தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2297

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

2297. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாகவே என் பெற்றோர் முஸ்லிம்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும் மாலையிலும் எங்களிடம் வராமல் ஒரு நாளும் கழிந்தது இல்லை. முஸ்லிம்கள் (எதிரிகளின் கொடுமைகளால்) சோதனைக்குள்ளாக்கப்பட்ட போது, அபூ பக்ர்(ரலி) தாயகம் துறந்து அபிஸினியாவை நோக்கி சென்றார்கள். ‘பர்குல் ஃம்மாத்’ எனும் இடத்தை அவர்கள் அடைந்தபோது அப்பகுதியின் தலைவர் இப்னு தஃகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம், ‘எங்கே செல்கிறீர்?’ என்று கேட்டார்.

அபூ பக்ர்(ரலி) ‘என் சமுதாயத்தவர் என்னை வெளியேற்றிவிட்டனர்; எனவே பூமியில் பயணம் (செய்து வேறுபகுதிக்குச்) சென்று என் இறைவனை வணங்கப் போகிறேன்! என்று கூறினார்கள். அதற்கு இப்னு தஃகினா, ‘உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது’ வெளியேற்றப்படவும்கூடாது! ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்; பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்; விருத்தினர்களை உபசரிக்கிறீர். எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன்! எனவே, திரும்பி உம்முடைய ஊருக்குச் சென்று இறைவனை வணங்குவீராக!’ எனக் கூறினார்.

இப்னு தஃகினா, தம்முடன் அபூ பக்ர்(ரலி)அவர்களை அழைத்துக் கொண்டு குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் பிரமுகர்களைச் சந்தித்தார். அவர்களிடம், ‘அபூ பக்ரைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது! ஏழைகளுக்காக உழைக்கின்ற, உறவினர்களுடன் இணங்கி வாழ்கின்ற, விருந்தினரை உபசரிக்கின்ற, பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கின்ற, துன்பப்படுபவர்களுக்கு உதவுகிற ஒரு மனிதரை நீங்கள் வெளியேற்றலாமா?’ என்று கேட்டார்.

எனவே, குறைஷியர் இப்னு தஃகினாவின் அடைக்கலத்தை ஏற்று அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். மேலும் இப்னு தஃகினாவிடம், ‘தம் வீட்டில் தம் இறைவனைத் தொழுது வருமாறும், விரும்பியதை ஓதுமாறும், அதனால் எங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும், அதை பகிரங்கமாகச் செய்யாதிருக்கும் படியும் அபூ பக்ருக்கு நீர் கூறும்! ஏனெனில், எங்களுடைய மனைவி மக்களை அவர் குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்!’ என்றனர்.

இதை இப்னு தஃகினா, அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் தெரிவித்தார். பிறகு, அபூ பக்ர்(ரலி) வீட்டிற்கு வெளியே தொழுது, ஓதீ பகிரங்கப்படுத்தாமல் தம் வீட்டிற்குள்ளேயே தம் இறைவனை வணங்கலானார்கள். பிறகு, அவர்களுக்கு ஏதோ தோன்ற தம் வீட்டிற்கு முன்புறத்திலுள்ள காலியிடத்தில் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டி வெளியே வந்(து தொழு)தார்கள். அந்தப் பள்ளிவாசலில் தொழவும் குர்ஆன் ஓதவும் தொடங்கினார்கள். இணைவைப்பவர்களின் மனைவிமக்கள் திரண்டு வந்து, ஆச்சரியத்துடன்அவரை கவனிக்கலாயினர். அபூ பக்ர்(ரலி) குர்ஆன் ஓதும்போது (மனம் உருகி வெளிப்படும்) தம் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகம் அழுபவராக இருந்தார்கள்.

