தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2321

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 2

வேளாண்மைக் கருவிகளைத் துஷ்பிரயோகம் செய்வதால் விளையும் தீமைகளுக்கு அஞ்சுவதும், (வணிகம், வேளாண்மை இவற்றில் ஈடுபடுவதில்) விதிக்கப்பட்டுள்ள வரம்பை மீறுவதால் விளையும் (கேடுகளான இறைவனை மறத்தல், மார்க்கக் கடமைகளைப் புறக்கணித்தல் ஆகிய) தீமைகளுக்கு அஞ்சுவதும் (அவசியம்).

 முஹம்மத் இப்னு ஸியாத் அல் அல்ஹானீ (ரஹ்) அறிவித்தார்.

அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி), ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், ‘இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள்.

 

அத்தியாயம்: 41

(புகாரி: 2321)

بَابُ مَا يُحَذَّرُ مِنْ عَوَاقِبِ الِاشْتِغَالِ بِآلَةِ الزَّرْعِ، أَوْ مُجَاوَزَةِ الحَدِّ الَّذِي أُمِرَ بِهِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ الحِمْصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ الأَلْهَانِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ البَاهِلِيِّ، قَالَ: وَرَأَى سِكَّةً وَشَيْئًا مِنْ آلَةِ الحَرْثِ، فَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

«لاَ يَدْخُلُ هَذَا بَيْتَ قَوْمٍ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ الذُّلَّ»، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «وَاسْمُ أَبِي أُمَامَةَ صُدَيُّ بْنُ عَجْلاَنَ»


Bukhari-Tamil-2321.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-2321.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  1. இதன் அறிவிப்பாளர் தொடரில் எந்த குறையும் இல்லை.
  2. எனினும், இந்த ஹதீஸின் கருத்து, குர்ஆனுக்கும், இஸ்லாமிய அடிப்படைகளுக்கும் முரணாக உள்ளது.

கூடுதல் தகவல் பார்க்க: ஏர் கலப்பை பழிப்பிற்கு உரியதா? , விவசாயம் செய்தால் இழிவு வருமா? .

  1. மாற்றுக்கருத்து உடையவர்கள் விளக்கத்தை முழுமையாக படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை (1) கண்ணியமான முறையில், (2) ஆதாரத்துடன், (3) சுருக்கமாக பதிவு செய்யவும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-2321 , அல்முஃஜமுல் கபீர்-7519 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8921 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.