‘நபி (ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள்.
பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி (ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது’ என மைமூனா (ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 5
(புகாரி: 249)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ
«تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وُضُوءهُ لِلصَّلاَةِ، غَيْرَ رِجْلَيْهِ، وَغَسَلَ فَرْجَهُ وَمَا أَصَابَهُ مِنَ الأَذَى، ثُمَّ أَفَاضَ عَلَيْهِ المَاءَ، ثُمَّ نَحَّى رِجْلَيْهِ، فَغَسَلَهُمَا، هَذِهِ غُسْلُهُ مِنَ الجَنَابَةِ»
Bukhari-Tamil-249.
Bukhari-TamilMisc-249.
Bukhari-Shamila-249.
Bukhari-Alamiah-241.
Bukhari-JawamiulKalim-243.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . முஹம்மத் பின் யூஸுஃப்-ஃபர்யாபீ
3 . ஸுஃப்யான் ஸவ்ரீ-ஸுஃப்யான் பின் ஸயீத்
4 . அஃமஷ்-ஸுலைமான் பின் மிஹ்ரான்
5 . ஸாலிம் ராஃபிஃஹ்-பின் அபுல் ஜஃத்
6 . குரைப் பின் அபூமுஸ்லிம்-அல்குரஷீ
7 . இப்னு அப்பாஸ் (ரலி)-அப்துல்லாஹ் பின் அப்பாஸ்
8 . மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி)-அல்ஹிலாலிய்யா
சமீப விமர்சனங்கள்