இணைவைப்போரான குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது. இப்னு தஃகினாவை உடனே அழைத்து வரச் செய்து ‘அபூ பக்ர் அவர்கள், தம் வீட்டில்தான் வணங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாங்கள் அவருக்குப் பாதுகாப்பளித்திருந்தோம். அவர், அதை மீறித் தம் வீட்டில் முன்னால் உள்ள காலியிடத்தில் பள்ளிவாசலைக் கட்டிவிட்டார். பகிரங்கமாக தொழவும் ஓதவும் தொடங்கிவிட்டார். அவர் எங்கள் மனைவி மக்களைக் குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, அவர் தம் இறைவனைத் தம் வீட்டில் மட்டும் வணங்குவதாக இருந்தால் செய்யட்டும்; பகிரங்கமாகத்தான் செய்வேன் என்று அவர் கூறிவிட்டால் நீர் கொடுத்த அடைக்கலத்தை மறுத்து விடும்படி அவரிடம் கேளும்! ஏனெனில், உம்மிடம் செய்த ஒப்பந்ததை முறிக்கவும் நாங்கள் விரும்பவில்லை; அதே சமயம் அபூ பக்ர் அவர்கள் பகிரங்கமாகச் செயல்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவும் (தயாராக) இல்லை!’ என்று அவர்கள் கூறினார்கள்.

உடனே இப்னு தஃகினா, அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து ‘எந்த அடிப்படையில் நான் உமக்கு அடைக்கலம் தந்தேன் என்பதை நீர் அறிவீர்! நீர் அதன்படி நடக்க வேண்டும்! இல்லையென்றால் என்னுடைய அடைக்கலத்தை என்னிடமே திருப்பித் தந்துவிட்டார்’ என்று பிற்காலத்தில் அரபியர் (என்னைப் பற்றிப்) பேசக் கூடாது என்று விரும்புகிறேன்!’ எனக் கூறினார்.

அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘உம்முடைய அடைக்கல ஒப்பந்தத்தை நான் உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன்! அல்லாஹ்வின் அடைக்கலத்தில் நான் திருப்தியுறுகிறேன்!’ என்று கூறினார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தார்கள். ‘நீங்கள் (மக்காவைத்) துறந்து (அபயம் பெறச்) செல்லும் நாடு எனக்குக் காட்டப்பட்டது. அது மலைகளுக்கிடையேயுள்ளதும் பேரீச்ச மரங்கள் நிறைந்துமான உவர் நிலமாகும்! அந்த இரண்டு மலைகள்தான் (மதீனாவின்) இரண்டு கருங்கல் பூமிகளாகும்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை நபி(ஸல்) அவர்கள் கூறியபோது மதீனாவை நோக்கிச் சிலர் திரும்பி வந்தனர். அபூ பக்ர்(ரலி) ஹிஜ்ரத் செய்யத் தயாரானபோது, அவர்களிடம் ‘சற்றுப் பொறுப்பீராக! எனக்கு அனுமதி அளிக்கப்படவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) ‘என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நீங்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்!’ என்றார்கள்.

நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து செல்வதற்காக அபூ பக்ர்(ரலி) தம் பயணத்தை நிறுத்தினார்கள். தம்மிடத்திலிருந்து இரண்டு ஒட்டகங்களுக்கும் ‘சமுர்’ எனும் மரத்திலிருந்த இலைகளை நான்கு மாதங்கள் தீனியாகப் போட்டார்கள்.
Book :39


بَابُ جِوَارِ أَبِي بَكْرٍ فِي عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَقْدِهِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، قَالَ ابْنُ شِهَابٍ: فَأَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ

