தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2659

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 ஆண் அடிமைகள் மற்றும் பெண் அடிமைகளின் சாட்சியம்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அடிமையின் சாட்சியம், அவன் நேர்மையானவனாக இருந்தால் செல்லுபடியாகும். நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்களும், ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்களும், அடிமையின் சாட்சியம் செல்லும் என்று கூறினார்கள்.

அடிமையின் சாட்சியம் (எல்லா விஷயங்களிலும்) செல்லுபடியாகும்;அடிமை, தன் எஜமானுக்கு சாதகமாக அளிக்கும் சாட்சியத்தைத் தவிர என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அற்பமான, சாதாரண விஷயங்களில் மட்டும் அடிமையின் சாட்சியம் செல்லுபடியாகும் என்று ஹஸன் (ரஹ்) அவர்களும், இப்ராஹீம் நகயீ (ரஹ்) அவர்களும் கூறுகிறார்கள். (தமது கருத்தை நியாயப்படுத்தும் விதத்தில்) நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்கள், நீங்கள் ஒவ்வொருவரும் ஆண் அடிமைகள் மற்றும் பெண் அடிமைகளின் மக்களே என்று கூறினார்கள்.

 உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

நான் உம்மு யஹ்யா பின்த்து அபீ இஹாபை மணந்தேன். ஒரு கருப்பு நிற அடிமைப் பெண் வந்து, ‘நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும் உன் மனைவிக்கும்) பாலூட்டியிருக்கிறேன்.’ என்று கூறினாள். இச்செய்தியை நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (முகம் திருப்பி) என்னை அலட்சியம் செய்தார்கள்.

நான் (என் இருப்பிடத்திலிருந்து விலகி (அவர்களின் முகம் இருக்கும் பக்கம்) சென்று அவர்களிடம் அதை (திரும்பக்) கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவள் உங்கள் இருவருக்கும் பாலூட்டியிருப்பதாக வாதிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் எப்படி (நீங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ முடியும்)?’ என்று கேட்டார்கள்; என்னை அவளுடன் சேர்ந்து வாழக் கூடாதென்று விலக்கினார்கள்.
Book : 52

(புகாரி: 2659)

بَابُ شَهَادَةِ الإِمَاءِ وَالعَبِيدِ

وَقَالَ أَنَسٌ: «شَهَادَةُ العَبْدِ جَائِزَةٌ إِذَا كَانَ عَدْلًا» وَأَجَازَهُ شُرَيْحٌ، وَزُرَارَةُ بْنُ أَوْفَى وَقَالَ ابْنُ سِيرِينَ: «شَهَادَتُهُ جَائِزَةٌ إِلَّا العَبْدَ لِسَيِّدِهِ» وَأَجَازَهُ الحَسَنُ، وَإِبْرَاهِيمُ فِي الشَّيْءِ التَّافِهِ وَقَالَ شُرَيْحٌ: «كُلُّكُمْ بَنُو عَبِيدٍ وَإِمَاءٍ»

حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الحَارِثِ، ح وحَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ، قَالَ: حَدَّثَنِي عُقْبَةُ بْنُ الحَارِثِ، أَوْ سَمِعْتُهُ مِنْهُ

أَنَّهُ تَزَوَّجَ أُمَّ يَحْيَى بِنْتَ أَبِي إِهَابٍ، قَالَ: فَجَاءَتْ أَمَةٌ سَوْدَاءُ، فَقَالَتْ: قَدْ أَرْضَعْتُكُمَا، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَعْرَضَ عَنِّي، قَالَ: فَتَنَحَّيْتُ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، قَالَ: «وَكَيْفَ وَقَدْ زَعَمَتْ أَنْ قَدْ أَرْضَعَتْكُمَا» فَنَهَاهُ عَنْهَا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.