தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2977

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 122 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மாத காலப் பயணத் தொலைவுக்கு(ள் இருக்கும் நிராகரிப்பாளர்களின் உள்ளங்களில் என்னைக் குறித்த) அச்ச உணர்வை விதைத்து அல்லாஹ் எனக்கு உதவி புரிந்துள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான்: (சத்தியத்தை) நிராகரித்தவர்களின் உள்ளங்களில் விரைவில் நாம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவோம். ஏனெனில், (இறைவனுக்கு இணையானவை என்று நிரூபிக்கும்) எந்த ஆதாரத்தையும் எவற்றுக்கு அல்லாஹ் தரவில்லையோ அவற்றை அவனுடன் அவர்கள் இணையாக்கி விட்டார்கள். (3:151)

ஜாபிர் (ரலி) அவர்கள் (இதுபற்றி) நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித் துள்ளார்கள்.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒருங்கிணைந்த (பொருள்களைத் தரும்) சொற்களுடன் அனுப்பப்பட்டுள்ளேன். (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் விதைக்கப்பட்டு எனக்கு உதவப்பட்டுள்ளது. (ஒருமுறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய சாவிகள் கொண்டு வரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன.

இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு, ‘நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை (தோண்டி) வெளியே எடுத்து (அனுபவித்துக்) கொண்டிருக்கிறீர்கள்’ என்றார்கள்.
Book : 56

(புகாரி: 2977)

بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ»

وَقَوْلِهِ جَلَّ وَعَزَّ: {سَنُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُوا الرُّعْبَ بِمَا أَشْرَكُوا بِاللَّهِ} [آل عمران: 151] قَالَهُ جَابِرٌ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«بُعِثْتُ بِجَوَامِعِ الكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، فَبَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ، فَوُضِعَتْ فِي يَدِي» قَالَ أَبُو هُرَيْرَةَ: وَقَدْ ذَهَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنْتُمْ تَنْتَثِلُونَهَا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.