لَمْ أَعْقِلْ أَبَوَيَّ قَطُّ إِلَّا وَهُمَا يَدِينَانِ الدِّينَ، وَقَالَ أَبُو صَالِحٍ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: لَمْ أَعْقِلْ أَبَوَيَّ قَطُّ إِلَّا وَهُمَا يَدِينَانِ الدِّينَ، وَلَمْ يَمُرَّ عَلَيْنَا يَوْمٌ إِلَّا يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَرَفَيِ النَّهَارِ، بُكْرَةً وَعَشِيَّةً، فَلَمَّا ابْتُلِيَ المُسْلِمُونَ، خَرَجَ أَبُو بَكْرٍ مُهَاجِرًا قِبَلَ الحَبَشَةِ، حَتَّى إِذَا بَلَغَ بَرْكَ الغِمَادِ لَقِيَهُ ابْنُ الدَّغِنَةِ، وَهُوَ سَيِّدُ القَارَةِ، فَقَالَ: أَيْنَ تُرِيدُ يَا أَبَا بَكْرٍ؟ فَقَالَ أَبُو بَكْرٍ: أَخْرَجَنِي قَوْمِي، فَأَنَا أُرِيدُ أَنْ أَسِيحَ فِي الأَرْضِ، فَأَعْبُدَ رَبِّي، قَالَ ابْنُ الدَّغِنَةِ: إِنَّ مِثْلَكَ لاَ يَخْرُجُ وَلاَ يُخْرَجُ، فَإِنَّكَ تَكْسِبُ المَعْدُومَ، وَتَصِلُ الرَّحِمَ، وَتَحْمِلُ الكَلَّ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الحَقِّ، وَأَنَا لَكَ جَارٌ، فَارْجِعْ فَاعْبُدْ رَبَّكَ بِبِلاَدِكَ، فَارْتَحَلَ ابْنُ الدَّغِنَةِ، فَرَجَعَ مَعَ أَبِي بَكْرٍ، فَطَافَ فِي أَشْرَافِ كُفَّارِ قُرَيْشٍ، فَقَالَ لَهُمْ: إِنَّ أَبَا بَكْرٍ لاَ يَخْرُجُ مِثْلُهُ وَلاَ يُخْرَجُ، أَتُخْرِجُونَ رَجُلًا يُكْسِبُ المَعْدُومَ، وَيَصِلُ الرَّحِمَ، وَيَحْمِلُ الكَلَّ، وَيَقْرِي الضَّيْفَ، وَيُعِينُ عَلَى نَوَائِبِ الحَقِّ، فَأَنْفَذَتْ قُرَيْشٌ جِوَارَ ابْنِ الدَّغِنَةِ، وَآمَنُوا أَبَا بَكْرٍ، وَقَالُوا لِابْنِ الدَّغِنَةِ: مُرْ أَبَا بَكْرٍ، فَلْيَعْبُدْ رَبَّهُ فِي دَارِهِ، فَلْيُصَلِّ، وَلْيَقْرَأْ مَا شَاءَ، وَلاَ يُؤْذِينَا بِذَلِكَ، وَلاَ يَسْتَعْلِنْ بِهِ، فَإِنَّا قَدْ خَشِينَا أَنْ يَفْتِنَ أَبْنَاءَنَا وَنِسَاءَنَا، قَالَ ذَلِكَ ابْنُ الدَّغِنَةِ لِأَبِي بَكْرٍ، فَطَفِقَ أَبُو بَكْرٍ يَعْبُدُ رَبَّهُ فِي دَارِهِ، وَلاَ يَسْتَعْلِنُ بِالصَّلاَةِ، وَلاَ القِرَاءَةِ فِي غَيْرِ دَارِهِ، ثُمَّ بَدَا لِأَبِي بَكْرٍ، فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ وَبَرَزَ، فَكَانَ يُصَلِّي فِيهِ، وَيَقْرَأُ القُرْآنَ، فَيَتَقَصَّفُ عَلَيْهِ نِسَاءُ المُشْرِكِينَ وَأَبْنَاؤُهُمْ، يَعْجَبُونَ وَيَنْظُرُونَ إِلَيْهِ، وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلًا بَكَّاءً، لاَ يَمْلِكُ دَمْعَهُ حِينَ يَقْرَأُ القُرْآنَ، فَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنَ المُشْرِكِينَ، فَأَرْسَلُوا إِلَى ابْنِ الدَّغِنَةِ، فَقَدِمَ عَلَيْهِمْ فَقَالُوا لَهُ: إِنَّا كُنَّا أَجَرْنَا أَبَا بَكْرٍ عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِي دَارِهِ، وَإِنَّهُ جَاوَزَ ذَلِكَ، فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ، وَأَعْلَنَ الصَّلاَةَ وَالقِرَاءَةَ، وَقَدْ خَشِينَا أَنْ يَفْتِنَ أَبْنَاءَنَا وَنِسَاءَنَا، فَأْتِهِ، فَإِنْ أَحَبَّ أَنْ يَقْتَصِرَ عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِي دَارِهِ فَعَلَ، وَإِنْ أَبَى إِلَّا أَنْ يُعْلِنَ ذَلِكَ، فَسَلْهُ أَنْ يَرُدَّ إِلَيْكَ ذِمَّتَكَ، فَإِنَّا كَرِهْنَا أَنْ نُخْفِرَكَ، وَلَسْنَا مُقِرِّينَ لِأَبِي بَكْرٍ الِاسْتِعْلاَنَ، قَالَتْ عَائِشَةُ: فَأَتَى ابْنُ الدَّغِنَةِ أَبَا بَكْرٍ، فَقَالَ: قَدْ عَلِمْتَ الَّذِي عَقَدْتُ لَكَ عَلَيْهِ، فَإِمَّا أَنْ تَقْتَصِرَ عَلَى ذَلِكَ، وَإِمَّا أَنْ تَرُدَّ إِلَيَّ ذِمَّتِي، فَإِنِّي لاَ أُحِبُّ أَنْ تَسْمَعَ العَرَبُ، أَنِّي أُخْفِرْتُ فِي رَجُلٍ عَقَدْتُ لَهُ، قَالَ أَبُو بَكْرٍ: إِنِّي أَرُدُّ إِلَيْكَ جِوَارَكَ، وَأَرْضَى بِجِوَارِ اللَّهِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ بِمَكَّةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أُرِيتُ دَارَ هِجْرَتِكُمْ، رَأَيْتُ سَبْخَةً ذَاتَ نَخْلٍ بَيْنَ لاَبَتَيْنِ»، وَهُمَا الحَرَّتَانِ، فَهَاجَرَ مَنْ هَاجَرَ قِبَلَ المَدِينَةِ حِينَ ذَكَرَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَجَعَ إِلَى المَدِينَةِ بَعْضُ مَنْ كَانَ هَاجَرَ إِلَى أَرْضِ الحَبَشَةِ، وَتَجَهَّزَ أَبُو بَكْرٍ مُهَاجِرًا، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى رِسْلِكَ، فَإِنِّي أَرْجُو أَنْ يُؤْذَنَ لِي»، قَالَ أَبُو بَكْرٍ: هَلْ تَرْجُو ذَلِكَ بِأَبِي أَنْتَ؟ قَالَ: «نَعَمْ»، فَحَبَسَ أَبُو بَكْرٍ نَفْسَهُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَصْحَبَهُ، وَعَلَفَ رَاحِلَتَيْنِ كَانَتَا عِنْدَهُ وَرَقَ السَّمُرِ أَرْبَعَةَ أَشْهُرٍ


