பாடம் : 20 சலாமைப் பரப்புவதும் இஸ்லாத்தின் ஓர் அம்சமே.
அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: தார்மீக நேர்மையுடன் நடப்பது; உலகெங்கிலும் சலாமைப் பரப்புவது; வறுமை வயப்பட்டிருக்க (நல்வழியில்) செலவளிப்பது ஆகிய முப்பண்புகளை எவர் (தம்மிடம்) ஒருங்கே அமைத்துக் கொண்டாரோ அவர் நிச்சயமாக ஈமானையே (தம்மிடம்) ஒருங்கே அமைத்துக் கொண்டவராவார்.
‘ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது?’ என்று கேட்டார். ‘நீர் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Book : 2
بَابٌ: إِفْشَاءُ السَّلاَمِ مِنَ الإِسْلاَمِ
وقَالَ عَمَّارٌ: “ثَلاَثٌ مَنْ جَمَعَهُنَّ فَقَدْ جَمَعَ الإِيمَانَ: الإِنْصَافُ مِنْ نَفْسِكَ، وَبَذْلُ السَّلاَمِ لِلْعَالَمِ، وَالإِنْفَاقُ مِنَ الإِقْتَارِ”
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو
أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الإِسْلاَمِ خَيْرٌ؟ قَالَ: «تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ»
சமீப விமர்சனங்கள்