பாடம் : 29 இணைவைப்போர் சாட்சியம், முதலான காரியங்களுக்கு அழைக்கப்பட மாட்டார்கள்.
பிற சமுதாயங்களிடையே ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர், மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக சாட்சியம் கூறினால் அது செல்லுபடி யாகாது; ஏனெனில், அல்லாஹு தஆலா, நாம் அவர்களுக்கிடையே மறுமை நாள் வரை விரோதத்தையும், பொறாமையையும் விதைத்து விட்டோம்(5:14) என்று கூறுகிறான் என ஷஅபீ (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வேதக்காரர்களை உண்மைப்படுத்தவும் வேண்டாம்; பொய்ப்பிக்கவும் வேண்டாம். நாங்கள் அல்லாஹ்வையும், அவனால் அருளப் பெற்ற வேதங்களையும் நம்புகிறோம் என்று மட்டும் கூறுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
முஸ்லிம்களே! இறைவனின் தூதர்(ஸல்) அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட உங்கள் வேதம் (குர்ஆன்) இறைவனின் செய்திகளில் மிகவும் புதியதாக இருக்க, அதை நீங்கள் (மனிதக் கருத்துகள்) கலக்கப்படாத நிலையில் ஓதிக் கொண்டிருக்க, நீங்கள் வேதக்காரர்களிடம் எப்படி (வேதங்களின் விபரங்களைக்) கேட்கிறீர்கள்?
வேதக்காரர்கள் அல்லாஹ் எழுதியதை மாற்றிவிட்டார்கள். தங்கள் கைகளால் இறைவேதத்தை மாற்றிவிட்டு – (திருக்குர்ஆன் விவரிப்பது போல்) ‘அதன் மூலம் சொற்ப விலையை வாங்கிக் கொள்வதற்காக, இது அல்லாஹ்விடமிருந்து வந்தது’ – என்று கூறினார்கள். (அல்லாஹ்விடமிருந்து) உங்களுக்கு வந்துள்ள அறிவு ஞானம் (இறைவேதமான திருக்குர்ஆன்) உங்களை அவர்களிடம் கேட்பதிலிருந்து தடுக்கவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! வேதக்காரர்களில் ஒருவரையும் உங்களின் மீது அருளப்பட்டதை (திருக்குர்ஆனைப்) பற்றிக் கேட்பவராக நான் கண்டதேயில்லையே. என உபைதுல்லாஹ் இப்னு உத்பா(ரஹ்) அறிவித்தார்.
Book : 52
بَابُ لاَ يُسْأَلُ أَهْلُ الشِّرْكِ عَنِ الشَّهَادَةِ وَغَيْرِهَا
وَقَالَ الشَّعْبِيُّ: «لاَ تَجُوزُ شَهَادَةُ أَهْلِ المِلَلِ بَعْضِهِمْ عَلَى بَعْضٍ، لِقَوْلِهِ تَعَالَى»: {فَأَغْرَيْنَا بَيْنَهُمُ العَدَاوَةَ وَالبَغْضَاءَ} [المائدة: 14]
وَقَالَ أَبُو هُرَيْرَةَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لاَ تُصَدِّقُوا أَهْلَ الكِتَابِ وَلاَ تُكَذِّبُوهُمْ، وَقُولُوا: {آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ} [البقرة: 136] الآيَةَ
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
يَا مَعْشَرَ المُسْلِمِينَ، كَيْفَ تَسْأَلُونَ أَهْلَ الكِتَابِ، وَكِتَابُكُمُ الَّذِي أُنْزِلَ عَلَى نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْدَثُ الأَخْبَارِ بِاللَّهِ، تَقْرَءُونَهُ لَمْ يُشَبْ، وَقَدْ حَدَّثَكُمُ اللَّهُ أَنَّ أَهْلَ الكِتَابِ بَدَّلُوا مَا كَتَبَ اللَّهُ وَغَيَّرُوا بِأَيْدِيهِمُ الكِتَابَ، فَقَالُوا: هُوَ مِنْ عِنْدِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا، أَفَلاَ يَنْهَاكُمْ مَا جَاءَكُمْ مِنَ العِلْمِ عَنْ مُسَاءَلَتِهِمْ، وَلاَ وَاللَّهِ مَا رَأَيْنَا مِنْهُمْ رَجُلًا قَطُّ يَسْأَلُكُمْ عَنِ الَّذِي أُنْزِلَ عَلَيْكُمْ
சமீப விமர்சனங்கள்