Bukhari-Tamil-2297.
Bukhari-TamilMisc-2297.
Bukhari-Shamila-2297.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
(2. மிகப் பலமானவர்)
.

2 . யஹ்யா பின் அப்துல்லாஹ்-அல்குரஷீ (3. பலமானவர்).

3 . லைஸ் பின் ஸஃத்-அபுல்ஹாரிஸ் (2. மிகப் பலமானவர்).

4 . உகைல் பின் காலித்-அல்அய்லீ (2. மிகப் பலமானவர்).

5 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப் (2. மிகப் பலமானவர்).

6 . உர்வா பின் ஸுபைர்-அல்அஸதீ (3. பலமானவர்).

7 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
பின்த் அபூபக்ர் (ரலி)
(1. நபித்தோழர்)
.


 

புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

محمد بن إسماعيل البخاري

இறப்பு: ஹி-256.

தரம்: மிகப் பலமானவர்.


இயற்பெயர்: முஹம்மத்

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வமிசம்: அல்ஜுஅஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ்

பிறப்பு: ஹிஜ்ரி-194.

இறப்பு: ஹிஜ்ரி-256

கால கட்டம்: 10.


இமாம் புகாரி

முழுப்பெயர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் இப்னுல் முகீரா  (ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம் ஆவார்)

புனைப்பெயர்: அபூ அப்தில்லாஹ் இப்னு அபீ ஹஸனில் புகாரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: இஸ்மாயில்

பிறந்த ஊர்: ரஷ்யாவில் உள்ள புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். எனவே தான் புகாரி – புகாராவைச் சார்ந்தவர் என்ற கருத்தில் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத் தனது 10 வயதில் இருந்தே ஈரானில் உள்ள குராஸான், கூஃபா, பாக்தாத் போன்ற  ஊர்களுக்கும் இன்னும் பஸரா,  எகிப்து, ஸிரியா, மக்கா, மதீனா, போன்ற உலகத்தின் பல பாகங்களுக்கு பயணம் செய்து இருக்கிறார்.

ஸஹீஹ் அல்புகாரிக்கு இமாம் புகாரி வைத்த பெயர்: அல்ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (நபியவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களுடன் வந்துள்ள செய்திகள் இன்னும் அவர்களின் வழிமுறைகள், வாழ்நாட்கள்)

ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (ஸஹீஹுல் புகாரி)

அல் அதபுல் முஃப்ரத்,

அத்தாரிகுல் கபீர், (அறிவிப்பாளர் தொடர்பான நூல்),

அல்லுஃபாவுஸ் ஸகீர் (பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர்பான நூல்),

ரஃபவுல் யதய்ன் ஃபிஸ் ஸலாதி, (தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்),

அல் கிராஅது கல்ஃபல் இமாம்  (இமாமுக்கு பின்னால் ஓதுதல்) போன்ற பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

அஹ்மது இப்னு ஹன்பல், இப்ராஹீம் இப்னு மூஸா அர்ராஸியி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்,           ஹஸன் இப்னு பஸருல் பஜலீ, அபுல் யமான் அல்ஹகம் இப்னு நாபிஃ, கைஸ் இப்னு ஹஃப்ஸுத்தாரமி, நுஐம் இப்னுல் ஹம்மாது அல்மரூஸியி, யஹ்யா இப்னு மயீன், ஹஸன் இப்னு லிஹாக் நைஸாபூரி, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

அபூக்கர் அப்துல்லாஹ் இப்னு அபீதாவூத், ஃபல் இப்னுல் அப்பாஸுர்ராஸி அல்ஹாஃபிழ், அபுஹாதம் முஹம்மது இப்னு இத்ரீஸு அர்-ராஸியி, முஹம்மது இப்னு யூசுஃபுல் ஃபர்பரீய், அத்திர்மிதி, முஸ்லிம் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்

இறப்பு:  ஹிஜ்ரி 256ல் ஷவ்வால் மாதம் நோன்பு பெருநாள் அன்று சனிக்கிழமை இஷா தொழுகை நேரத்தில் மரணித்தார். அப்போது அவருக்கு 62 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

யஹ்யா பின் அப்துல்லாஹ்-அல்குரஷீ

யஹ்யா பின் அப்துல்லாஹ்-அல்குரஷீ-அல்மக்ஸூமீ (ரஹ்) – Yahya bin 'Abdullah bin Bukayr

இறப்பு: ஹிஜ்ரி 231, எகிப்து

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: யஹ்யா பின் அப்துல்லாஹ் பின் புகைர்

தந்தை பெயர்: அப்துல்லாஹ்

வம்சம்: பனூ மக்ஸூம்

புனைப்பெயர்: அபூ ஸகரிய்யா, அல்ஹாஃபிழ், அஸ்ஸதூக்

ஊர் பெயர்: எகிப்து

பயணித்த ஊர்கள்: எகிப்து, ஷாம்

பிறப்பு: ஹிஜ்ரி 154 அல்லது 155

இறப்பு: ஹிஜ்ரி 231, எகிப்து

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

யஹ்யா பின் அப்துல்லாஹ் பின் புகைர் ரஹ் அவர்கள் ஒரு பலமான ஹதீஸ் அறிவிப்பாளர். இவர் ஹிஜ்ரி 154 அல்லது 155 இல் பிறந்தார். எகிப்து மற்றும் ஷாம் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த இவர், ஹிஜ்ரி 231 இல் மரணமடைந்தார்.

