தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2517

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 49

அடிமையை விடுதலை செய்தல்.

பாடம் : 1

அடிமையை விடுதலை செய்வதும் அதன் சிறப்பும்.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நன்மை, தீமையின்) தெளிவான இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டி விட்டோம். ஆயினும், அவன் கடினமான மலைப்பாதையை (நன்மையின் பாதையைக்) கடந்து செல்ல(த் துணிய)வில்லை. கடினமான அந்த மலைப்பாதை எதுவென்று உமக்குத் தெரியுமா? (அதுதான்) ஒருவரை அடிமைத் தளை’ லிருந்து விடுவிப்பதாகும்; அல்லது பட்டினி கிடக்கும் நாளில் உறவினரான அநாதைக்கோ அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கோ உணவளிப்பதாகும். (அல்குர்ஆன் 90:10-17)

அலீ இப்னு ஹுஸைன் (ரஹ்) அவர்களின் தோழரான ஸயீத் இப்னு மர்ஜானா (ரஹ்) கூறியதாவது:

‘ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை விடுதலை செய்கிறவரை (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவருடைய) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்றுவான்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என என்னிடம் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.

உடனே நான், இந்த நபிமொழியை அலீ இப்னு ஹுஸைன் (ரஹ்) அவர்களிடம் கொண்டு சென்றேன். இதைக்கேட்ட அன்னார் தம் அடிமை ஒருவரை விடுதலை செய்ய விரும்பினார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் (ரலி) பத்தாயிரம் திர்ஹம்களையோ ஆயிரம் தீனாரையோ அன்னாரிடம் கொடுத்திருந்தார்கள். அவ்வாறிருந்தும. (அந்தப் பணத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு) அந்த அடிமையே அன்னார் விடுதலை செய்துவிட்டார்கள்.

அத்தியாயம்: 49

(புகாரி: 2517)

49 – كِتَاب العِتْقِ

بَابٌ فِي العِتْقِ وَفَضْلِهِ

وَقَوْلِهِ تَعَالَى: {فَكُّ رَقَبَةٍ، أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ، يَتِيمًا ذَا مَقْرَبَةٍ} [البلد: 14]

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنِي وَاقِدُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ مَرْجَانَةَ – صَاحِبُ عَلِيِّ بْنِ حُسَيْنٍ – قَالَ:

قَالَ لِي أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَيُّمَا رَجُلٍ أَعْتَقَ امْرَأً مُسْلِمًا، اسْتَنْقَذَ اللَّهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنْهُ مِنَ النَّارِ» قَالَ سَعِيدُ بْنُ مَرْجَانَةَ: «فَانْطَلَقْتُ بِهِ إِلَى عَلِيِّ بْنِ حُسَيْنٍ، فَعَمَدَ عَلِيُّ بْنُ حُسَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا إِلَى عَبْدٍ لَهُ قَدْ أَعْطَاهُ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ عَشَرَةَ آلاَفِ دِرْهَمٍ أَوْ أَلْفَ دِينَارٍ، فَأَعْتَقَهُ»


Bukhari-Tamil-2517.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-2517.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸயீத் பின் மர்ஜானா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-9441 , 9540 , 95419562 , 9773 , 10801 , புகாரி-2517 , 6715 , முஸ்லிம்-3025 , 3026 , 3027 , 3028 , திர்மிதீ-1541 , …

  • இப்னு வஹ்ப்…—> நாபில் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-724 , இப்னு ஹிப்பான்-4308 ,

  • அத்தாஃப் பின் காலித்… —> ஸுலைமான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-8066 , அல்முஃஜமுல் அவ்ஸத்-4655 ,

2 . வாஸிலா பின் அஸ்கஉ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-3964 .

3 . கஅப் பின் முர்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1634 .

4 . அம்ர் பின் அபஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-3965 .

……

இந்தக் கருத்துடன் தொடர்புடைய ஹதீஸ்கள் அதிகமாக இருப்பதால் இன்ஷா அல்லாஹ் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.