பாடம் : 36 அல்லாஹ்வின் பாதையில் நோன்பு நோற்பதின் சிறப்பு.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவழியில் (அறப் போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book : 56
بَابُ فَضْلِ الصَّوْمِ فِي سَبِيلِ اللَّهِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، وَسُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، أَنَّهُمَا سَمِعَا النُّعْمَانَ بْنَ أَبِي عَيَّاشٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ، بَعَّدَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا»
Buhari 2840
இந்த நபிமொழி யில் அறப்போருக்கு செல்லும்போது என்று சேர்த்திருப்பதின் காரணம் என்ன?
அஸ்ஸலாமு அலைக்கும்.
இது பற்றி இப்னு ஹஜர் அவர்களின் விளக்கம்:
ஃபீ ஸபீலில்லாஹ் என்றால் அல்லாஹ்வின் பாதையில் என்று பொருளாகும். இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் ஃபீ ஸபீலில்லாஹ் என்று வரும் போது அதன் கருத்து ஜிஹாத்-அறப்போர் என்ற பொருள் என கூறியுள்ளார்.
இப்னு தகீகில் ஈத் அவர்கள் இந்த வார்த்தை ஜிஹாத்-அறப்போர் என்ற பொருளில் பயன்படுத்துவதே அதிகமான நடைமுறை என குறிப்பிடுகிறார்.
வேறு சில அறிவிப்பாளர்தொடர்களில் இந்த கருத்து உள்ளது என இப்னு ஹஜர் அவர்கள் தனது ஃபத்ஹுல் பாரீ யில் இந்த ஹதீஸின் விளக்கவுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.