மாலிக் இமாம், லைஸ் பின் ஸஅத் போன்ற பல அறிஞர்களிடம் ஹதீஸ்களைக் கற்றார். புகாரி இமாம், முஸ்லிம் இமாம் போன்றோர் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): மாலிக் இமாம், லைஸ் பின் ஸஅத், ஹம்மாத் பின் ஸைத், இப்னு லஹீஆ, பக்ர் பின் முதர், அப்துல்லாஹ் பின் அஸ்ஸம்ஹ் அத்துஜீபீ, அப்துல்லாஹ் பின் ஸுவைத் அல்மஸ்ரீ, அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் அத்தராவர்தீ, யஃகூப் பின் அப்துர்ரஹ்மான் அல்காரீ, முஃகீரா பின் அப்துர்ரஹ்மான் அல்ஹிஸாமீ, முஃபள்ளல் பின் ஃபதாளா, ளம்ரா பின் ரபீஆ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): புகாரி இமாம், முஸ்லிம் இமாம், யஹ்யா பின் மயீன், யூனுஸ் பின் அப்துல் அஃலா அஸ்ஸதஃபீ, ஹர்மலா பின் யஹ்யா அத்துஜீபீ, அபூ ஸுர்ஆ அர்ராஸீ, அபூ ஹாதிம் முஹம்மத் பின் இத்ரீஸ் அர்ராஸீ, அப்துல் மலிக் பின் யஹ்யா பின் புகைர், பகிய்யு பின் மக்லத், முஹம்மத் பின் இப்ராஹீம் அல்பூஷஞ்ஜீ, முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் நுமைர், அபூ உபைதுல் காஸிம் பின் ஸல்லாம்

வேறு பெயர்கள்: யஹ்யா பின் புகைர், யஹ்யா பின் புகைர் அல்மஸ்ரீ, யஹ்யா பின் அப்துல்லாஹ் பின் புகைர்


ஆதாரம்: muslimscholars.info (30239) · Should verify

லைஸ் பின் ஸஃத்-அபுல்ஹாரிஸ்

الليث بن سعد أبو الحارث

இறப்பு: ஹிஜ்ரி 175

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: லைஸ் பின் ஸஃத் பின் அப்துர்ரஹ்மான்

தந்தை பெயர்: ஸஃத் பின் அப்துர்ரஹ்மான்

வம்சம்: ஃபஹ்மீ

புனைப்பெயர்: அபுல்ஹாரிஸ்

ஊர் பெயர்: கர்கஷந்தா

பயணித்த ஊர்கள்: அஸ்பஹான், எகிப்து

பிறப்பு: ஹிஜ்ரி 94, கர்கஷந்தா

இறப்பு: ஹிஜ்ரி 175

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

லைஸ் பின் ஸஃத் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 94 ஆம் ஆண்டு பிறந்தார்கள். அவர்கள் எகிப்தின் இமாம், ஃபகீஹ் மற்றும் ஹதீஸ் அறிஞர் ஆவார்கள். அவர்கள் மிகப் பலமானவர் மற்றும் நம்பகமானவர் என அறிஞர்களால் போற்றப்பட்டார்கள்.

அவர்கள் மிகுந்த தாராள குணம் கொண்டவராகவும், அறிவிலும், இறையச்சத்திலும் சிறந்தவராகவும் திகழ்ந்தார்கள். அவர்கள் ஹிஜ்ரி 175 ஆம் ஆண்டு மரணமடைந்தார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நாஃபிஃ, அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் பின் அபூமுலைக்கா, யஸீத் பின் அபூஹபீப், யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ, முஹம்மத் பின் அஜ்லான் அல்மதனீ, அஸ்ஸுஹ்ரீ, ஹிஷாம் பின் உர்வா, அதா பின் அபூரபாஹ், புகைர் பின் அப்துல்லாஹ் பின் அல்அஷ்ஜ், ஸயீத் பின் அபூஸயீத், அபுஸ்ஸினாத், கதாதா பின் திஆமா

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஷுஐப் பின் அல்லைஸ், அப்துல்லாஹ் பின் முபாரக், அப்துல்லாஹ் பின் வஹ்ப், அப்துல்லாஹ் பின் லஹீஆ, குதைபா பின் ஸயீத், முஹம்மத் பின் அஜ்லான், ஹிஷாம் பின் ஸஃத், ஆதம் பின் அபூஇயாஸ், ஸயீத் பின் அபூமர்யம், அப்துல்லாஹ் பின் யூசுஃப் அத்துனைஸீ, அலீ பின் அய்யாஷ், ஈஸா பின் ஹம்மாத் ஸஃபா

