாபிஈ ஆவார். இவர் நபி (ஸல்) அவர்களின் (கடிதம் அல்லது நூலிலிருந்து அறிவிக்கிறார். ஆனால் இந்த வகை செய்தி ஒருவர் மற்றவரின் நூலிலிருந்து அல்லது கடிதத்திலிருந்து அறிவிக்கும் விஜாதஹ் என்ற வகையில் சேரும். இந்த வகை செய்திகளை ஏற்கக்கூடாது என்று சில அறிஞர்களும்; ஏற்கலாம் என்று சில அறிஞர்களும் கூறியுள்ளனர். இதைப் பற்றி விரிவாக அல்பாஇஸுல் ஹஸீஸ்-அஹ்மத் ஷாகிர் அவர்களின் விளக்கவுரையில் காணலாம்.

          1. ஜஸாகல்லாஹ்… அல்லாஹ் உங்கள் பணியை சிறப்பாக்கிவைப்பானாகா.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.