தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2814

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று நினைத்து விடாதீர்கள் என்று தொடங்கும் இறைவசன(ம் குறிப்பிடும் தியாகக் கூட்ட)த்தின் சிறப்பு.

அந்த இறைவசனம் (முழுவதும்) வருமாறு:

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று கருதாதீர்கள். எனினும்,அவர்கள் உயிரானவர்களே. தங்கள் இறைவனிடம் அவர்கள் உணவு பெற்று வருகிறார்கள். தங்களுக்கு அல்லாஹ், தன் அருளிலிருந்து வழங்கியதை வைத்து மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள்.

தங்களுக்குப் பின்னால் (உலகில் வாழ்ந்து கொண்டு) இருக்கின்ற, தம்முடன் இன்னும் வந்து சேராமலிருப்பவர்களைக் குறித்து…… அவர்களுக்கு எந்த அச்சமுமில்லை; அவர்கள் கவலைப் படவும் போவதில்லை என்று….. மன நிம்மதி கொள்கிறார்கள். அல்லாஹ் விடமிருந்து கிடைக்கும் கொடையினாலும், அருளினாலும் மனமகிழ்ச்சி யுடன் இருக்கின்றார்கள். அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களின் நன்மையை வீணாக்கி விடுவதில்லை (என்றும் நிம்மதி கொள்கிறார்கள்). (3:169-171)

 அனஸ்(ரலி) அறிவித்தார்.

‘பிஃரு மஊனா’ (என்னுமிடத்தில் பிரசாரத்திற்காகச் சென்ற தம்) தோழர்களைக் கொன்றவர்களுக்குத் தீங்கு நேர அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த (பனூ சுலைம் கோத்திரத்தைச் சேர்ந்த) ரிஅல், தக்வான் மற்றும் உஸய்யா ஆகிய குலத்தினருக்குக் கேடு நேர – இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முப்பது காலை (தொழுகை) நேரங்களில் பிரார்த்தித்தார்கள்.

பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்களின் விஷயத்தில் குர்ஆன் வசனம் ஒன்று அருளப்பட்டது. அதை நாங்கள் ஓதி வந்தோம்; பின்னாளில் அது (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. ‘நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று நேர்ந்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்துவிட்டான்; நாங்கள் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம்’ என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்’ என்பதே அந்த வசனம்.
Book : 56

(புகாரி: 2814)

بَابُ فَضْلِ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ، فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ، وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ، أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ، يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ، وَأَنَّ اللَّهَ لاَ يُضِيعُ أَجْرَ المُؤْمِنِينَ} [آل عمران: 170]

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

«دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الَّذِينَ قَتَلُوا أَصْحَابَ بِئْرِ مَعُونَةَ ثَلاَثِينَ غَدَاةً، عَلَى رِعْلٍ، وَذَكْوَانَ، وَعُصَيَّةَ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ»، قَالَ أَنَسٌ: «أُنْزِلَ فِي الَّذِينَ قُتِلُوا بِبِئْرِ مَعُونَةَ قُرْآنٌ قَرَأْنَاهُ، ثُمَّ نُسِخَ بَعْدُ بَلِّغُوا قَوْمَنَا أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا، فَرَضِيَ عَنَّا وَرَضِينَا عَنْهُ»





மேலும் பார்க்க: புகாரி-1001 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.