வேறு பெயர்கள்: லைத், லைஸ் பின் ஸஃத்


ஆதாரம்: muslimscholars.info (20023) · Should verify

உகைல் பின் காலித்-அல்அய்லீ

عقيل بن خالد بن عقيل

இறப்பு: ஹிஜ்ரி 144, எகிப்து

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: உகைல் பின் காலித் பின் உகைல்

தந்தை பெயர்: காலித் பின் உகைல்

வம்சம்: அல்உமவீ

புனைப்பெயர்: அபூ காலித்

ஊர் பெயர்: அய்லா

பயணித்த ஊர்கள்: மதீனா, ஷாம், எகிப்து

இறப்பு: ஹிஜ்ரி 144, எகிப்து

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

உகைல் பின் காலித் பின் உகைல் ரஹ் அவர்கள் அபூ காலித் என்ற குன்யாவால் அறியப்பட்டவர். இவர் உஸ்மான் பின் அஃப்பான் ரலி அவர்களின் அடிமை ஆவார். இவர் மதீனா, ஷாம் மற்றும் எகிப்து ஆகிய இடங்களில் வாழ்ந்தார்.

இவர் ஹிஜ்ரி 144 இல் எகிப்தில் மரணமடைந்தார். அஹ்மத், நஸாயீ, யஹ்யா பின் மயீன், அபூ ஹாதிம், அபூ ஸுர்ஆ மற்றும் இப்னு ஸஃத் போன்ற அறிஞர்கள் இவரை மிகப் பலமானவர் என்று கூறியுள்ளனர். இவர் அஸ்ஸுஹ்ரீயின் மாணவர்களில் மிக முக்கியமானவர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): காலித் பின் உகைல், ஸியாத் பின் உகைல், நாஃபிஉ, இக்ரிமா, அல்ஹஸன் அல் பஸரீ, ஸயீத் பின் அபூ ஸயீத் அல்குத்ரீ, ஸயீத் பின் ஸுலைமான் பின் ஸைத், ஸலமா பின் குஹைல், அஸ்ஸுஹ்ரீ, ஸைத் பின் அஸ்லம், ஸாலிம் பின் அப்துல்லாஹ் பின் உமர், அபான் பின் ஸாலிஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): இப்ராஹீம் பின் உகைல், ஸலாமா பின் ரூஹ், அல்முஃபள்ளல் பின் ஃபதாலாஹ், அல்லைஸ் பின் ஸஃத், அப்துல்லாஹ் பின் லஹீஆ, ஜாபிர் பின் இஸ்மாயீல் அல்ஹத்ரமீ, அப்துர்ரஹ்மான் பின் ஸல்மான், ஸயீத் பின் அபூ அய்யூப், நாஃபிஉ பின் யஸீத், யஹ்யா பின் அய்யூப், ஹஜ்ஜாஜ் பின் ஃபராஃபிஸா, யூனுஸ் பின் யஸீத் அல்அய்லீ

வேறு பெயர்கள்: உகைல் பின் காலித், உகைல்


ஆதாரம்: muslimscholars.info (11207) · Should verify

ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப்

محمد بن مسلم بن عبيد الله بن عبد الله بن شهاب بن عبد الله بن الحارث بن زهرة

இறப்பு: ஹிஜ்ரி 124, மதீனா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: முஹம்மத் பின் முஸ்லிம் பின் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் ஷிஹாப் பின் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் பின் ஸுஹ்ரா

தந்தை பெயர்: முஸ்லிம் பின் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்

வம்சம்: குரைஷீ, பனூ ஸுஹ்ரா

புனைப்பெயர்: அபூ பக்ர்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, ஷாம்

பிறப்பு: ஹிஜ்ரி 51, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 124, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸுஹ்ரீ இமாம் ஹிஜ்ரி 51 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார். இவர் ஹிஜ்ரி 124 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார். இவர் தாபிஈ தலைமுறையைச் சேர்ந்தவர்.

மதீனா மற்றும் ஷாம் ஆகிய இடங்களில் வாழ்ந்தார். இவர் ஹதீஸ் கலையில் மிகப் பலமானவர் ஆவார். இவர் ஏராளமான ஹதீஸ்களைத் தொகுத்தவர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): இப்னு உமர், அனஸ் பின் மாலிக், ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸுலைமான் பின் யஸார், உர்வா பின் அஸ்ஸுபைர், அல்கமா பின் வக்காஸ், அலீ பின் அல்ஹுஸைன் பின் அலீ, அல்காஸிம் பின் முஹம்மத், அபூ ஸலமா பின் அப்துர்ரஹ்மான், உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா, அதா பின் அபீ ரபாஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அதா பின் அபீ ரபாஹ், உமர் பின் அப்துல்அஸீஸ், அம்ர் பின் தீனார், யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ, அய்யூப் அஸ்ஸக்திஃயானீ, அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ, இப்னு ஜுரைஜ், அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத், மாலிக் இமாம், மஃமர் பின் ராஷித், ஸுஃப்யான் பின் உயைனா, அல்லைஸ் பின் ஸஃத்

வேறு பெயர்கள்: இப்னு ஷிஹாப், அஸ்ஸுஹ்ரீ, முஹம்மத் பின் முஸ்லிம்


ஆதாரம்: muslimscholars.info (11013) · Should verify

உர்வா பின் ஸுபைர்-அல்அஸதீ

உர்வா பின் ஸுபைர்-அல்குரஷீ (ரஹ்) – 'Urwa ibn al-Zubayr

இறப்பு: ஹிஜ்ரி 93, மதீனா

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: உர்வா பின் ஸுபைர்

தந்தை பெயர்: ஸுபைர் பின் அல்கவ்வாம்

வம்சம்: அல்-அவ்வாம் பின் குவைலித் பின் அஸத் பின் அப்துல் உஸ்ஸா பின் குஸை பின் கிலாப்

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ், அல்ஃபகீஹ்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, அல்அகீக், பஸரா, எகிப்து

பிறப்பு: ஹிஜ்ரி 23, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 93, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

உர்வா பின் ஸுபைர் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 23 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார். இவர் தாபிஈ தலைமுறையைச் சேர்ந்தவர். மதீனாவின் ஏழு ஃபுக்கஹாக்களில் (மார்க்க அறிஞர்களில்) ஒருவராகவும், இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பகால அதிகாரியாகவும் கருதப்படுகிறார்.

இவர் பலமானவர் ஆவார். ஹிஜ்ரி 93 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸுபைர் பின் அல்கவ்வாம், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அஸ்மா பின்த் அபீபக்ர், ஆயிஷா பின்த் அபீபக்ர், அலீ பின் அபீதாலிப், ஸயீத் பின் ஸைத், ஹகீம் பின் ஹிஸாம், ஸைத் பின் ஸாபித், அப்துல்லாஹ் பின் ஜஃபர், இப்னு அப்பாஸ், இப்னு உமர், அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஹிஷாம் பின் உர்வா, அப்துல்லாஹ் பின் உர்வா, உஸ்மான் பின் உர்வா பின் அஸ்ஸுபைர், முஹம்மத் பின் உர்வா பின் அஸ்ஸுபைர், யஹ்யா பின் உர்வா பின் அஸ்ஸுபைர், உமர் பின் அப்துல்லாஹ், முஹம்மத் பின் ஜஃபர் பின் அஸ்ஸுபைர், ஸுலைமான் பின் யஸார், அபூ ஸலமா பின் அப்துர்ரஹ்மான், இப்னு ஷிஹாப், ஸஃப்வான் பின் ஸுலைம், அபுஸ் ஸினாத்

வேறு பெயர்கள்: உர்வா இப்னு ஸுபைர், உர்வா


ஆதாரம்: muslimscholars.info (10511) · Should verify

ஆயிஷா பின்த் அபூபக்ர் (ரலி)

நபித்தோழி, நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.